Published : 26 Sep 2016 09:56 AM
Last Updated : 26 Sep 2016 09:56 AM

தேவை.. இன்னும் சேகர்கள்!

சட்டம் - ஒழுங்கு சரியில்லை என்று குறைகூறும் நாம், பொதுவெளியில் ஒரு கொலை, கொள்ளை அல்லது ஏதேனும் அத்துமீறல் நடந்தால், குறைந்தபட்சம் கூச்சல் போட்டாவது, அக்குற்றச் செயலைத் தடுக்க முயல்கிறோமா என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இந்த வகையில் தன் உயிரையும் பொருட்படுத்தாது திருடர்களிடமிருந்து ஒரு பெண்ணைக் காப்பாற்றிய சேகர், பாராட்டப்பட வேண்டியவர். இதுபோன்ற சம்பவங்களில் மக்கள் ஒருங்கிணைவதன் அவசியத்தையும் வலியுறுத்தியிருக்கிறது சஞ்சீவிகுமாரின் கட்டுரை.

- தமிழ்.பிரபாகரன், பேளுக்குறிச்சி.



வீரர்.. தீரர்.. சேகரது அதி அற்புத சாகசங்களைப் படிக்கையில் மெய்சிலிர்த்தது. வன்முறைக் கலாச்சாரமும், பெண்கள் மேல் ஏவப்படும் கொலை முயற்சிகளும் பரவிக் கிடக்கையில் ஊருக்கு ஒரு சேகர் போதாது.. தெருவுக்கு ஒரு சேகர் தேவை.

- ச.சீ.இராஜகோபாலன், சென்னை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x