Published : 04 Sep 2017 06:35 PM
Last Updated : 04 Sep 2017 06:35 PM

அறம் பழகு: சந்தியா, ஷர்மிளாவின் ஐஏஎஸ் பயிற்சிக்கு உதவலாமே!

குடிபோதையால் தன்னையே அழித்துக்கொண்ட தந்தை, அவரால் பாதிக்கப்பட்ட தாய் என்று விரக்தியின் விளிம்பில் வாழ்ந்த சிறுமிகள் சந்தியாவும் ஷர்மிளாவும்.

இருவரின் தந்தைகளும் மதுவின் பிடியில் தனித்தனியே இறக்க, ஷர்மிளாவின் தாயும் சில வருடங்களில் உயிரை விட்டார். தங்கள் குடும்பத்தின் நிலை கண்டு வெதும்பிய சந்தியாவின் தாய், மனப்பிறழ்வோடு உயிருடன் இருக்கிறார்.

அவர்களைப் பற்றிக் கேள்விப்பட்ட தேனியில் உள்ள 'மனிதநேய காப்பகம்' தத்தெடுத்தது. அங்கேயே இருவரும் தங்கி, படித்தனர்.

காலங்கள் உருண்டோடின. தீவிர உழைப்பின் பலனாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வில் 488 மதிப்பெண்கள் பெற்றார் ஷர்மிளா. தேனியில் உள்ள நாடார் சரசுவதி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்த அவர் 12-ம் வகுப்பில் 973 மதிப்பெண்கள் எடுத்துத் தேர்ச்சி பெற்றார்.

தேனி மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளியில் படித்து பத்தாம் வகுப்பில் 457 மதிப்பெண்கள் பெற்ற சந்தியா, 12-ம் வகுப்பில் 980 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

ஏற்கெனவே இவர்கள் இருவர் குறித்த கட்டுரை 'தி இந்து' இணையதளத்தில் அறம் பழகு: வறுமையில் வாடும் இருவரின் படிப்புக்கு உதவலாமே! என்ற பெயரில் வெளியானது.

தந்தையின் குடிப்பழக்கத்தால் முன்பு தாங்கள் சந்தித்த இன்னல்களை தற்போது அனுபவிக்கும், ஏராளமான குழந்தைகளின் நலன் காக்க இருவரும் விரும்பினர். அதற்காக ஐஏஎஸ் படிக்க முடிவெடுத்தனர்.

இதனால் சென்னை மாநிலக் கல்லூரில் பி.ஏ. அரசியல் விஞ்ஞானம் (Political Science) சேர்ந்துள்ளனர். இந்நிலையில் இவர்கள் சென்னையில் தங்கிக் கல்லூரிப் படிப்பை மேற்கொள்ளவும் ஐஏஎஸ் தேர்வுக்குத் தயாராகவும் மாதாமாதம் பணம் தேவைப்படுகிறது.

இந்நிலையில் தங்களுக்காக மட்டுமல்லாமல் மக்களுக்காக சேவை செய்ய ஆசைப்படும் அவர்களுக்கு உதவ விரும்பும் வாசகர்கள், பணமாகவோ பொருளாகவோ தங்களாலான உதவிகளைச் செய்யலாம்!

சந்தியா, ஷர்மிளாவின் வங்கிக் கணக்கு குறித்த விவரம்

 

SANTHIYA J - 3630020086,

SHARMILA K - 3630020224,

Central Bank of India,

IFSC code- CBIN0280884,

Triplicane, Chennai.

    FOLLOW US

    Sign up to receive our newsletter in your inbox every day!

    WRITE A COMMENT
     
    x