Last Updated : 26 Oct, 2016 11:59 AM

 

Published : 26 Oct 2016 11:59 AM
Last Updated : 26 Oct 2016 11:59 AM

பட்டாசுகளை எவ்ளோ வெடிக்கலாம்?

“என்னடா சொல்ற? இந்தத் தீபாவளிக்கு நீ பட்டாசுகளைக் கொஞ்சமா வெடிக்கப் போறீயா?” குணா மறுபடியும் அதிர்ச்சியுடன் அந்தக் கேள்வியைக் கேட்டான். சேகரும் மூன்றாவது முறையாகத் தலையசைத்து ‘ஆமாம், கொஞ்சம்தான் வாங்கப் போறேன்’ என்று சொன்னான். மரத்தடியில் உடன் கூடியிருந்த தாரிணி, அபி, குமார், முகில் உள்ளிட்ட குழந்தைகள் அனைவருக்கும் சேகரின் பதில் ஆச்சரியமாக இருந்தது. “என்னது… வழக்கமா பட்டாசு நிறைய வாங்குவ, இந்த முறை என்னாச்சு?”.

குணா, சேகர் மற்றும் நண்பர்கள் பட்டாளம் அவர்கள் வசிக்கும் குடியிருப்பை ஒட்டிய மரத்தடியில் வழக்கம்போல் கூடியிருந்தனர். சிரிப்பும், கேலியுமான பேச்சு, சில தினங்களில் வரவிருக்கும் தீபாவளி பண்டிகையைச் சுற்றி வந்தது. புத்தாடைக்காக அலைந்து திரிந்தது, வீட்டில் தயாராகும் பலகாரங்கள் என்று பேச்சில் சுவாரசியம் கூடியது. பட்டாசு, மத்தாப்பு குறித்துப் பேச்சு திரும்பியபோதுதான் சேகர் அந்த முடிவைச் சொன்னான்.

அதற்கான காரணத்தைச் சேகர் சொல்வதற்காக மற்றவர்கள் காத்திருந்தனர். “என்னோட தாத்தான்னா எனக்கு ரொம்ப இஷ்டம். அவருக்குப் போன வாரம்தான் இதய ஆபரேஷன் செஞ்சாங்க. ஜன்னல் கதவு படார்னு படாஅடிச்சாலே அவருக்குத் தொந்தரவா இருக்கும். தீபாவளியன்னைக்கு ‘டமால்..டுமீல்’னு வெடிக்கப்போற பட்டாசுகளை நெனச்சா பயமாயிருக்கு. நல்லாருக்க நம்மையே பட்டாசு சத்தம் தூக்கிப்போடும்போது, இதய நோயாளியான தாத்தா என்ன கஷ்டப்படுவார். அதான், மத்தாப்புகளை மட்டும் கொளுத்தலாம்னு இருக்கேன்” என்று குணா சோகமாகச் சொல்லி முடிக்கப் அபியும், தாரிணியும் பலமாக உச்சு கொட்டினார்கள். அனைவருக்கும் அவரவருக்குப் பிரியமான தாத்தா, பாட்டிகள் ஞாபகத்துக்கு வந்தனர்.

“ஆமாடா. என்னோட பாட்டிக்குக்கூட ஆஸ்துமா. போன தீபாவளியன்னைக்கு கொஞ்சம் கஷ்டப்பட்டாங்க” என்றபோது குணாவின் குரல் பரிதாபமாக இருந்தது. கூட்டம் வழக்கம் போல ஜாலியாக இல்லாமல் தீவிரமாக மாறியிருந்தது. “எங்க வீட்டுல தம்பிப் பாப்பா பொறந்திருக்கான். சின்ன சத்தம் கேட்டாலே பயந்து அழறான். பட்டாசு சத்தம் அவனுக்கும் தொந்தரவா இருக்கும்ல” தாரிணி அக்கறையாகக் கேட்க, யாரிடமும் பதில் இல்லை.

