Published : 21 Jun 2018 10:39 AM
Last Updated : 21 Jun 2018 10:39 AM

பூச்சிகளால் வாழும் உலகம்!

வண்ணத்துப்பூச்சிகளும் தேனீக்களும் இல்லையென்றால் நாம் பட்டினி கிடக்கக்கூடும். இவற்றை நம்பித்தான் உலகின் 75% பயிர் விளைச்சல் இருக்கிறது.

வண்ணத்துப்பூச்சிகள், தேனீக்கள், பறவைகள், வௌவால்கள் போன்றவை மகரந்தச்சேர்க்கைக்குப் பெருமளவில் உதவுகின்றன. மகரந்தச்சேர்க்கைக்கு உதவும் இத்தகைய ஜீவராசிகள் சமீபகாலங்களில் வன அழிப்பு மற்றும் வளர்ச்சித் திட்டங்களால் பெருமளவில் அழிந்துவருகின்றன. இத்தகைய அழிவுகளால் இந்தியா 5லிருந்து 8 சதவீத பயிரிழப்புக்கும், பிற ஆசிய நாடுகள் 15லிருந்து 25 சதவீத பயிரிழப்புக்கும் ஆளாக நேரிடும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x