Published : 28 Sep 2016 11:38 AM
Last Updated : 28 Sep 2016 11:38 AM

நம்ப முடிகிறதா? - வெட்டினால் வளரும் கால்!

# சராசரி மனிதனின் உடலில் காணப்படும் ரத்த நாளங்களின் மொத்த நீளம் 95 ஆயிரம் கிலோ மீட்டர் நீளத்துக்கு இருக்கும்.

# அறிவியல் முறைப்படி ஒரு தர்ப்பூசணிப் பழத்திலிருந்து 6 லட்சம் தர்ப்பூசணிப் பழங்களை உற்பத்தி செய்ய முடியுமாம்.

# அமெரிக்காவில் ஒவ்வொரு விநாடிக்கும் 350 பீட்சாக்கள் உண்ணப்படுகின்றன.

# கடல் நட்சத்திரங்களின் கால்களை வெட்டினால், அவை மீண்டும் வளர்ந்துவிடும்.

# மென்மையான மேல் ஓடு கொண்ட ஆமைகள் சீனாவில் உள்ளன.

# சண்டிகர் நகரை ல கார்பிசியர் என்ற ஒரு பிரெஞ்சு கட்டிட வடிவமைப்பாளர் வடிவமைத்தார்.

# ஜப்பானிலுள்ள ஒகினவா தீவில் 100 வயதைக் கடந்த முதியவர்கள் சுமார் 450 பேர் வசிக்கிறார்கள்.

# விக்டோரியா மகாராணி காலத்தில், தாடி வைத்திருந்தவர்களுக்காகச் சிறப்பு தேநீர்க் கோப்பைகள் பழக்கத்தில் இருந்தன. தேநீரில் தாடி புடாதவாறு அவை இருந்தன.

# முக்கோணத்துக்குள் பல முக்கோணங்கள் வரையப்பட்டுக் கேட்கப்படும் எளிய கேள்விக்கு 94.7 சதவீதம் பேர் தவறான பதிலையே சொல்கின்றனர்.

# கடல்வாழ் உயிரினமான சிங்கி இறால்கள்-லாப்ஸ்டர்கள், ஒன்றையொன்றின் மீது சிறுநீரைப் பீய்ச்சி அடிப்பதன் மூலமே தகவல்களைப் பரிமாறிக்கொள்கின்றன.

தகவல் திரட்டியவர்: விஷால், 7-ம் வகுப்பு,
வித்யவிகாஷ் மெட்ரிக். பள்ளி, காரமடை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x