Published : 12 Aug 2016 10:48 AM
Last Updated : 12 Aug 2016 10:48 AM

சிலை சிலையாம் காரணமாம் - 27: சிலை மீட்பின் பின்னணியில் பாஜக!

தீவிரவாத அச்சுறுத்தல் உள்ள நாடுகள் அனைத்துமே இப்போது சிலை கடத்தல் விவ காரத்தை உற்று நோக்க ஆரம் பித்திருக்கின்றன. இந்தக் கடத் தல்களின் பின்னணியில் ஐ.எஸ். தீவிரவாதிகள் இருப்பதாகச் சொல் லப்படுவதுதான் இதற்குக் காரணம். சர்வதேச கலைப் பொருள் கடத்தல் சந்தையில், தற்போது ஆண்டுக்கு ரூ.40 ஆயிரம் கோடி வர்த்தகம் நடப் பதாகக் கணிக்கப்பட்டுள்ளது.

இப்படி புரளும் பணம் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கும் கைமாறு கிறதாம். சிலைகளையும் கலைப் பொருட்களையும் பல்வேறு நாடு களுக்கு தீவிரவாதிகள் கடத்தி, அதன் மூலம் நிதி திரட்டுவதாகக் குற்றம்சாட்டுகிறது அமெரிக்கா.

ஜெர்மனி, இத்தாலி, ஆஸ்தி ரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கும் இந்த சந்தேகம் இருப்பதால் இவர்களும் தங்கள் நாடுகளுக்குள் சிலைகள், கலைப் பொருட்கள் கடத்தி வரப்படும் வழிகளை அடைக்கத் தொடங்கியுள்ளனர்.

காங்கிரஸ் காலத்தைவிட பாஜக ஆட்சியில், கடத்தப்பட்ட சிலைகளை மீட்கும் விஷயத்தில் அதிக அக்கறை எடுக்கப்படுகிறது. இதன் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ். நிழல் இருக்கிறது. உருவேற்றப் பட்ட வழிபாட்டுச் சிலைகள், வெளிநாடுகளில் விற்பனை பண்ட மாகவும் அலங்காரப் பொரு ளாகவும் மதிப்பிடப் படுவதை ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் வெறுக்கிறார்கள். அதனால், வெளிநாடுகளில் உள்ள இந்தியச் சிலைகளை மீட்கும் விஷயத்தில் இவர்கள் மறைமுகமாக மெனக் கெட்டு வருகிறார்கள்.

தமிழக அறநிலையத் துறைக்குச் சொந்தமான கோயில் களில் மட்டுமே, சுமார் ஒரு லட்சம் ஐம்பொன் சிலைகள் உள்ளன. ஆனால், இவைகளைப் பற்றிய விவரங்கள் அந்தந்தக் கோயில் சார்ந்தவர்களுக்கே சரிவரத் தெரிய வில்லை. இது குறித்துப் பேசிய வரலாற்று ஆய்வாளர் பேராசிரியர் ஜெ.ஆர்.சிவராமகிருஷ்ணன். ‘‘மெத்தப்படித்த நமது மேதாவிகள் சிலர், நமது கோயில் சிலைகளைப் பற்றியும் அவைகளின் தொன்மை குறித்தும் புத்தகங்களை எழுதி வெளியிடுகிறார்கள். அதில் உள்ள தகவல்களை வைத்துக் கொண்டுதான், கடத்தல்காரர்கள் கடத்தல் திட்டம் போடுகிறார்கள்.

தொல்லியல் துறை அதி காரிகள் பணி ஓய்வுபெற்றதும் தன்னார்வத் தொண்டு நிறு வனங்களைத் தொடங்கி, வெளி நாடுகளில் இருந்து நிதி பெறு கிறார்கள். இவர்களில் ஒருசிலர், பணி காலத்தில் சேகரித்து வைத் திருந்த கோயில் சிலைகள், தொல்லியல் சின்னங்கள் உள் ளிட்டவற்றின் தகவல் களை வெளி நாடுகளுக்கு தந்து, அதன்மூலம் பலன் அடைகிறார்கள்.

