Published : 27 Apr 2016 11:25 AM
Last Updated : 27 Apr 2016 11:25 AM

நல்ல பணி!

பெங்களூருவில் உள்ள அல்சூரில் சூறையாடப்பட்ட நூலகத்தைப் புனரமைக்கும் நடவடிக்கையில் தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை ஈடுபட்டிருப்பது மகிழ்ச்சி தருகிறது. ‘நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும் பண்புடையாளர் தொடர்பு’ எனும் வள்ளுவன் வாய்மொழிக்கு இணங்க நூலகங்கள் கட்டி காக்கப்பட வேண்டும். கணினி உலகில் மக்கள் நல்ல நல்ல நூல்களை நாடிச் சென்று படிப்பது அரிதாகிவிட்டது. என்றாலும் தமிழ் ஆய்வாளர்கள் இதுபோன்ற நூலகங்களில் தமது ஆய்வுகளை மேற்கொள்கிறார்கள். அல்சூரில் உள்ள ஐம்பது ஆண்டுகள் பழமையான திருக்குறள் மன்ற நூலகத்தை மீண்டும் செயல்பட வைப்பது, தமிழ் ஆய்வாளர்களுக்கு மிகுந்த பலனளிக்கும்!

- கா.ந. கல்யாணசுந்தரம், சென்னை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x