Last Updated : 23 Oct, 2014 02:14 PM

 

Published : 23 Oct 2014 02:14 PM
Last Updated : 23 Oct 2014 02:14 PM

மத்தாப்பு

கம்பி மத்தாப்பு-அதைக்

கையில் பிடித்ததுமே

தம்பி கொளுத்தினான்-நண்பர்

தாவி வந்தனர்.



நண்பர் அனைவரும்-பார்த்து

நன்கு ரசித்தனர்.

வண்ணப் பொறிகளை-கண்டு

மகிழ்ந்து குதித்தனர்.



“எரிந்த கம்பியை-உடன்

எடுத்துச் சென்று நீ

தெருவின் ஓரமாய்-போட்டுத்

திரும்பி வந்திடு.



நட்ட நடுவிலே-போட்டால்,

நடப்போர் கால்களைச்

சுட்டுப் பொசுக்கிடும்”-எனச்

சொன்னார் தந்தையும்.



எரியும் போதிலே-‘ஓஹோ!‘

என்று புகழ்ந்தனர்.

எரிந்து முடிந்ததும்-அந்தோ,

இந்த நிலைமையா!



- நன்றி: சிரிக்கும் பூக்கள் தொகுப்பு

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x