Last Updated : 12 Mar, 2015 10:22 AM

 

Published : 12 Mar 2015 10:22 AM
Last Updated : 12 Mar 2015 10:22 AM

வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் ராஜபாளையம் தங்கப்பூ ஜடையாரம்: இயந்திரம் இல்லாத கைவேலைப்பாடு

கோயில் திருவிழாக்களின்போது அம்மனுக்கும், திருமணத்தின்போது மணப்பெண்களுக்கும் சூட்டப்படும் சிறப்புமிக்க ராஜபாளையம் தங்கப்பூ ஜடையாரம் தற்போது வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

விருதுநகர் மாவட்டம், ராஜபாளை யம் தங்கப்பூ ஜடையாரத்துக்கு எப்போதும் தனிச்சிறப்பு உண்டு. காரணம், இயந்திரங்கள் பயன்படுத்தாமல் கைகளால் மட்டுமே உருவாக்கப்படும் தங்கப்பூ ஜடையாரம் மிகுந்த கலைநயமிக்க நுண்ணிய வேலைப்பாடுகளைக் கொண்டது.

ராஜபாளையம் பகுதியில் நடத்தப்படும் திருமணங்களில் மணப்பெண் கூந்தலை தங்கப்பூக் களால் ஆன ஜடையாரம், குஞ்சங் கள் மூலம் அலங்கரிப்பது வழக்கம். குறிப்பாக ராஜுக்கள் வீட்டு திரு மணங்களில் இந்த தங்கப்பூ ஜடை யாரம் மற்றும் குஞ்சத்துக்கு எப்போதுமே தனி முக்கியத்துவம் கொடுக்கப்படுவது உண்டு.

திருமணங்கள் மட்டுமின்றி வளைகாப்பு போன்ற விசேஷங்களிலும் பெண்களின் ஜடையில் இந்த தங்கப்பூ ஜடையாரம், குஞ்சம் ஜொலிப் பது உண்டு பிரசித்திப் பெற்ற கோயில்களில் திருவிழாக்களின் போது அம்மனின் ஜடை அலங்காரம் செய்யப்படும்போது தங்கப்பூ ஜடையலங்காரம், குஞ்சம் வைத்து அலங்காரம் செய்யப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

தங்கத்தைத் தகடாக்கி நுண்ணிய வேலைப்பாடுகள் உள்ள இரும்பு அச்சுக்களின் மீது வைத்து தங்கப் பூ தயாரிக்கப்படுகிறது. ஒரு ஜடையா ரத்துக்கு 21 முதல் 23 தங்கப்பூக்கள் தயாரிக்கப்படுகின்றன. ஜடையாரத் தின் கீழ் பகுதியில் தங்கத்தில் செய்யப்பட்ட குப்பிகளுடன் கூடிய குஞ்சம் பட்டுத் துணியால் இணைக்கப் படுகிறது. மேலும், ஜடையாரத்தின் மேல் பகுதியில் நாகர், கிருஷ்ணர் உருவங்களும் தங்கத்தால் வடித்து வைக்கப்படுகின்றன.

சிறப்புமிக்க ராஜபாளையம் தங்க ஜடையாரம் தற்போது வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.

தங்கப்பூ ஜடையாரத்துக்கு அச்சு வடித்து அதைக்கொண்டு 3 தலைமுறையாக தங்கப்பூ ஜடை யாரம் செய்து வரும் ராஜபாளையம் காமாட்சியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த நடராஜன் கூறியதாவது: ‘‘ராஜபாளையத்தில் எனது முன்னோ ரான அனுமந்திரம், 150 ஆண்டு களுக்கு முன்பு தங்கப்பூ ஜடையாரத் துக்கான இரும்பு அச்சை தயாரித்துள் ளார். அவரது வழிவந்த நாங்கள் அதே அச்சின் மூலம் இத்தொழிலை மேற்கொண்டு வருகிறோம்.

குறைந்தபட்சம் 6 பவுன் முதல் அதிகபட்சமாக 16 பவுன் எடை வரை ஜடையாரம் செய்யலாம். இதில் இலை, கீற்று என இரு வகைகள் உள்ளன. அதிலும் கல் பதித்தது, கல் பதிக்காதது என வகைப்பாடு உள்ளது.

வாடிக்கையாளர்களின் விருப்பத்துக்கு ஏற்ப இவற்றை தயாரித்துக் கொடுக்கிறோம். ஒரு தங்கப்பூ ஜடையாரம் செய்து முடிக்க சுமார் 1 மாதம் ஆகும்.

தங்கப்பூ ஜடையாரம் செய்யும் அச்சு தமிழகத்தில் எங்களிடம் மட்டுமே உள்ளது. நுண்ணிய வேலைப்பாடு களுடன் மிக நேர்த்தியாக இருப்ப தால் பலர் விரும்பி ஆர்டர் கொடுக்கின் றனர். பெரிய கோயில்களில் அம்மனுக்கு தங்க ஜடையாரம், குஞ்சம் செய்து கொடுத்துள் ளோம்.

தற்போது ராஜபாளையத்தில் உள்ளவர்கள் மூலம் தங்கப்பூ ஜடையாரம் மற்றும் குஞ்சங்கள் அமெரிக்கா, லண்டன், சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளுக்கும் அனுப் பப்பட்டு வருகின்றன.

அதைப் பார்த்து வெளிநாடுகளில் வசிப்போரும் தங்கள் குடும்பத் தினருக்கு இங்குள்ள அவர்களுடைய உறவினர்கள் மூலம் ஆர்டர் கொடுத்து வருகின்றனர்’’ என்றார்.

தற்போது ராஜபாளையத்தில் உள்ளவர்கள் மூலம் தங்கப்பூ ஜடையாரம் மற்றும் குஞ்சங்கள் அமெரிக்கா, லண்டன், சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளுக்கும் அனுப்பப்பட்டு வருகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x