Last Updated : 20 Mar, 2018 09:35 AM

 

Published : 20 Mar 2018 09:35 AM
Last Updated : 20 Mar 2018 09:35 AM

‘விரல்மொழியர்’: கண் ஆக மாறிய மின்னிதழ்

பா

ர்வைக் குறைபாடு டைய இளைஞர்கள் 6 பேர் இணைந்து பார் வை குறைபாடு உள்வர்களுக்காகவே தொடங்கிய மின்னிதழின் பெயர்தான் ‘விரல் மொழியர்’. உலக விவரங்களை விரல்வழி கொண்டு சேர்க்கும் கண்ணாக மாறி இருக்கிறது இந்த மின்னிதழ்.

வளர்ந்து வரும் புதிய தொழில்நுட்பங்களின் உதவியால் பார் வைத் திறனற்றோரும் பயன்படுத்தும் வகையில் இந்த இதழ் உருவாக்கப்பட்டுள்ளது. ரா.பாலகணேசன், ப.சரவணமணிகண்டன், பொன்.சக்திவேல், பொன்.குமாரவேல், ஜோ.யோகேஷ், ரா.சரவணன் ஆகியோர் இந்த இதழ் தொடங்க காரணமானவர்கள். இவர்கள் 6 பேரும் பார்வைக் குறைபாடுடைய பட்டதாரி இளை ஞர்கள்.

முதல் மின்னிதழ் கடந்த ஜனவரி 27-ம் தேதி புதுக்கோட்டையில் தொடங்கப்பட்டது. பார்வையற்றோரைப் பற்றிய பல் வேறு படைப்புகளுடன் இந்த இதழ் வெளிவந்தது. மின்னிதழின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான புதுக்கோட்டை அரசு பார்வையற்றோர் உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் ப.சரவணமணிகண்டன் நம்மிடம் கூறியது:

கணினி மற்றும் தொடுதிரை செல்போன்களின் வருகைக்குப் பிறகு பார்வையுள்ளோருக்கு இணையாகப் பார்வைக் குறைபாடுடையோரும் இணையதளங்களில் திரை வாசிப்பான்கள் உதவியுடன் (Screen Readers) வாசிக்க முடிகிறது. www.viralmozhiyar.weebly.com என்ற எங்களது மின்னிதழில் யுனிகோடு முறையிலேயே பதிவிடப்படுகிறது. அதன்பிறகு இந்த இதழ் சமூக வலைதளங்களில் பதிவேற்றப்படுகிறது. இதனால் வாசகர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

நாட்டில் பார்வையற்றவர்கள் படும் அவதிகளையும் அவர்களுக்கான மறுக்கப்படும் உரிமைகள், தேவைகள் குறித்தும் ஆட்சியாளர்களை எளிதில் சென்றடைய வேண்டும் என்பதே இந்த மின்னிதழ் நோக்கம். பார்வைக் குறைபாடுடையோரால் தொடங்கப்பட்ட முதல் மின்னிதழ் இது தான்” என்கிறார் சரவணமணி கண்டன்.

தற்போதுள்ள மின்னிதழை விரைவில் இணையதளமாக மாற்றவும் திட்டமிட்டுள்ளனர். ‘தி இந்து' தமிழ் நாளிதழ் யுனிகோடு முறையில் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுவதால் இவர்களால் எளிதாக படிக்க முடிகிறது. அதேபோல் ‘தி இந்து’ குழும புத்தகங்களையும் யுனி கோடு முறையில் மின்னிதழாக வெளியிட வேண்டும் என்கின் றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x