Last Updated : 07 May, 2014 01:04 PM

 

Published : 07 May 2014 01:04 PM
Last Updated : 07 May 2014 01:04 PM

சக்கரவர்த்தி பெங்குயின்!

#பறக்க முடியாத பறவை இனம் பெங்குயின். அவை தங்கள் சிறகுகளைத் துடுப்புகளாகத் தகவமைத்துக் கொண்டவை. நீரில் நீந்துவதற்கு துடுப்புகளைப் பயன்படுத்தும்.

#பூமியின் தென் அரைக்கோளப் பகுதியிலும், வடக்கே கலப்பகோஸ் தீவுகளிலும் பெங்குயின்கள் அதிகமாக வாழ்கின்றன. உணவுக்காக பூமத்திய ரேகையையும் கடந்து செல்வதுண்டு. நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, சிலி, அர்ஜெண்டினா மற்றும் தென்ஆப்பிரிக்காவில் காணப்படுகின்றன.

#பெங்குயின்களின் முக்கிய உணவு மீன்கள்.

#பெங்குயின் வகைகளில் மிகப் பெரியது சக்கரவர்த்தி பெங்குயின் எனப்படும் ‘எம்பரர் பெங்குயின்’. ஒரு மீட்டருக்கும் அதிகமான உயரமும் 35 கிலோகிராம் எடையும் உள்ளவை.

#பெங்குயின்களில் சிறியது, நீலப் பெங்குயின். இதன் உயரம் 40 சென்டிமீட்டர். ஒரு கிலோகிராம் எடை.

#கடல் நீரைக் குடித்து பெங்குயின்களால் வாழமுடியும்.

#வாழ்நாளின் பாதியை நீரிலும், பாதியை நிலத்திலும் செலவழிக்கின்றன.

#பொதுவாகப் பெரிய பென்குயின்கள், வெப்பத்தை உடலில் தக்கவைக்கும் திறனைப் பெற்றிருக்கின்றன. அதனால் அதிக குளிர்ப் பகுதிகளிலும் அவற்றால் வாழமுடியும். சிறிய பெங்குயின்களால் அதிக குளிர் நிலவும் பகுதிகளில் வாழமுடியாது.

#நியூசிலாந்தைச் சேர்ந்த மஞ்சள் கண் பெங்குயின்கள் அரிதாகி வருகின்றன. தற்போது அவற்றின் எண்ணிக்கை சுமார் 4000 மட்டுமே இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

#பெங்குயினின் கறுப்பு முதுகும், வெள்ளை வயிறும் நீந்தும்போது குழப்பத்தை ஏற்படுத்தும். அவை நீந்தும்போது, மேலிருந்து பார்த்தால் கண்டுபிடிக்க முடியாது. தண்ணீருக்குக் கீழே இருந்து, சூரிய ஒளி பிரதிபலித்து அதன் வெள்ளை வயிறை மறைத்து விடும்.

#பெங்குயின்களுக்கு அன்டார்டிகா கண்டத்தில் ஆபத்து கிடையாது. ஏனெனில் அங்கு பெங்குயின்களை வேட்டையாடும் விலங்குகள் கிடையாது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x