Last Updated : 21 Nov, 2014 12:44 PM

 

Published : 21 Nov 2014 12:44 PM
Last Updated : 21 Nov 2014 12:44 PM

எங்க ஏரியா உள்ள வராத

நம்ம குமாரு தாமிரபரணி தண்ணீ குடிச்சு வளர்ந்தவன். தாமிபரணினா என்னா தர்மபுரினா என்னா? எந்த ஊரு தண்ணீ குடிச்சு வளர்ந்தாலும் அல்லாரும் ஒருதபா செம்பரம்பாக்கம் தண்ணீ குடிச்சு சென்னைல வாழணும்ல? குமாரும் பொழப்பு தேடி வந்தான். கலாய்க்கிறதுல திருநெல்வேலி பிஎச்டி பண்ணியிருந்தாலும் அந்த சர்டிபிகேட் மெட்ராஸ்ல ஒண்ணுமில்ல.

எல்லா பிஸ்கோத்து. மெட்ராஸ்ல வந்து ஒரே பல்புகளா வாங்கிக் குவிச்சான். “தோடா குமாரு இத வலி” அப்டினு சொன்னா, “இன்னா? இன்னா?” அப்டினு கேட்டுக்கினே இருப்பான். “வலின்னா இன்னா?” அப்டினு பல்புகளா ஹோல்ஸ்சேல்ல வாங்கிப் பீஸாக்குவான். “இன்னாபா இதுகூட தெர்யாம கொழ்ந்த மாதிரி க்கோஸ்டின் பண்ணிகின்னே இருக்க. வலின்னா அத்த பிடிச்சு இழுன்னு மீனிங்பா” குமாருக்கு இப்ப இம்மிடியட்டா ஒரு டிக்‌ஷனரி வேணும். இன்னா பண்ண...

மெட்ராஸ் பாஷை ஒரு டிபிகல் லாங்வேஜ். சரி பீட்டர் வுடாம மேட்டர்க்கு வாரேன். இப்பா பாத்தீங்கோன்னா, “அழைத்துக்கொண்டு போகிறேன்” அப்டினு தமிழ்ல சும்மா லெங்க்தா சொல்றத, “இஸ்திகினு போறேன்” அப்டினு ஷாட் அண்ட் ஸ்வீட்டா மெட்ராஸ் பாஷைல சொல்லிறலாம். இன்னாயின்னா ஸ்பெஷல் வேர்ட்ஸ் மெட்ராஸ் பாஷைல இருக்குன்னு ஒரு லெங்க்த் டேபிள் போடலாம். இந்த வேர்ட்ஸ் வேற எந்த ஊர் பாஷையிலயும் இருக்காதுபா. இந்த மாதிரி வேர்ட்ஸ் எல்லாம் எங்க, யாருப்பா கண்டுபிடிச்சது? அப்படினு செமயான க்கொஸ்டின் பண்றான் நம்ம குமாரு. “ஏய் கொக்கி குமாரு கைல இத சொன்னா அவ்ளோதான் பீஸாயிருவே நீ” குமாரு அடக்கி வாசி. ஐ ஒன்லி டெல்லிங் ஓகே...

நார்த் மெட்ராஸ்தாம்பா அந்த வேர்ட்ஸ் எல்லாத்தோட பெர்த் ப்ளேஸ். அங்க இருக்கிற ரிக்‌ஷாக்காரங்க, லோடுமேன்ஸ் இவுங்க எல்லாம்தான் இந்த பாஷையோட மதர்ஸ். நாம எல்லாம் அதோட பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ். மெட்ராஸ்ல எல்லா நாட்டுக்காரங்களும் வந்து குந்திகினு இருந்தாங்க. அப்பாலதான் காந்தி ப்ரீடம் வாங்கிக் கொட்தாரு. அதால அல்லா நாட்டுக்காரங்க பாஷையும் மெட்ராஸ் பாஷைல இருக்கு. ரிக்‌ஷாக்காரங்க, லோடுமென்ஸ் அல்லாரும் பிரிட்டிஷ்காரங்களோட ரிலேஷன்ஷிப் வச்சிருந்தாங்க. அவுங்களான்ட பேசி, பேசி இங்கிலீஷ் கத்துகினு, நம்ம தமிழ்ல மிக்ஸ் பண்ணி அடிச்சு வுட்டாங்க.

இங்கிலீஷ் ஒன்லி இல்லாம உருது, இந்தி, தெலுங்கு, போர்ச்சுகல் அப்டினு பல பாஷைகல கலந்து அடிச்சாங்க. இன்னாதான் பேசுனாலும் மெட்ராஸ் பாஷை மாதிரி ஒரு சாடிஸ்பேக்‌ஷன் இல்லபா. நாஸ்தா இன்னா கால டிபன். சந்தோஷம்னா குஜால். பயம்ன்னா மெர்சல். தவளூத்துன்னா தைரியம். ஏரியா கலீஜ்ன்னா ஏரியா கிளீனா இல்ல. ஆளு செம கில்லின்னா அவன் ரொம்ப டேலண்ட் அப்டினு மீனிங்ஸ்.

இன்னாபா இப்டி அதர் லாங்வேஜ் மிக்ஸ் பண்றது சரியில்லப்பான்னு நம்ம குமாரு சொல்றான். இதோ பாரு குமாரு கட்சியா சொல்றேன், “ஏரியா நம்ளுது நீ இன்னாத்துக்கு இங்க வரே?”

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x