Published : 15 Apr 2015 12:00 PM
Last Updated : 15 Apr 2015 12:00 PM

வெற்றிச் சூட்சமம்

மக்களின் தேவையையும் வரக்கூடிய சூழலையும் முன்கூட்டித் திட்டமிட்டு உற்பத்தியில், தொழில்நுட்பத்தில், சந்தை வாய்ப்புகளில் விவசாயிகளுக்கு மத்திய - மாநில அரசுகள் வழிகாட்ட வேண்டும்.

சந்தைத் தேவையை மட்டும் விவசாயிகள் மேல் திணிப்பதைக் கைவிட்டு, உண்மையான தொழில்நுட்ப ஆலோசனையை வழங்குவதோடு, உற்பத்திக் கொள்முதல் மற்றும் - சந்தைப்படுதுதல் போன்றவற்றில் அரசின் பங்கேற்பு உடனடி தேவை.

உற்பத்தியில் ஈடுபடுவோருக்கு வட்டி இல்லாக் கடன் என்பதோடு இல்லாமல், விவசாயத்துக்கு என்று தனி நிதிநிலை அறிக்கை வரும் காலங்களில் கட்டாயம் தாக்கல் செய்யப்பட வேண்டும்.

குஜராத் விவசாயிகளின் வீட்டில் இரவில் தங்கி வெற்றிச் சூட்சமத்தைக் கற்றுக்கொண்டாரே பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி, அப்படியொரு தீர்க்கமான பார்வை ஆட்சியில் உள்ளவர்களுக்கு வேண்டும்.

- விஜய் ஆனந்த் சிதம்பரம்,போத்தனூர்.

***

விவசாயக் களத்தின் மேல் அதீத ஈடுபாடும், அதில் கடின உழைப்பை முதலீடு செய்து வெற்றியும் பெற்ற நூற்றுக் கணக்கான அனுபவ விவசாயிகள் நம் நாட்டில் இருக்கிறார்கள்.

அவர்களுடைய விலைமதிப்பற்ற அனுபவத்தையும், நவீன விவசாய வழிமுறைகளையும் அரசு ஒருங்கிணைத்தாலே வேளாண்மையும் நாடும் மேன்மை பெறும்.

அதை விடுத்து பழங்கதைகளுக்குக் கண், காது, மூக்கு வைத்துப் பேசி அஞ்ஞானத்தை வளர்ப்பது விவசாயிகளுக்கும், விவசாயத்துக்கும் எந்தவொரு பலனையும் தராது. மாறாக, அது உலக நாடுகள் மத்தியில் நமக்கு அவமானத்தையும், நாட்டுக்குப் பின்னடைவையுமே பெற்றுத்தரும்.

- எஸ்.எஸ். ரவிக்குமார், கிருஷ்ணகிரி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x