Published : 19 Jul 2015 01:32 PM
Last Updated : 19 Jul 2015 01:32 PM

குப்பவண்டி டாட் காம்.. மாத்தி யோசித்து சாதித்த எம்.பி.ஏ. இளைஞர்கள்

வீடுகளில் சேரும் பழைய பொருட்களை எடைக்கு வாங்கி விற்பதற்கென்றே 'குப்பவண்டி டாட் காம்' என்ற இணையதளத்தை உருவாக்கி செயல்படுத்தி வருகின்றனர் திருச்சியை சேர்ந்த எம்.பி.ஏ. பட்டதாரி இளைஞர்கள்.

வேஸ்ட் பேப்பர் மற்றும் பயன்பாடு இல்லாத பிளாஸ்டிக் கழிவுகள், எலக்ட்ரானிக் பொருட் கள் எல்லோருடைய வீட்டிலும் ஏதாவது ஓர் இடத்தை அடைத்துக் கொண்டிருக்கும். இதுபோன்ற சூழ்நிலையில் இருப்பவர்கள் தங்கள் வீட்டில் சேரும் பழைய பொருட்களை விற்பதற்கு ஏதுவாக இருக்கிறது 'குப்பவண்டி டாட் காம்'. எம்.பி.ஏ. பட்டப்படிப்பு முடித்த சந்திரகுமார், காமராஜ், சசிகுமார், சதீஸ்குமார் ஆகிய நண்பர்களின் வித்தியாசமான யோசனையில் உருவானது இது.

இவர்களின் முயற்சியில் 2012-ம் ஆண்டு சாதாரணமாக ஆரம் பிக்கப்பட்ட குப்பவண்டி டாட் காமில் இப்போது ஆயிரக்கணக்கானோர் உறுப்பினர்கள். திருச்சியில் கே.கே. நகர், கருமண்டபம், தில்லைநகர், எ.புதூர் என ஏரியா வாரியாக தெருப் பெயர்கள், டாட் காமில் இருக்கின்றன. என்ன விலைக்கு பழைய பொருட்களை வாங்குகிறார் கள் என்ற விலைப் பட்டியல் மற்றும் குறிப்பிட்ட ஏரியாவுக்கு குப்பவண்டி வரும் கிழமை குறித்த தகவலும் இடம்பெற்றுள்ளது.

திருச்சி நகர மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ள குப்பவண்டி டாட் காம் குறித்து 'தி இந்து'விடம் சந்திரகுமார் கூறியதாவது:

''நியூஸ் பேப்பர் போடுவது உள்ளிட்ட பகுதிநேர வேலை பார்த்து அதன் மூலம் படித்தவன் நான். அப்போது பழைய பேப்பரை எடைக்கு போட்டு கொடுக்கும் படி பலர் என்னிடம் தருவார்கள். அப்படிதான் இந்த ஐடியா எனக்கு வந்தது. நண்பர்களிடம் இது குறித்து தெரிவிக்க, குப்பவண்டி டாட் காம் உருவானது. ஆரம்பித்தபோது மக்களிடம் பெரிதாக வரவேற்பு இல்லை. அதனால் சனி, ஞாயிறு மட்டும் இருசக்கர வாகனத்தில் சென்று பொருட்களை சேகரித்து வருவோம். மற்ற நாட்களில் வேறு வேலைக்கு சென்றுவிடுவோம்.

கடந்த 2 ஆண்டுகளில் இணைய தள பயன்பாடு அதிகரித்ததன் விளைவாகவும், எங்களிடம் ஒரு முறை வாடிக்கையாளராக பயனடைந்தவர்கள் தங்களுக்கு தெரிந்த பலரை அறிமுகம் செய்து வைத்ததாலும் கொஞ்சம் கொஞ்சமாக குப்பவண்டி டாட் காம் திருச்சி மக்களிடையே பிரபலமானது. தற்போது பார்த்த வேலையை விட்டுவிட்டு முழு நேரமாக இந்த தொழிலில் பிஸியாக இருக்கிறோம்.

திங்கள் முதல் ஞாயிறு வரை ஒவ்வொரு நாளும் ஒரு ஏரியாவுக்கு குப்பை வண்டியை எடுத்துச் செல்கிறோம். இப்போது சரக்கு ஆட்டோவில் எடுக்கும் அளவுக்கு வளர்ந்திருக்கிறோம். இது தவிர திருச்சியில் 2 இடங்களில் கிடங்கு கள் உள்ளன.

எங்களுக்கு லாபம் கிடைப்பது ஒருபுறம் இருந்தாலும் எங்களால் முடிந்த வரை பிளாஸ் டிக்கை மறுசுழற்சி செய்ய மற்றும் சுற்றுச்சூழலைக் காக்க சிறு முயற்சி செய்கிறோம் என்பது மனதுக்கு நிறைவாக உள்ளது. எந்த தொழிலையும் இன்றைய நவீன காலத்துக்கு தகுந்தாற்போல் மாற்றி மக்களிடம் கொண்டு சேர்த்தால் நிச்சயமாக சாதிக்கலாம்'' என்றார்.

இணையதள முகவரி >http://kuppavandi.com/

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x