“ஆமாடா. என்னோட பாட்டிக்குக்கூட ஆஸ்துமா. போன தீபாவளியன்னைக்கு கொஞ்சம் கஷ்டப்பட்டாங்க” என்றபோது குணாவின் குரல் பரிதாபமாக இருந்தது. கூட்டம் வழக்கம் போல ஜாலியாக இல்லாமல் தீவிரமாக மாறியிருந்தது. “எங்க வீட்டுல தம்பிப் பாப்பா பொறந்திருக்கான். சின்ன சத்தம் கேட்டாலே பயந்து அழறான். பட்டாசு சத்தம் அவனுக்கும் தொந்தரவா இருக்கும்ல” தாரிணி அக்கறையாகக் கேட்க, யாரிடமும் பதில் இல்லை.

அப்போ அங்க ஒரு தாத்தா வந்தாரு. “குட்டிப் பசங்க எல்லாம் குட்டி மாநாடு போட்டிருக்கீங்களா?” என்று கேட்டதுதான் தாமதம். பட்டாசு பற்றி பேசின விஷயங்களை ஒவ்வொருவரும் தாத்தாவிடம் சொன்னார்கள்.

உடனே அந்தத் தாத்தா, “குட், இப்படியெல்லாம்கூடப் பேசுறீங்களா?” என்றார். “தீபாவளியன்னைக்குப் பட்டாசுகளை வெடிக்காம இருக்க முடியுமா? ” என்று கோரஸாகக் கேட்டார்கள்.

“முழுவதுமாகப் பட்டாசுகளை வெடிக்காம இருக்க முடியாது. கொஞ்சம் குறைவா வெடிக்கலாம். போன வருஷத் தீபாவளி சமயம் டெல்லியில் உங்களைப் போன்ற சில சிறுவர்கள், பொது அக்கறையுடன் உச்ச நீதிமன்றத்துக்கே போனாங்க தெரியுமா? அர்ஜூன் கோபால், ஆரே பண்டாரி, ஜேயா ராவ் அப்டின்னு 3 சிறுவர்கள்தான் அவர்கள். பட்டாசுகளால், அதிகப்படி மாசு உண்டாகிச் சூழல் சீர்கேடு அடைவதுடன், அதிக ஓசையால் உண்டாகும் உடல் நல பாதிப்புகளைப் பட்டியவிட்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தாங்க. இந்தச் சிறுவர்கள் சார்பாக அவர்களின் அப்பாக்கள் வழக்கு நடைமுறைகளை மேற்கொண்டாங்க. இதையடுத்துப் பட்டாசு பயன்பாட்டைக் கட்டுப்படுத்த மாநில அரசுகளுக்கு நீதிமன்றம் பல அறிவுறுத்தல்களை வழங்கியது.

இதேபோல 2005-ம் ஆண்டும் பட்டாசு வெடிக்கப் பல கட்டுப்பாடுகளை விதித்து, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கு. அதன்படி, இரவு 10 மணி முதல் காலை 6 மணிவரை பட்டாசு வெடிக்கத் தடை உண்டு. மேலும் அனுமதிக்கப்பட்ட அளவைவிட புகை மற்றும் ஓசை எழுப்பும் பட்டாசு ரகங்களைக் கண்டுபிடித்துத் தடை செய்யவும் உத்தரவிட்டுள்ளது. இவை எல்லாமே நம்முடைய நலனுக்கானவை என்பதால், இவற்றை நாம் பின்பற்றிப் பட்டாசுகள் கொளுத்துவது நல்லது” என்றார் தாத்தா.

“தீபாவளியன்னைக்கு குறைஞ்ச சத்தம் உள்ள வெடிகள், மத்தாப்புகளைக் கொளுத்தினால், எங்க தாத்தா போன்ற நோயாளிகளுக்குக் கொஞ்சம் நல்லது. அதோட சூழல் மாசும் குறையும், இல்லையா தாத்தா?” என்று சேகர் சொல்ல, மற்ற குழந்தைகளும் தாத்தாவும் அதை ஆமோதிக்கும்விதமாகத் தலையை ஆட்டினார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x