Published : 16 Apr 2014 02:42 PM
Last Updated : 16 Apr 2014 02:42 PM

வண்ணத்துப் பூச்சி: நீண்ட தூரப் பயணம்!

* வண்ணத்துப் பூச்சிகள் பூச்சி வகையைச் சேர்ந்தவை.

* வண்ணத்துப் பூச்சியின் வாழ்க்கை நான்கு பருவங்களைக் கொண்டது. முட்டைப் பருவம், இளம் புழு பருவம், கூட்டுப்புழு பருவம், வண்ணத்துப் பூச்சி பருவம்.

* வண்ணத்துப் பூச்சிகள் தங்கள் முட்டைகளை உடலில் இருந்து வெளிவரும் பசையால் செடிகளில் ஒட்டச் செய்யும்.

* புழுவாக இருக்கும் பருவத்தில் தாவரங்களைச் சாப்பிடும்.

* முழுமையாக வளர்ந்த புழு, தனது மேல் தோலை உரிக்கும் முன்பு மரக்கிளை அல்லது இலையில் ஒட்டி வாழும். மேல் தோல் உரிந்த நிலையில் அதற்குப் பெயர் ‘பொற்புழு' (chrysalis).

* பொற்புழு நிலையிலிருந்தே வண்ணத்துப் பூச்சி உருவாகும்.

* வண்ணத்துப் பூச்சி தனது சிறகை முதல் தடவை விரிப்பதற்குச் சில மணிநேரங்கள் எடுத்துக்கொள்ளும். உடலுக்குள் ரத்தம் பாய்வதற்கும், இறக்கை உலர்வதற்கும்தான் அந்த அவகாசம்.

* வண்ணத்துப் பூச்சிக்கு நான்கு இறக்கைகள் உள்ளன.

* பொதுவாக வண்ணத்துப் பூச்சிகளின் இறகுகள் வெளிர் நிறத்தில் இருக்கும். குட்டிக் குட்டி வடிவமைப்புகளில் வண்ணம் மாறுபடும்.

* மலரிலிருந்து தேனை எடுத்துத்தான் பெரும்பாலான வண்ணத்துப் பூச்சிகள் உண்கின்றன.

* வண்ணத்துப் பூச்சி தன் கால்களால் ருசியை உணர்கிறது.

* உலகில் இதுவரை 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வகை வண்ணத்துப் பூச்சிகள் இருப்பதாக விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர்.

* ‘மொனார்க்’ எனப்படும் வண்ணத்துப் பூச்சி இனங்கள், நீண்ட தூரம் பறந்து இடம் பெயரக்கூடியவை. 4,000 கிலோமீட்டர் வரைகூடச் செல்லும்.

* இடம்பெயர்ந்த வண்ணத்துப் பூச்சிகள் முட்டையிட்டுக் குட்டி வண்ணத்துப் பூச்சிகள் வெளியே வரும்போது, தங்கள் பெற்றோர் பயணத்தைத் தொடங்கிய இடத்திற்கு வரும் ஆற்றல் பெற்றவை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x