Last Updated : 19 Dec, 2014 04:14 PM

 

Published : 19 Dec 2014 04:14 PM
Last Updated : 19 Dec 2014 04:14 PM

வாட்ஸ் அப்பால் பிரச்சினை?

இன்றைய யூத்தின் ஹாட் ஸ்டேட்மென்ட் ‘வாட்ஸ் அப் ட்யூட்’. ஆடியோ, வீடியோ, இமேஜ், ஸ்டிக்கர், ஸ்மைலி இப்படி எக்கச்சக்கமான விஷயங்களை ஜிபூம்பா போல வாட்ஸ் அப் மூலம் பரிமாறிக்கொள்கிறார்கள்.

ஆனால் இரண்டு வருஷங்களுக்கு தகவல் தொடர்புக்குப் பயன்படுத்தப்பட்டது ‘எஸ்எம்எஸ்’தான். ‘டெக்ஸ்ட் பண்ணு’ என இளைஞர்கள் தங்களுக்குள் சொல்லிக் கொள்வார்கள். ஆனால் அந்த எஸ்எம்எஸ் இன்றைக்கு என்ன ஆச்சு? சென்னைக் கிறிஸ்துவக் கல்லூரி மாணவர்களோடு ஒரு ஜாலி சாட்.

மெசேஜா..? அப்படினா என்ன?

‘ஹைக் மெசஞ்சர்’, ‘வாட்ஸ் அப்’ பற்றிப் பேசிக் கொண்டிருந்த ஒரு காலேஜ் கேங்கிடம் கேள்விகளைத் தொடுத்தோம். கேட்ட உடனே ரமணி முந்திக்கொண்டு, “நான் ஒரு நாள் வாட்ஸ் அப் போகாவிட்டால் அன்றைய நாளே போர் அடித்து விடும். எனக்குப் பிடிக்காதவர்களைத் திட்ட வேண்டுமானாலும் வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸாகப் போட்டு என் கோபத்தைத் தீர்த்துக் கொள்வேன்” எனச் சிரித்துக்கொண்டே சொல்கிறார். மேலும் “மெசேஜ் பேக் போட்டால் வேஸ்ட்தான். மெசேஜ் பேக் போடும் பணத்தில் நான் ஒரு வாரத்துக்கு பாப்கார்ன் வாங்கிச் சாப்பிடுவேன்” எனப் பக்கத்தில் உள்ள நண்பர்களைப் பார்த்துக் சைகை காட்டுகிறார்.

அடுத்து பிரியாவிடம் எஸ்எம்எஸ் பற்றி கேட்டால், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் விஜய் சேதுபதி மாதிரி முழிக்கிறார், “ எஸ்எம்எஸ்ஸா? அப்படீனா? முன்னாடியெல்லாம் ஒரு மாதம் மெசேஜ் செய்தால் அன்லிமிட்டடாக இருந்தது. ஆனால் இப்ப ரொம்ப லிமிட்டட் ஆஃபர்தான் இருக்கு. அதுவும் பண்டிகை நாள்ளே முதல் மெசேஜுக்கு 1 ரூபாய் பிடிக்கிறாங்க. ஆனால் வாட்ஸ் அப்பில் இந்த தொல்லையெல்லாம் கிடையாது. எவ்வளவு மெசேஜ் வேண்டுமானாலும் அனுப்பிக் கொள்ளலாம் முக்கியமா பாய் ஃபிரண்ட்கூட எவ்வளவு வேண்டுமானாலும் பேசிக் கொள்ளலாம்” என கன்னாபின்னா என வாட்ஸ் அப்க்குக் கொடி பிடிக்கிறார் பிரியா.

ஹைக்கும் மெசேஜே!

“வீக் எண்டில் அவுட்டிங் போணும்னா குரூப்பில் பிரண்ட்ஸ் குரூப்ல டிஸ்கஸ் பண்ணிப்போம். இப்ப ‘ஹைக் மெசஞ்சர்’ இருக்கிறதால ஈஸியா மெசேஜ் பண்ணிக்க முடியுது” என டோரத்தி ‘ஹைக் மெசஞ்சரை’க் கொண்டாடுகிறார்.

கொஞ்சம் மதிங்க பாஸ்!

இந்த கேங்கில் ஒருவர் மட்டும் சோகமாக இருந்தார். கேள்வி கேட்ட உடனே ஓட ஆரம்பித்த அவரை நண்பர்கள் குண்டுக்கட்டாகப் பிடித்து வந்தார்கள். “யாரைப் பார்த்தாலும் வாட்ஸ் அப்ல இருக்கீங்களான்னு கேட்குறாங்க. இல்லைன்னு சொன்னா அவ்வளவுதான் பை சொல்லிடுவாங்க. பேசிக் போன்தான் வைச்சுருக்கேன். வாட்ஸ் அப் இல்லாததால் ஃபிரண்ட்ஸோடு டச்ல இருக்க முடியல. ப்ரெண்ட்ஸ் சர்க்கிள்ல நான் மட்டும்தான் வாட்ஸ் அப்பில் இல்லை. வெறுப்பேத்தனுன்னே ‘மச்சி நான் வாட்ஸ் அப் பண்ணுறேன் ’ என்று சொல்லி கிண்டல் செய்வார்கள். வாட்ஸ் அப் இல்லாதவர்களையும் கொஞ்சம் மதிங்க பாஸ்” எனப் புலம்பித் தள்ளுகிறார் சஞ்சீவ்.

வாட்ஸ் அப்பில் என்ன பிரச்சினை?

கமலேஷ்க்கு வாட்ஸ் அப்பால் பிரச்சினை. என்ன பிரச்சினை என்றால், “நான் வாட்ஸ் அப் யூஸ் பண்ணி இப்போ விட்டுட்டேன். ஏன்னா வாட்ஸ் அப்பில் நண்பர்கள் அனுப்பும் மெசேஜை நான் பார்த்துவிட்டால் அவுங்களுக்கு ப்ளூ கலர்ல இரண்டு டிக் வந்து விடுகிறது. அதனால நான் அந்த மெசேஜ பார்த்தும் பதில் அனுப்பலைன்னு செம காண்டாகி கால் பண்ணி கன்னாபின்னானு திட்டுவாங்க. சில பேரு பேசுறதயே நிறுத்திடுவாங்க. அதனால எதுக்குப் பிரச்சனைன்னு விட்டுட்டேன்” என்கிறார் கமலேஷ். அட! ஜஸ்ட் ஜாலி மேட்டர்னு நினைச்ச வாட்ஸ் அப்பில் இத்தனை காரசாரமான விஷயங்களா?

புகைப்படங்கள்: ஆனந்த் ராம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x