இன்னும் சிலர் கலைப் பொருள் வியாபாரத்தில் உள்ள ‘ஆர்ட் கேலரி’களுக்கு நம் நாட்டுச் சிலைகளைப் பற்றி ‘கேட்லாக்’குகளை எழுதிக் கொடுத்தும் சம்பாதிக்கிறார்கள். இந்தப் பட்டியலில் ‘பத்ம’ விருது பெற்றவர்களும் இருக்கிறார்கள். எனவே, தொல்லியல் துறையில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற அதிகாரி கள் இதுபோன்ற வேலைகளில் ஈடுபட தடைவிதிக்க வேண்டும்.

எகிப்து மற்றும் சுமேரிய நாக ரிகங்கள் சம்பந்தப்பட்ட தொன்மை யான விஷயங்கள் அனைத்தை யும், பொதுமக்களுக்கு பகிரங் கப்படுத்தப்பட்டதால்தான் அவர்கள் அவற்றை தங்களின் பாரம்பரியச் சொத்தாக பாது காக்கிறார்கள். ஆனால், நமது பாரம்பரியச் சின்னங்கள் குறித்து நமது மக்களுக்கு சரி வரத் தெரிவிக்கப்படவில்லை. அதனால்தான், தீனதயாள், லெட்சுமி நரசிம்மன் உள்ளிட்ட வர்களிடம் இருந்து மீட்கப்பட்ட சிலைகளை ஏதோ தனிமனித சொத்து போல நாம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறோம்.’’ என்றார்.

ஜெ.ஆர்.சிவராமகிருஷ்ணன்

1848-ல் இருந்து 1925 வரை காஷ்மீரை ஆட்சி செய்தவர்  பிரதாப் சிங் மகாராஜா. 1898-ல் இவர் தனது கோடைகால விருந்தினர் மாளிகையை ஒரு மியூசியமாக மாற்றி பழமையான கலைப் பொருட்களை அங்கு கொண்டுவந்து குவித்தார். துணி வகைகள், பழங்கால போர் கருவிகள், சிலைகள் உள்ளிட்ட சுமார் 300 - 400 ஆண்டுகள் பழமையான 80 ஆயிரம் கலைப் பொருட்கள் இங்கு சேகரித்து வைக்கப்பட்டுள்ளன. சிலைகள் மட்டுமே 1,992 உள்ளன.

இங்கிருந்த 56 பழமையான ஓவியங்கள், நாகப்பட்டினம் புத்த விகாரையில் இருந்த ஐம் பொன் புத்தர் சிலை, ஜெயின் சிலை, ஔரங்கசீப் வைத்திருந்த தங்கத்தால் ஆன ‘குரான்’ உள் ளிட்டவைகள் எப்போதோ காணாமல் போய்விட்டன. இவை கள் 1976 வரை அங்கு இருந் ததற்கான ஆவணங்கள் உள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கணக்கெடுத்தபோது, இவைகள் அனைத்தும் காணாமல் போனது தெரியவந்தது.

இதனிடையே, காஷ்மீர் மியூ சியத்தில் காணாமல் போன ஓர் ஓவியமானது 1978-ல் நியூ யார்க்கில் கலைப் பொருட்கள் சந்தையில் ஏலத்துக்கு வந்தபோது பிடிபட்டது. அதேபோல், நாகப் பட்டினம் புத்த விகாரையில் இருந்த புத்தர் சிலை ஒன்றை 2006-ல் சிங்கப்பூர் ஏசியன் சிவிலை சேஷன் மியூசியத்துக்கு விற்றி ருக்கிறார் சுபாஷ் சந்திர கபூர்.

இந்தச் சிலை காஷ்மீர் மீயூசியத்தில் இருந்ததுதானா என இப்போது விசாரணைகள் நடக்கின்றன. அது உறுதியானால் காஷ்மீர் மியூசியத்தில் இருந்து அரிய கலைப் பொக்கிஷங்கள் கடத்தப்பட்டதிலும் கபூருக்கு உள்ள தொடர்புகள் அம்பலத் துக்கு வந்துவிடும்.

- சிலைகள் பேசும்…

முந்தைய அத்தியாயம்: >சிலை சிலையாம் காரணமாம் - 26: சிலைக்கடத்தலும் ஐஎஸ் அச்சமும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x