Last Updated : 16 Mar, 2016 12:17 PM

 

Published : 16 Mar 2016 12:17 PM
Last Updated : 16 Mar 2016 12:17 PM

சாயலும் வித்தியாசமும்: குதிக்கும் கோவேறு கழுதை; குதிக்காத கழுதை!

கழுதைகளையும், கோவேறு கழுதைகளையும் (Mule) பார்த்திருக்கிறீர்களா? இரண்டு விலங்கு களிடமும் பெரிய வித்தியாசத்தைப் பார்க்க முடியாது. உற்றுப் பார்த்தால் உருவம் சார்ந்தும், குணம் சார்ந்தும் இரண்டும் வெவ்வேறு விலங்குகள் என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.

# கழுதை வீட்டுப் பிராணியாகும். பாதத்தில் பிளவுபடாத குழம்புகளைக் கொண்ட பாலூட்டி. குதிரை போன்ற உடலைமைப்பைக் கொண்டது. ஆனால், குதிரையைவிட கழுதை உடல் அளவில் சிறியது. குதிரையின் வாலில் இருக்கும் அளவுக்குக் கழுதையின் வாலில் ரோமம் இருக்காது. பிடரி மயிரும் கழுதைக்குக் கொஞ்சமாகவே இருக்கும்.

# ஆண் கழுதைக்கும் பெண் குதிரைக்கும் பிறந்த கலப்பினப் பிராணியே கோவேறு கழுதை.

# கழுதைகள் இனப் பெருக்கத்தில் ஈடுபட்டு குட்டி போடும். கோவேறு கழுதைகள் இனப்பெருக்கம் செய்ய முடியாது.

# கோவேறு கழுதைகள் வேலைக்குச் சிறந்தவை. கழுதைகளைவிட கோவேறு கழுதைகள் அதிக எடையைத் தாங்குபவை. அதிக எடையை ஏற்றினால் கழுதை மிகவும் கஷ்டப்படும்.

# கோவேறு கழுதைகளால் சில அடி உயரத்துக்குக் குதிக்க முடியும். கழுதையால் குதிக்க முடியாது. கழுதைகளைவிட கோவேறு கழுதைகள் புத்திசாலிகள்.

# கோவேறு கழுதைகளின் காதுகள், கழுதைகளின் காதுகளைவிடச் சிறியதாக இருக்கும். ஆனால் உருவமோ குதிரை போல இருக்கும். தலை, ஒல்லியான கால்கள், பிடரி மயிர் ஆகியவை கழுதைகளுக்கு இருப்பது போலக் கோவேறு கழுதைகளுக்கு இருக்கும்.

# கழுதைகளைவிட கோவேறு கழுதைகள் உயரமாக இருக்கும். கழுத்து, பற்களும்கூட கொஞ்சம் பெரியதாக இருக்கும்.

# குதிரையின் வாலைப் போலவே கோவேறு கழுதையின் வால் அடர்த்தியானது. ஆனால், கழுதையின் வாலோ பசுவின் வாலைப் போல இருக்கும்.

# கழுதையின் கத்தலையும் கோவேறு கழுதை வெளிப்படுத்தும் சத்தத்தையும் கேட்கும் ஒருவர் எளிதாக அதை அடையாளம் காண முடியும். கோவேறு கழுதை குதிரையைப் போலக் கனைக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x