Last Updated : 13 Mar, 2015 10:30 AM

 

Published : 13 Mar 2015 10:30 AM
Last Updated : 13 Mar 2015 10:30 AM

திருக்குறளை நூதன முறையில் கற்றுத் தரும் புதுச்சேரி பேராசிரியர்

திருக்குறள், அதிகாரங்களை நூதன முறையில் படம் வரைந்து, தொடர்புபடுத்துதல் முறையில் மாணவிகளுக்கு பாடம் கற்றுத் தருகிறார், புதுச்சேரி கஸ்தூரிபாய் மகளிர் கல்லூரி தமிழ் பேராசிரியர் ஸ்ரீதர்.

திருக்குறளில் உள்ள 133 அதிகாரங்களையும், 1,330 குறள் களையும் புதுச்சேரியில் உள்ள கஸ்தூரிபாய் மகளிர் கல்லூரி மாணவிகள் மிக எளிதாக கூறுகின்றனர். பல்வேறு திருக்குறளையும் படங்கள் மூலம் எளிதாக விளக்குகின்றனர்.

படங்கள் வரைந்து அதன் மூலம் மாணவிகளுக்கு திருக் குறளை கற்று தரும் பணியை 6 ஆண்டுகளாக செய்து வரு கிறார், இந்த கல்லூரியின் தமிழ் பேராசிரியர் ஸ்ரீதர் (32). இதனால், மனதில் அப்படியே நிலைத்து நிற் கிறது. இதுகுறித்து அவர் கூறும்போது:

பொதுவாக புத்தகத்தை வைத்துதான் திருக்குறள் கற்றுத் தருவார்கள். ஆனால், நான் படங்களை வரைய வைத்து கற்று தருகிறேன். மனதில் எளிதாக பதி யும் வகையில் மாணவிகளையே படங்களை உருவாக்குமாறு கூறுவேன்.

இப்படியே 1,330 குறள்களுக் கும் கீ வேர்டுகளும் கண்டுபிடிப் பார்கள். குறள்கள் மட்டுமில்லா மல் 133 அதிகாரங்களையும் மாணவி கள் மனப்பாடமாக சொல்வார்கள்.

அனைத்து அதிகாரங்களுக்கும் தொடர்பு உள்ளது. முதல் அதிகாரம் கடவுள் வாழ்த்து. கடவுள் வானத்தில் இருப்பதால் இரண்டாவது அதிகாரம் வான் சிறப்பு. வானத்தில் இருப்போர் முன்னோர். அதனால், மூன்றாவது அதிகாரம் நீத்தார் பெருமை. இப்படி ஒவ்வொரு அதிகாரங்களையும் தொடர்புபடுத்தி படிப்பதால் எளிதாக குறள் அதிகாரங்களை கற்றுக் கொள்ளலாம். அதே போல் அதிகாரங்களில் வரும் திருக்குறளில் உள்ள வார்த்தை களுக்கான படங்களை வரைந்து பார்த்து அதையும் மிக எளிதாக எங்கள் கல்லூரி மாணவிகள் கூறுவார்கள்.

மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து

நோக்கக் குழையும் விருந்து

இது 90-வது குறள். இதில் கீ வேர்டு மோப்பம். அதை நினைவில் வைத்துக் கொள்ள பூவும் அருகே மூக்கும் வரைந்தால் ஞாபகமாக சொல்வார்கள். இதுபோலவே, 100-வது குறளான

இனிய உளவாக இன்னாத கூறல்

கனியிருப்பக் காய்கவர்ந் தற்று

இதில் கனி, காய் வரைவதன் மூலம் எளிதாக சொல்வார்கள். இந்த கீ வேர்டுகளை மாணவிகளே உருவாக்கி விடுவார்கள். திருக் குறளை எளிமையாக அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதே எனது ஆசை என்று பேராசிரியர் ஸ்ரீதர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x