Published : 26 Sep 2016 06:08 PM
Last Updated : 26 Sep 2016 06:08 PM

பொறியியல் கல்வியும் பெற்றோரும்

கேட்டவர்களுக்கு எல்லாம் பொறியியல் கல்லூரி தொடங்க தாராளமாக அங்கீகாரம் அளித்துவிட்டு, கல்வித் தரம் சீர்கெட்ட நிலையில், தற்போது அதைச் சரிசெய்ய அகில இந்தியத் தொழில்நுட்பக் கழகம் முயற்சி செய்வது, கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வதற்கு ஒப்பானது. கணக்கின்றிப் பெருகிய பொறியியல் கல்லூரிகளும், பெற்றோர்களின் பேராசையும் எத்தனை ஆயிரம் மாணவர்களின் தனிப்பட்ட திறமைகளையும், உயர்ந்த எண்ணங்களையும் முளையிலேயே கிள்ளி எறிந்திருக்கிறதோ? சம்பாதிக்கக் கற்றுத்தரும் கல்வியைவிட, மனிதனை மனிதனாக உருவாக்கக்கூடிய, விவேகத்தையும், சகிப்புத்தன்மையையும் வளர்க்கக்கூடிய கல்விதான் தேவை என்பதை மாணவர்களும், பெற்றோரும் உணர வேண்டும்.

- ஆர்.பிச்சுமணி, திப்பிராஜபுரம்.



கதையும் காதலும்

கதைகள் மீது ஒருவிதமான தீராக் காதல் நமக்கு இருந்துகொண்டே இருக்கிறது. குழந்தைப் பருவத்தில் தொடங்கும் இக்காதல், முற்றுப் பெறுவதேயில்லை. எஸ்.ராமகிருஷ்ணன் எழுதும் ‘கடவுளின் நாக்கு’ தொடரில் சொல்லப்படும் கதைகள் எளிமையாக இருப்பதுடன், பூமியின் ஒரு குறிப்பிட்ட பகுதியின் சிறப்பை வெளிப்படுத்துவதாக இருப்பது மேலும் சிறப்பு.

- ஜெ.செல்வராஜ், வேடசந்தூர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x