Last Updated : 06 Dec, 2016 01:44 PM

 

Published : 06 Dec 2016 01:44 PM
Last Updated : 06 Dec 2016 01:44 PM

ஜெ - சசி தோழமைக்கு களம் அமைத்துக் கொடுத்த கடலூர்

ஜெயலலிதாவின் அரசியல் மற்றும் தனி வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர் சசிகலா. அப்படி ஒரு நட்பை இருவரும் பேணிக்காத்து வந்தனர். இவர்களின் நட்பு உருவான கதை சுவாரஸ்யமானது.

1982-ம் ஆண்டு கடலூர்-விழுப்புரம் மாவட்டங்கள், ஒருங்கிணைந்த தென்னாற்காடு மாவட்டமாக இருந்த போது, மாவட்ட மக்கள் தொடர்பு அதிகாரியாக இருந்தவர் எம்.நடராஜன். இவரது மனைவி தான் சசிகலா.தென்னாற்காடு மாவட்டத்தின் அப்போதைய ஆட்சியராக இருந்த சந்திரலேகாவுடன் நெருங்கிய நட்புக் கொண்டிருந்தார் நடராஜன்,

அப்போது எம்ஜிஆர் தலைமையிலான அதிமுக ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்த தருணத்தில், கடலூரில் அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் ஒன்று நடைபெற்றது. அந்தப் பொதுக்கூட்டத்தில் கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளர் என்று அறிவிக்கப்பட்டு அவருக்கு செங்கோல் ஒன்றினை அப்போதைய முதல்வர் எம்ஜிஆர் வழங்கினார்.

எம்ஜிஆருக்கு நெருக்கமானவர் என்ற நிலையில் கடலூர் வந்த ஜெயலலிதாவிற்கு, சந்திரலேகா அவரை நன்கு உபசரித்ததோடு, அவருக்கு உதவிகளை செய்ய நடராஜன் மனைவி சசிகலாவுக்கு அறிமுகம் செய்துவைத்தார். ஜெ-சசி முதல் சந்திப்பு கடலூரில் உள்ள தற்போதைய முகாம் அலுவலகத்திற்கு அருகாமையில் உள்ள கட்டிடத்தில் நடந்தது.(தற்போது அந்தக் கட்டிடம் பராமரிப்பின்றி உள்ளது.)

அப்போது தொடங்கிய தோழமை நாளுக்கு நாள் அதிகரித்தது.பின்னர் நடராஜன் சென்னைக்கு மாற்றலாகி சென்றதும், வீட்டில் தனியே இருந்த ஜெயலலிதாவுக்கு வீடியோ கேசட்களை கொண்டு சென்று கொடுத்து வந் தார் சசிகலா. அந்த நட்பு இறுகி இருவரும் பிரிய முடியாத தோழி களாயினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x