Published : 05 Mar 2015 10:48 AM
Last Updated : 05 Mar 2015 10:48 AM

ஊடக தர்மத்தைக் காப்பாற்றும் ‘தி இந்து’

இந்தியாவின் அவலங்களை (எந்த நாட்டில்தான் இவை இல்லை, இங்கிலாந்து உட்பட?) உலகெங்கும் பரப்புவதை ஒரு தர்மமாகவே பிபிசி ஒரு ஐம்பது/அறுபது ஆண்டுகளாகச் செய்துவருகிறது.

எனவே, இந்த நேர்காணலும், அதன் ஒளிபரப்பும் நம்மை வியப்பில் ஆழ்த்தவில்லை. ஆயினும், நாம் கேட்க வேண்டிய கேள்வி ஒன்று உள்ளது, வெள்ளைக்காரர்களுக்கு மட்டும் இந்தியாவில் எங்கு செல்லவும், என்ன செய்யவும் நம் அரசாங்கத்திடமிருந்து எப்படி சுலபமாக அனுமதி கிடைத்துவிடுகிறது?

பாஜக எதிர்ப்பாளர்கள் அவசரப்பட்டுத் துள்ளுவதற்கு முன், இந்த அனுமதி 2013-ல் வழங்கப்பட்டது என்பதை நினைவில் இருத்தவும்.

- சுப்ரமண்யம்,‘தி இந்து’ இணையதளம் வழியாக...

உலக சமூக அரங்குக்கு எடுத்துச்செல்ல எண்ணற்ற அவலங்கள் உங்கள் நாட்டில் இருப்பதைப் புறந்தள்ளி இதற்காக இந்தியாவைத் தேர்வு செய்து ‘இந்தியாவின் மகள்’ என்று பெயரும் இட்டு வெளியிட்டுப் பெருமை அடைகிறீர்கள். முதலில் உங்களை உற்றுநோக்குங்கள்.

- ஒரு வாசகர்,தி இந்து’ இணையதளம் வழியாக...

ஊடக தர்மத்தைக் காப்பாற்றும் ‘தி இந்து’

கொடிய குற்றத்தைச் செய்தவன் அளித்திருக்கும் பேட்டியின் விவரங்களை வெளியிடாமல், அந்தப் பேட்டியின் தாக்கம் பற்றிய செய்திகளை மட்டுமே வெளியிடும் ‘தி இந்து’ நாளிதழுக்குப் பாராட்டுக்கள்.

தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பின்பும் குற்றவாளியின் மனம் வருந்தவோ திருந்தவோ இல்லை என்பதுதான் உண்மை. இவனைப் போன்றவர்களின் சவடால் பேச்சுக்களை கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் ஊடகங்கள் அனுமதித்தால், பெண்களை வேட்டையாடும் மனம் படைத்த இன்னும் பல மிருகங்களுக்குத் தூண்டுதலாகத்தான் அமையும்.

- வி.சுதாகர்,குரோம்பேட்டை

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x