Published : 22 May 2018 09:12 AM
Last Updated : 22 May 2018 09:12 AM

நீரிழிவு சிகிச்சையில் வைட்டமின் டி

ணையம்தான் இன்சுலினைச் சுரக்க உதவுகிறது, சேமித்து வைத்துக்கொள்கிறது, தேவைப்படும்போது அளிக்கிறது. அந்தக் கணையத்தின் பீட்டா செல்கள் சேதம் அடையும்போது இன்சுலின் சுரப்பு, சேமிப்பு, வழங்கலில் தடங்கல் ஏற்படுகிறது. இன்சுலின் சுரப்பது நின்றால் ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த முடியாமல் அபாய கரமான அளவுக்கு அது உயர்ந்துவிடுகிறது.

நீரிழிவு தொடர்பான ஆய்வில் ஈடுபட்டுள்ள அமெரிக்காவின் ‘சால்க்’ ஆய்வு நிறுவன விஞ்ஞானிகள், சேதமடைந்த பீட்டா செல்களை (உயிரணுக்கள்) அவற்றில் உள்ள வைட்டமின் டி (உயிர்ச்சத்து) சீர்படுத்துவதைக் கண்டு வியப்பில் ஆழ்ந்திருக்கிறார்கள். இதன் மூலம், மரபணுக் கட்டுப்பாடுகளிலும் இத்தகைய சோதனைகளைச் செய்ய முடியும் என்ற புதிய பாதை புலப்பட்டிருக்கிறது. கருவின் குருத்தணுக்களிலிருந்து பீட்டா செல்கள் உருவாக்கப்பட்டபோது ‘ஐபிஆர்டி9’5 என்ற கூட்டுப் பொருளை அடையாளம் கண்டுள்ளனர். அது வைட்டமின் டி யுடன் சேர்ந்து பீட்டா செல்கள் உயிர்த்திருப்பதை மேம்படுத்துகிறது என்பதையும் கண்டறிந்துள்ளனர்.

பீட்டா செல்களில் வைட்டமின் டி எப்படி வினையாற்றுகிறது என்று ஆராய்ந்தபோது இந்தக் கண்டுபிடிப்பு நிகழ்ந்ததாக ஆய்வுக் குழுவைச் சேர்ந்த சோங் வெய் தெரிவித்துள்ளார். தொற்றுநோயாளிகளின் ரத்த மாதிரிகளை ஆய்வுசெய்தபோது, ரத்தத்தில் வைட்டமின் டி அடர்த்தியாக இருந்தால் நீரிழிவு வருவது குறைவாக இருப்பது தெரிந்தது. அதைத் தொடர்ந்து, வைட்டமின் டிக்கும் நீரிழிவுக் கட்டுப்பாட்டுக்கும் உள்ள நேரடித் தொடர்புக்காக ஆய்வு விரிவுபடுத்தப்பட்டது. பிறகுதான் அந்த சூட்சுமம் புரிந்தது. இப்போதைக்கு வைட்டமினில் இருக்கும் பீட்டா செல்களைக் காப்பாற்றும் உத்தி தெரிந்திருக்கிறது. புற்றுநோய் உள்ளிட்ட வேறு பல சிகிச்சைகளுக்கும் இது விரிவுபடுத்தப்படும் என்று நம்பிக்கை தெரிவித் திருக்கிறார் சோங் வெய்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x