Published : 16 Mar 2016 12:32 PM
Last Updated : 16 Mar 2016 12:32 PM

பாதுகைக் குருவி தெரியுமா?

பக்கி என்றொரு பறவை. பக்கி என்றுகூடப் பெயரா எனக் குழம்பாதீர்கள். அதன் ஆங்கிலப் பெயரைச் சொன்னால் உங்களுக்குத் தெரிந்துவிடும். ‘நைட் ஜார்’ பறவை. இப்போது தெரிந்துவிட்டதா? இந்தப் பறவையைப் பற்றிக் கொஞ்சம் பார்ப்போமா?

# குருவியைப் போலத் தோற்றம் அளிக்கும்.

# இதைப் ‘பாதுகைக் குருவி’ என்றும் அழைப்பது உண்டு. காரணம், இது தரையில் உட்கார்ந்திருக்கும்போது கவிழ்த்துப் போட்ட பாதுகை போலக் காணப்படும் (பாதுகை என்றால் செருப்பு என்று அர்த்தம்).

# சிறிய கால்களும் சிறிய அலகும் இருக்கும்.

# சிறு பூச்சிகள், வண்டுகள் ஆகியவற்றை உண்டு வாழும்.

# ஆந்தையைப் போலவே இதுவும் ஓர் இரவுப் பறவை.

# பெரிய கண்களை உடைய இந்தப் பறவை இருட்டிலும் தெளிவாகப் பார்க்கக்கூடிய ஆற்றல் பெற்றது.

# அகன்ற சிறகுகளுக்குள் உணவைப் பிடித்து வைத்துக் கொள்ளும் திறமை இதற்கு உண்டு.

# புதர்களிலும் பள்ளத்தாக்கு களிலும் வாழும் இந்தப் பறவையினம் வேகமாக அழிந்துவருகிறது.

தகவல் திரட்டியவர்: ந. ரூபேஷ் குமார், 6-ம் வகுப்பு,
நாராயண குரு மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி, காஞ்சிபுரம்.



ஒரு சொல், பல பொருள்



தகவல் திரட்டியவர்: பி.இந்திரஜித், 3-ம் வகுப்பு,
வி.எம். பள்ளி, சேலம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x