Published : 28 Sep 2016 11:53 AM
Last Updated : 28 Sep 2016 11:53 AM

புதிர் பக்கம் - 28/09/2016

காந்தியை நினைவுபடுத்தும் சொற்கள்

1. காந்தியை…………… என்றும் அழைப்பார்கள் (4).

2. காந்தி பிறந்த ஊர் ........... (6)

3. தேச சுதந்திரத்துக்காக ........... முறையில் போராடினார் காந்தி (4).

4. காந்தி அம்மாவின் பெயர் .......... (5)

5. காந்தி சட்டம் பயின்ற இடம் ........... (4)

6. காந்தி எழுதிய புத்தகம், அவரது வாழ்க்கையின் சாரம் ......... (7)

7. சிறுவயதில் காந்தி பார்த்த ........ நாடகம், அவரை உண்மையை மட்டும் பேச வைத்தது (7)

8. ஆங்கிலேயர் விதித்த ........ வரியை எதிர்த்து தண்டியாத்திரை நடத்தினார் காந்தி.

9. காந்தியைத் துப்பாக்கியால் சுட்டவர் ........... (3)

10. காந்தி அடிக்கடி உச்சரிக்கும் தெய்வத்தின் மந்திரம் ............. (4).



விடுகதை

1. ஒல்லியாக இருப்பேன்; குச்சி அல்ல. பள்ளிக்கூடத்தில் உங்களுக்கு நான் வேண்டும். நான் யார்?

2. காலையில் நெட்டையாக இருப் பவன், மதியத்தில் குள்ளமாகி விடுகிறான். அவன் யார்?

3. 12 போலீஸ், 3 திருடர்கள். நான் யார்?

4. தொங்கும் குச்சிகளுக்குத் ருசி தனி. அது என்ன?

5. மனிதன் போடாத பந்தலில் மலர்ந்து கிடக்கும் பூக்கள். நாங்கள் யார்?

6. உயரப் பறப்பேன்; கழுகு அல்ல. ஊர் வந்தால் இறங்கி விடுவேன். நான் யார்?

7. மழையும் வெயிலும் தரும் பரந்த கூரை. அது என்ன?

8. தண்ணீருக்குள் இருந்து வந்த வனைத் தண்ணீ ருக்குள்ளேயே கரைத்து விட்டார்கள். அவன் யார்?

9. தெருவுக்குத் தெரு நிற்கும். எல்லை தாண்டினால் சண்டை நிச்சயம். அது என்ன?

10. சட்டை இல்லாமல் பை தைத்தவன், ஆனால் தாவுவதில் கெட்டிக்காரன். அவன் யார்?

விடுகதை போட்டவர்:

கு. தமிழ்ச்செல்வன், 8-ம் வகுப்பு, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி,
ஆமணக்குநத்தம், அருப்புக்கோட்டை.



வித்தியாசம் என்ன?

இரண்டு படங்களுக்கும் இடையே 12 வித்தியாசங்கள் உள்ளன. கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x