Published : 28 Jun 2016 12:46 PM
Last Updated : 28 Jun 2016 12:46 PM

கண்காணிப்பு தேவை

தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு நிலை குறித்து சரியான நேரத்தில் தலையங்கம் எழுதப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஐ.டி. நிறுவன ஊழியர் சுவாதி பட்டப்பகலில் கொலை செய்யப்பட்ட சம்பவம், சென்னை நகரையே உலுக்கியுள்ளது. ரயில் பயணிகளின் பாதுகாப்புக்கு ஒதுக்கப்படும் நிதி, முறைப்படி செயல்படுத்தப்படுகிறதா என்ற ஐயம் ஏற்படுகிறது.

சென்னை உள்ளிட்ட அனைத்து ரயில் நிலையங்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டிய அவசர காலகட்டத்தில் இருக்கிறோம் நாம்.

பெரும்பாலான ரயில் நிலையங்களில் காவலர்கள் ரோந்துப் பணியில் இருப்பதில்லை. குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்த, ரயில்வே காவலர்கள் பற்றாக்குறையைப் போக்க வேண்டும்.

- கா.ந.கல்யாணசுந்தரம், சென்னை.

*

விபத்தைத் தவிர்ப்போம்!

விபத்துகள் குறித்த, ‘இன்னும் எவ்வளவு உயிர்கள் வேண்டும்?’ தலையங்கம் அருமை. 18 வயது முதல் 30 வயதுக்குள் உள்ள இளைஞர்கள் விபத்தின் மூலம் தங்கள் வாழ்க்கையை இழப்பது, குடும்பம் மட்டுமின்றி சமூகத்துக்கே பேரிழப்பு.

நம்முடைய பழைமையான சட்ட விதிகளும் இதற்கொரு காரணம். இரு சக்கர வாகன விபத்துகளில்தான் அதிகமானோர் உயிரிழக்கிறார்கள். ஆனால், விதிமீறும் இருசக்கர வாகன ஓட்டிகளிடம் 100 ரூபாய் அபராதம் வசூலித்தால், அவர்கள் திருந்திவிடுவார்களா? இந்தியா போன்ற நாட்டில் சாலை விதிகள் தொடர்பான சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும். அதுவே நிரந்தரப் பலன் தரும்.

- மா.கார்த்திகேயன், ஆர்.எஸ்.மங்கலம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x