Last Updated : 09 Aug, 2017 11:02 AM

 

Published : 09 Aug 2017 11:02 AM
Last Updated : 09 Aug 2017 11:02 AM

தினுசு தினுசா விளையாட்டு: பல்லாங்குழி விளையாடுவோமா?

ல்லாங்குழி விளையாடினால் உங்கள் மூளைக்கும் விரல்களுக்கும் சிறந்த பயிற்சியாக இருக்கும். இருவர் விளையாடும் விளையாட்டுகளில் இதுவும் ஒன்று.

என்னென்ன தேவை?

14 குழிகள் கொண்ட பல்லாங்குழி பலகை ஒன்றை எடுத்துக்கொள்ளுங்கள். ஒரு குழிக்கு 5 முத்துகள் வீதம் 14 குழிகளிலும் நிரப்புங்கள். (சோழி, புளியங்கொட்டை, கற்களைக்கூடப் பயன்படுத்தலாம்).

எப்படி விளையாடுவது?

முதல் குழந்தை தனக்கு ஒதுக்கப்பட்ட 7 குழிகளில், ஏதாவது ஒரு குழியிலுள்ள 5 முத்துகளை எடுத்து, வலப் பக்கமாக ஒவ்வொரு குழியிலும் ஒரு முத்து போட வேண்டும். 5 முத்துகளையும் போட்ட பிறகு, 6-வது குழியிலிருக்கும் முத்துகளை எடுத்து, அடுத்த குழியிலிருந்து போட்டுக்கொண்டே வரவேண்டும். இப்படித் தொடர்ந்து போட்டுக்கொண்டே வரும்போது, இருவரில் யார் குழியிலாவது நான்கு முத்துகள் சேர்ந்துவிட்டால், அந்தக் குழிக்கு உரியவர் ‘பாண்டி’ என்று சொல்லிவிட்டு, எடுத்துக்கொள்ளலாம்.

கையிலிருக்கும் கடைசி முத்தைப் போட்ட பிறகு, அடுத்த குழியில் முத்து எதுவும் இல்லாமல் காலியாக இருந்தால், அதற்கடுத்த குழியிலுள்ள முத்துகள் அத்தனையும் எடுத்துக்கொள்ளலாம். இரண்டு குழிகள் அடுத்தடுத்து காலியாக இருந்தால், அவரது ஆட்டம் முடிந்துவிடும். அடுத்தவர் தொடர வேண்டும்.

இவ்வாறாக, இருவரும் அனைத்து முத்துகளும் குழிகளிலிருந்து தீரும்வரை தொடர்ந்து விளையாட வேண்டும். முத்து இல்லாத குழியில் ஒரு காகிதத்தைக் கிழித்து அடையாளமாக வைத்துவிட வேண்டும்.

இப்போது யார் கையில் 5-க்கும் குறைவான முத்துகள் இருக்கின்றனவோ, அவர் ஒவ்வொரு குழியிலும் ஒரு முத்தைப் போட்டு விளையாட்டைத் தொடரலாம். இப்படித் தொடரும்போது மீண்டும் முத்துகள் சேர்ந்து, வெற்றி பெறவும் வாய்ப்பிருக்கிறது. அனைத்து முத்துகளையும் இழப்பதற்கும் வாய்ப்பிருக்கிறது.

விளையாட்டின் முடிவில் யார் கையில் மொத்த முத்துகளும் வந்து சேர்கின்றனவோ, அவரே இந்த விளையாட்டில் வெற்றிபெற்றவர்.

(இன்னும் விளையாடலாம்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x