Last Updated : 11 Jun, 2015 10:30 AM

 

Published : 11 Jun 2015 10:30 AM
Last Updated : 11 Jun 2015 10:30 AM

ஜூன் 14-ல் நேர்க்கோட்டில் வரும் பூமி, சூரியன், செவ்வாய்: மங்கள்யானின் 15 நாள் மவுனம் தொடங்கியது

பூமி, சூரியன், செவ்வாய் ஆகியவை வரும் 14-ம் ஒரே நேர்க்கோட்டில் வருகின்றன. இதன் காரணமாக செவ்வாயைச் சுற்றி வரும் மங்கள்யான் விண்கலத்திலிருந்து பூமிக்கு சிக்னல்கள் வருவது தடைபட்டுள்ளது.

சூரியக் குடும்பத்தில் உள்ள பூமி, செவ்வாய், வெள்ளி, வியாழன், சனி உள்ளிட்ட கோள்கள் அனைத்தும் சூரியனை மையமாக வைத்து சுற்றி வருகின்றன. அவ்வாறு சுற்றி வரும்போது சுமார் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை சூரியன், பூமி, செவ்வாய் ஆகியவை கிட்டத்தட்ட ஒரே நேர்க்கோட்டில் வருகின்றன. சூரியன் நடுவிலும், அதன் ஒரு திசையில் பூமியும், எதிர் திசையில் செவ்வாயும் இருக்கும். இந்த நிகழ்வு வரும் 14-ம் தேதி நடக்கிறது. அன்று சூரியன், பூமி, செவ்வாய் ஆகியவை ஒரே நேர்க்கோட்டில் வருகின்றன.

இந்நிலையில், இந்திய விண் வெளி ஆய்வு நிறுவனத்தின் மங்கள் யான் விண்கலம் செவ்வாயின் சுற்று வட்டப்பாதையில் இருந்து அனுப்பும் சிக்னல்கள் பூமிக்கு வந்து சேருவதில் தடை ஏற்பட்டுள்ளது. 14-ம் தேதிதான் இவை மூன்றும் நேர்க்கோட்டில் வருகின்றன. எனி னும் செவ்வாயையும் பூமியை யும் இணைக்கும் நேர்க்கோடு சூரியனின் மிக அருகில் இருப்பதால் குறிப்பிட்ட தினத்துக்கு முன்னும் பின்னுமாக சுமார் 2 வாரம் சிக்னல் கள் வருவது பாதிக்கப்படும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

இதுகுறித்து பெங்களூரில் உள்ள இஸ்ரோ செயற்கைக்கோள் மைய இயக்குநரான விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, ‘தி இந்து’விடம் கூறியதாவது:

‘‘மங்கள்யானில் இருந்து இஸ்ரோ மையத்துக்கு வரும் சிக்னல்கள் பற்றி தொடர்ந்து ஆராய்ந்து வருகிறோம். ஜூன் 8-ம் தேதி சிக்னல்கள் தடைபடுவது தொடங்கியது. 8, 9 ஆகிய தேதி களில் மிகவும் பலவீனமான சிக்னல் கள் வந்தன. 14-ம் தேதி நெருங்க நெருங்க இந்த சிக்னல்கள் மேலும் பலவீனமாகி இறுதியில் சிக்னல்கள் வருவதே நின்றுவிடும்.

மங்கள்யானில் இருந்து பூமிக் கும் பூமியிலிருந்து மங்கள்யானுக் கும் சிக்னல்கள் சென்று சேரு வதில் சுமார் 2 வாரம் தடை ஏற்படும். 2 வாரத்துக்குப் பிறகு மங்கள் யானுக்கும் பூமிக்கும் இடையே யான வழக்கமான சிக்னல் போக்கு வரத்து மீண்டும் ஏற்படும். 2 வார காலத்தில் பூமியிலிருந்து எந்த சிக்னலும் கிடைக்காத நிலையிலும் மங்கள்யான் விண்கலம் சுய மாகவே செயல்படும். அதற்கேற் பவே விண்கலத்தை வடிவமைத் துள்ளோம்.’’

இவ்வாறு மயில்சாமி அண்ணாதுரை கூறினார்.

அறிவியல் எழுத்தாளர் என்.ராமதுரை கூறியதாவது:

‘‘மங்கள்யான் பூமி இடையே இரு வழியிலும் அனுப்பப்படும் சிக்னல்கள் எதுவாக இருந்தாலும் அவை நேர்க்கோட்டில்தான் செல்லும். சூரியன், பூமி, செவ்வாய் ஒரே நேர்க்கோட்டில் வருவதால் பிரம்மாண்டமான அளவில் உள்ள சூரியன் அந்த சிக்னல்களைத் தடுத்து விடும். அதாவது, பயங்கர சக்தி கொண்ட சூரியனின் மிக அருகில் செல்லும்போது இந்த சிக்னல்கள் சூரிய சக்தியால் சிதைக்கப்பட்டு விடும்.

செவ்வாய் கிரகத்தை மங்கள் யான் தவிர நாசாவின் மார்ஸ் ஒடிசி விண்கலம், மார்ஸ் ரிகன்னைசன்ஸ் ஆர்பிட்டர் விண்கலம், மாவென் விண்கலம் ஆகிய 3 விண்கலங் களும் சுற்றிவருகின்றன. ஐரோப் பிய விண்வெளி அமைப்பின் மார்ஸ் எக்ஸ்பிரஸ் விண்கலமும் செவ்வாயைச் சுற்றி வருகிறது. மேலும் செவ்வாய் கிரக நிலப்பரப் பில் நாசாவின் கியூரியாசிடி நடமாடும் ஆய்வுக்கூடமும் செயல் பட்டு வருகிறது. இவை அனைத் துடனும் தற்போது பூமியிலிருந்து தொடர்பு கொள்ள இயலாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

செவ்வாய் கிரகம் 26 மாதங் களுக்கு ஒருமுறை சூரியனுக்கு நேர் பின்னால் அமைந்திருக்கும். ஆகவே, சுமார் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்தப் பிரச்சினை ஏற்பட்டுக் கொண்டே இருக்கும்.’’

இவ்வாறு ராமதுரை தெரிவித்தார்.

பூமி, செவ்வாய், சூரியன் ஒரே நேர்க்கோட்டில் வருவதன் காரணமாக மங்கள்யானின் 15 நாள் மவுன காலம் தொடங்கியுள்ளது. ஜூன் 22-க்குப் பிறகு மவுனம் கலைந்து மீண்டும் மங்கள்யானின் சிக்னல்கள் கிடைக்கத் தொடங்கும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x