Published : 01 Sep 2017 11:40 AM
Last Updated : 01 Sep 2017 11:40 AM

விளையாட்டு புதுசு: நீங்கள்தான் இனி தலைவர்!

கி

ரிக்கெட் போன்ற நட்சத்திர அந்தஸ்து கொண்ட விளையாட்டுக்கு வீரர்கள் எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு ரசிகர்களும் முக்கியம். இந்தக் கோணத்தில் கிரிக்கெட், கபடி, பாட்மிண்டன் உள்ளிட்ட விளையாட்டுகளின் ரசிகர்களை ஒரு புள்ளியில் இணைத்து அவர்களை அங்கீகரிக்கும் விதமாகத் தொடங்கப்பட்டதுதான் ஃபேன்டெயின் ஸ்போர்ட்ஸ் நிறுவனம்.

ரசிகர்களுக்கான ஆப்

விளையாட்டு அரங்கத்துக்குச் செல்வது அல்லது டி.வி.யில் பார்ப்பது மூலமாக மட்டுமே ரசிகர்கள் தங்களுக்குப் பிடித்தமான விளையாட்டுகளையும் விளையாட்டு வீரர்களையும் இதுவரை கண்டுகளித்தார்கள். அதிலிருந்து அடுத்த தளத்துக்கு ரசிகர்களைக் கொண்டுசெல்லும் முயற்சியை இந்நிறுவனம் முன்னெடுத்துள்ளது. இணையதளம், மொபைல் ஆப் மூலமாக எந்நேரமும் விளையாட்டுடனும் பிரியமான விளையாட்டு வீரர்களுடனும் ரசிகர்கள் இணக்கமாகத் தொடர்புகொள்ள டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது இந்நிறுவனம்.

“இப்போதெல்லாம் விளையாட்டு ரொம்பவே வியாபாரமயமாகிடுச்சு. இதனால ரசிகர்களும் விளையாட்டில் இருந்து அந்நியப்பட்டுகிட்டு இருக்காங்க. நானும் என்னுடைய நண்பர்களான ஆனந்த் ராமச்சந்திரனும் அரவிந்த் ராமச்சந்திரனும் ஒரே ஐ.டி. நிறுவனத்தில் 10 ஆண்டுகள் சேர்ந்து வேலைபார்த்த காலத்தில் கிரிக்கெட் வெறியர்களாக இருந்தோம். சேர்ந்தே நிறைய போட்டிகளைப் பார்த்திருக்கோம்.

ஆனால், அவங்க ரெண்டு பேருக்குமே வெளிநாட்டில் வேலை கிடைத்த பிறகு கிரிக்கெட் மீதான ஆர்வமும் காலப்போக்கில் குறைஞ்சிடுச்சு. ஒரு கட்டத்தில் நாங்க எவ்வளவு இழந்துகிட்டிருக்கோம்னு யோசிச்சோம். எங்களைப் போன்ற விளையாட்டு ரசிகர்களுக்காகவே ஏதாவது புதுசா பண்ணனும்னு முடிவெடுத்து 2013-ல் ஃபேன்டெயின் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தைப் புதுவிதமான ஸ்டார்ட் அப் நிறுவனமா சென்னையில தொடங்கினோம்” என்கிறார் இந்த நிறுவத்தின் தொழில்நுட்ப அதிகாரி விவேக் வேணுகோபால்.

ரசிப்பதற்குப் பரிசு

ரசிகர்களே விளையாட்டின் கேப்டன் என்பதுதான் ஃபேன்டெயின் மொபைல் ஆப்ஸின் கான்சப்ட். இந்த அடிப்படையில் இவர்கள் ஃபேன்டெயின் ஃபேன்டஸி (Fantain Fantasy), பிளே கால் (Play call) உள்ளிட்ட ஆப்களை உருவாக்கியிருக்கிறார்கள். பரபரப்பாகப் போட்டிகள் நடக்கும்போது இந்த ஆப்ஸ் பயனாளிகள் அந்த மேட்சில் பங்கேற்கும் விளையாட்டு வீரர்களில் பிடித்தமானவர்களைத் தேர்ந்தெடுத்து, தங்கள் அணியை உருவாக்கலாம்.

1CH_Fantainpage2right

களத்தில் ஆடும் விளையாட்டு வீரர்களின் ஸ்கோர்ஸுக்கு ஏற்றமாதிரி பயனாளிகளுக்குப் புள்ளிகள் தரப்படும். அதிகப் புள்ளிகள் வாங்குபவர்களுக்கு சினிமா டிக்கெட்டுகள் உட்படப் பல சிறப்புப் பரிசுகளைத் தருகிறார்கள் இவர்கள்.

நேரடியாக விளையாட்டில் பங்குபெறாமல் அவரவர் இஷ்டம்போல அணி திரட்டுவதில் ரசிகரின் பங்கேற்பு எந்தவிதத்தில் இருக்க முடியும் எனக் கேட்டால், “ஃபேன்டெயின் ஃபேன்டஸியைப் பொறுத்தவரை ரசிகர்கள்தான் தலைவர், துணை தலைவர், வீரர்கள் என அத்தனை பேரையும் தேர்வு செய்வார்கள். விளையாட்டை முழுவதுமாகப் புரிந்துகொள்ளாமலோ உணர்வுபூர்வமான ஈடுபாடில்லாமலோ அதைச் செய்ய முடியாது.

அதிலும் பிளே கால் ஆப்ஸில் ரசிகர்தான் அணியின் கேப்டனாக இருப்பார். ஓவர் முடிந்தால் அடுத்த பந்து வீச்சாளர் யார், யாரெல்லாம் ஃபீல்டிங் அல்லது பேட்டிங், யார் அடுத்த பேட்ஸ்மேன் என்பது உட்பட அத்தனை முடிவுகளையும் அவர்தான் எடுக்க வேண்டும். இந்த ஆப் கேமை விளையாடும் ரசிகரின் தேர்வும் விராட் கோலியின் தேர்வும் ஒத்துப்போனால் அவரே வெற்றியாளர்.

இந்த மாதிரி வெற்றி பெற்றவர்களுக்கு நிஜமான இந்திய கிரிக்கெட் அணியினர் கையெழுத்திட்ட பேட்டுகளைப் பரிசாக வழங்கியிருக்கிறோம். இதன் மூலம் நேரடியாக ரசிகர்களை அவர்களுக்குப் பிரியமான விளையாட்டு வீரர்கள் அருகில் கொண்டுசெல்கிறோம்” என்கிறார் விவேக்.

உங்களுடைய பிரியமான விளையாட்டுகள் மற்றும் விளையாட்டு வீரர்கள் தொடர்பான முக்கியச் செய்திகள், வீரர்களின் சிறப்புப் பேட்டிகள், ட்விட்டர் அப்டேட்ஸ், ஒளிப்பட கேலரி, மேட்சுகளின் அட்டவணை உட்பட அத்தனை செய்திகளையும் சுவாரசியமான வடிவிலும் வழங்கிக்கொண்டிருக்கிறது ஃபேன்டெயின் ஆப்பை உருவாக்கிய இந்த ஸ்டார்ட் அப்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x