Last Updated : 25 Jun, 2014 01:21 PM

 

Published : 25 Jun 2014 01:21 PM
Last Updated : 25 Jun 2014 01:21 PM

அதிசய உலகம்: உலகின் குட்டி நாடு

# உலகில் உள்ள இரண்டாவது குட்டி நாடு மொனாக்கோ. கத்தோலிக்க கிறிஸ்தவ தலைமையகம் உள்ள வாட்டிகனுக்கு அடுத்து உலகில் உள்ள குட்டி நாடு இது.

# மொத்தமே 499.2 ஏக்கர்தான் இந்த நாட்டின் பரப்பளவு. நம்ம ஊரில் உள்ள ஒரு கிராமத்தைவிட சிறிய நாடு.

# மொத்த சாலை தூரம் - 4.4 கிலோமீட்டர்தான். கடலோரப் பகுதி - 4.1 கிலோ மீட்டர்.

# நிலப்பரப்பு பட்டியலில் உலக அளவில் மொனாக்கோவுக்கு 248வது இடம். (110 ஏக்கர் பரப்புக் கொண்ட வாட்டிகன் 249வது இடம்)

# ஐரோப்பா கண்டத்தில் பிரான்ஸ் நாட்டுக்கு அருகே மொனாக்கோ உள்ளது.

# இந்த நாட்டின் மக்கள் தொகை தற்போது 36, 371.

# மக்கள்தொகை குறைவாக இருப்பதாலோ என்னவோ, இந்த நாட்டில் வாழும் மக்களுக்கு ஆயுள் கொஞ்சம் அதிகம். இங்கு சராசரியாக மக்கள் 90 வயதுவரை வாழ்கிறார்கள்.

# பிரான்ஸுடன் இணைந்து இருந்த இந்த நாடு 1861-ம் ஆண்டில் தனி நாடானது.

# இங்கு மக்கள்தொகை குறைவாக இருப்பதால் வெளிநாட்டு மக்கள் குடியேற முன்பு அதிகம் அனுமதிக்கப்பட்டார்கள்.

# மக்கள் தொகை இருமடங்காகி விட்டதால் நாட்டின் பரப்பளவை அதிகரிக்கத் தொடங்கியுள்ளார்கள். எப்படித் தெரியுமா? கடலிலேயே பிரம்மாண்டமான கட்டிடங்களைக் கட்டி வருகிறார்கள்.

# உச்சக்கட்டமாக கடலுக்குள் பாதாளம் அமைத்து அங்கு ஒரு நகரை உருவாக்கவும் மொனாக்கோவில் திட்டமிட்டுவருகிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x