Published : 23 Apr 2018 08:41 AM
Last Updated : 23 Apr 2018 08:41 AM

இப்படிக்கு இவர்கள்: தார்மிக உரிமை இருக்கிறதா?

சசிபாலன்,

‘தி இந்து’ இணையதளத்தில்…

தார்மிக உரிமை இருக்கிறதா?

மிழகப் பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்களில் நடைபெறும் பாலியல் அத்துமீறல்களுக்கு முதன் மைக் காரணம் ஆட்சியாளர்கள்தான் என்பதில் மாற்று கருத்து இல்லை.ஏனெனில் தகுதியும் திறமையும் உடையவர்களுக்குப் பணி நியமனம் வழங்காமல், திறமையற்றவர்களிடம் லட்சக்கணக்கில் கையூட்டாகப் பெற்றுக்கொண்டு பணி நியமனம் வழங்குவதால், இதுபோன்ற கொடுமைகள் தாராளமாக நடைபெறுகின்றன. பணத்தைப் பெருமளவில் கையூட்டாகப் பெற்றுக்கொண்டதால், இதுகுறித்து கேள்வி கேட்கும் தார்மிக உரிமையை கூட முற்றிலும் இழந்துவிடுகின்றனர். அப்புறம் எப்படி காத்திரமான நடவடிக்கைகளை நாம் எதிர்பார்க்க முடியும்?

கு.மா.பா.கபிலன், சென்னை.

பாவேந்தரின் வரிகளைத் திருத்த மறுத்த கு.மா.பா.

விஞர் வேலூர் நக்கீரன் கட்டுரையின் மூலம் புரட்சிக் கவிஞரின் திரையுலக வரலாற்றுத் தகவல்களைத் தெரிந்துகொண்டேன். பாரதியின் வரலாற்றைத் திரைப்படமாக எடுக்க விளைந்த ஆசை நிறைவேறாமல் போனதையும், இலக்கியப் படைப்பான ‘பாண்டியன் பரி’சைத் திரைப்படமாக எடுக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சி தடைப்பட்டதையும் படித்தபோது மனம் கனத்தது. புரட்சிக் கவிஞர் தொடங்கி வைத்த தமிழ்க் கவிஞர் மன்றத்தை அவரது மாணாக்கரான பொன்னடியான், தமிழ்க் கவிஞர் பெரு மன்றமாக ஆக்கி, கவிஞர்களின் பாசறைக் களமாக அரை நூற்றாண்டுக்கும் மேலாக நடத்திவருவது கவிஞர் பாரதிதாசனின் பெருமைக்குக் கட்டியம் கூறுகிறது. புரட்சிக் கவிஞரின் கதையில் உருவான 'பொன்முடி' திரைப்படத்தில் அவர் எழுதிய ஒரு பாடல் வரியைத் திருத்தம்செய்ய வேண்டுமென எங்கள் தந்தை கு.மா.பா.வை அணுகினார் படத் தயாரிப்பாளர். “அவரது அடிகளை வணங்கும் கவிஞன் நான் - திருத்தம் செய்ய இயலாது” என எங்கள் தந்தை மறுத்ததும், மறக்க முடியாதவை.

தூ.சடகோபன், தலைவர்,

புதுச்சேரித் தன்னுரிமைக் கழகம்.

நூலகம் அமைக்க விரும்பினார் பாவேந்தர்

‘பாண்டியன் பரிசு' திரைப்படம், தன் குரு நாதர் வாழ்க்கை வரலாற்றுப் படம் ஆகியவற்றை எடுக்க வேண்டும் என்பதோடு திரையுலகைச் சீர் செய்யவேண்டும் என்ற எண்ணங்களிலும் பாரதிதாசன் அங்கு சென்றார். அவற்றில் எதுவுமே நிறைவேறவில்லை. திரைப்படங்களின் மூலம் கிடைக்கின்ற வருவாயைக் கொண்டு சென்னையில் தமிழர்களுக்கு அறிவொளியூட்டும் பெரிய நூலகம் ஒன்றை மையமான இடத்தில் அமைக்க விரும்பினார். புதுச்சேரியிலும் பெரிய நூலகமொன்றைத் தன் பெயரில் அமைத்து பலரும் வந்து படிக்க வேண்டும் அதுதான் என் இறுதி ