Published : 27 Oct 2015 11:16 AM
Last Updated : 27 Oct 2015 11:16 AM

ஆர்வம் கொண்ட அந்த மாணவர்கள்!

கடந்த ஞாயிறு அன்று காரைக்குடியில் நடைபெற்ற வாசகர் திருவிழாவில் பங்கேற்ற என் கவனத்தை ஈர்த்தார்கள் - பார்வையாளர்கள் வரிசையில் துறுதுறுவென அமர்ந்திருந்த பள்ளிச் சிறுவர்கள் 11 பேர்.

அவர்கள் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளி என்ற அரசு உதவி பெறும் பள்ளியில் இருந்து வந்தவர்கள் என்று அறிந்துகொண்டேன்.

ஒன்றாம் வகுப்பு முதல் ஆறாம் வகுப்பு வரையில் வகுப்புக்கு ஒருவர் என்ற வீதத்தில் ஜெயஸ்ரீ, வெங்கட்ராமன், ஜனஸ்ரீ, அய்யப்பன், கார்த்திகேயன், உமாமகேஸ்வரி ஆகியோரும், ஏழாம் வகுப்பு சார்பில் பரமேஸ்வரி, ராமேஸ்வரி, எட்டாம் வகுப்பு சார்பில் தனம், பூவதி, கண்ணதாசன் என அவர்களை அறிமுகப்படுத்திக்கொண்டார்கள்.

தங்களது கதை, ஓவியங்களை ‘தி இந்து’வின் மாயாபஜார் இணைப்பிதழில் வெளியிட்டு ஊக்கப்படுத்திவருவதால், வாசகர் திருவிழாவுக்கு உற்சாகமாகக் கிளம்பிவந்ததாக அந்தக் குழந்தைகள் சொன்னபோது வியப்பாக இருந்தது.

பாடத்துக்கு வெளியே சென்று பொது விஷயங்களைப் பற்றி மாணவர்களுடன் பேச ’தி இந்து’ தமிழ் நாளிதழ் உதவிபுரிவதாகச் சொன்னார் அவர்களை அழைத்து வந்திருந்த ஆசிரியை கலாவதி. இவர்களுடன் ஒரு குழந்தையின் தாய் சித்ரா, மற்றொரு குழந்தையின் பாட்டி சீதாலட்சுமி ஆகியோரும் விழாவுக்கு வந்திருந்தது என்னை நெகிழவைத்தது.

- ராமநாதன்,திருப்பத்தூர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x