Published : 01 Oct 2014 10:44 AM
Last Updated : 01 Oct 2014 10:44 AM

வரலாறு எடுத்துக்கொண்டது

‘எங்களுக்கு என்ன தண்டனை குன்ஹா?’ கட்டுரை இன்றைய அரசியல் அவலங்களைப் படம்பிடித்துக் காட்டியது. காமராஜர் அரசியலில் அப்பழுக்கற்ற தலைவராக ஆட்சி செய்தார். அவர் மரித்தபோது, இருந்த வீட்டை வீட்டின் உரிமையாளர் எடுத்துக்கொண்டார்.

பயன்படுத்திய காரை கட்சிக்காரர்கள் எடுத்துக்கொண்டார்கள். உடமைகளை அரசு எடுத்துக்கொண்டது. ஆனால், காமராஜர் என்ற பெயரை வரலாறு எடுத்துக்கொண்டது. இறந்தபோது அவர் சேர்த்த சொத்து மதிப்பு வெறும் 120 ரூபாய். ஊழல் இல்லை... லஞ்சம் இல்லை... ஓட்டுக்குச் சன்மானம் இல்லை. அரசியல் நாகரிகம் இருந்தது.

வெற்றியோ தோல்வியோ ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் தலைவனுக்கும் இருந்தது தொண்டனுக்கும் இருந்தது. இன்றைக்கு அரசியல்வாதிகள் நம்மை எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடியவர்களாக மாற்றியிருக்கிறார்களே… விளைவு, தலைவர்கள் இதுபோன்ற வழக்குகளில் சிக்கும்போது பொதுச் சொத்துகளுக்குச் சேதம் விளைவிப்பது, அரசு இயந்திரங்களை முடக்குவது எனத் தனது விசுவாசத்தைக் காட்டும் களமாக மாற்றியிருக்கிற தலைவர்களை என்ன சொல்வது?

- மு.க. இப்ராஹிம்,வேம்பார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x