Published : 22 Aug 2014 10:00 AM
Last Updated : 22 Aug 2014 10:00 AM

அசத்தும் அப்பாடக்கர்கள்

சிட்டிஸன்கள் அனைவரும் நெட்டிஸன்கள் இல்ல. ஆனா நெட்டிஸன்கள் அனைவரும் சிட்டிஸன்கள். காம்படிடிவ் எக்ஸாமில் கேட்கப்படும் ரீஸனிங் கொஸ்டினில் உள்ள ஸ்டேட்மெண்ட் மாதிரி இருக்கிறதா? இப்போதைக்கு சினிமாக்காரங்களையும் இலக்கிய வாதிகளையும் கலக்குற ஆளுங்க இந்த நெட்டிஸன்கள்தான். பத்திரி கைகளுக்கு ஈடாக படு சுறுசுறுப்பா களத்தில இறங்கி பட்டயக் கிளப்புறவங்க இவங்கதான்.

ஒரு படம் ரிலீஸாச்சுன்னா பத்திரிகை விமர்சனம்கூட ரெண்டு மூணு நாள் கழிச்சுதான் வெளிவரும். ஆனா நம்ம நெட்டிசன்கள் இருக்காங்களே படு கில்லாடிங்க. பத்தே நிமிஷத்துல படத்தின் ஜட்ஜ்மெண்ட எழுதிடறாங்க. கையில மொபைலோட தியேட்டருக்குள்ள போறாங்க.

பொறுமையை எருமை மாட்டு சாணத்துல வச்சி எங்கேயோ தூர கடாசிடறாங்க. பத்தே நிமிஷம்தான். படம் சரியில்லயா, கண்களப் பெரிய திரையிலிருந்து கையகலத் திரைக்கு நகர்த்திட்றாங்க. விரல் நுனியில் வேலையைக் காட்டிடறாங்க. சும்மா மின்னல் வேகத்துல ட்விட்டரில் ஆரம்பிக்கிற இவங்களோட லொள்ளு ஃபேஸ்புக், கூகுள் ப்ளஸ், ப்ளாக் போன்ற இண்டெர்நெட்டின் அத்தனைப் பக்கங்களிலும் கரை புரண்டு ஓடும். அதில் மாட்டிக்கிட்டவங்க கதி அவ்ளோதான்.

இலக்கியவாதிங்களயும் சும்மா வூடு கட்டி அடிக்கிறாங்க இந்த நெட்டிஸன்கள். யாராவது சீரியஸா எதையாவது சொல்லிட்டா போச்சு, துடிப்போட இவங்க போடுற ஒவ்வொரு கமெண்டும் எமகாதகம்.

இவங்களோட விமர்சனத்த நினைச்சாலே சினிமாக்காரங்க அடிவயித்துல டைம்பாம் டிக் டிக்ன்னு ஓட ஆரம்பிச்சிருது. இரக்கமே இல்லாம ஒரே அடியா போட்டுத் தாக்குறது அவங்களோட ஸ்பெஷல் ஆபீஸ் ரூம் டிரீட்மெண்ட். அப்படித்தான் சமீபத்தில் தைரியசாலியா களம் இறங்கிய பயப்படாதவன் ஒருத்தன ஓட ஓட விரட்டினாங்க. இவங்க கழுவி ஊத்துற ஸ்டைல பார்க்கும்போது, கழுவில் ஏற்றுவது எவ்வளவோ மேல்னு தோணும். இந்த நெட்டிஸன்கள் சொல்ற உண்மையால பாதிக்கப்பட்ட செண்டிமெண்ட் இயக்குநர் ஒருத்தர் ரத்தக் கண்ணீர் வடிச்ச கதையும் உண்டு.

இவங்கள பகைச்சுக்கவும் முடியாது பக்கத்துல வச்சுக்கவும் முடியாதுங்கிறதால சினிமாக்காரங்க பாவம் தவியாத் தவிக்கிறாங்க. ஏன்னா ஒரு படத்த காரணம் புரியாம தலையில தூக்கிவச்சு ஆடுவாங்க, அதே நேரம் இன்னொரு படத்துக்கு டண்டணக்கா டனக்குனக்கா பாடிடுவாங்க. இவங்களோட பாப்புலேஷன் ரொம்ப ஜாஸ்தியாயிட்டு வருது. அதனால் எந்த ரூட்டுலயும் போய் தப்பிக்க முடியாது. எல்லா சிக்னல்யும் இவங்க ஆளுங்க கையில் நெட் கனெக்‌ஷன் உள்ள மொபைலோட தயாரா நிப்பாங்க.

சமீபத்தில் ஒரு படம் சேது மாதிரி லேட் பிக்அப் ஆகும்னு இயக்குநர் சொன்னாரு. நம்மாளு, ஓடினாதான ரீச் ஆகன்னு கமெண்ட் போடுறார். என்ன செய்ய முடியும் சொல்லுங்க. இப்பவே கண்ணக் கட்டுதேன்னு யூ டர்ன் போட்டு போறத தவிர, வேறு வழியே இல்லாமப் பண்ற இவங்களோட ஸ்பெஷாலிட்டி. இவங்கள நாடு கடத்தவும் முடியாது. எந்த நாட்டுக்குப் போனாலும் கையில ஸ்மார்ட் போனும், மனசுல ஸ்மார்ட் கமெண்டும் இவங்கட்ட ரெடியா இருக்குமே.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x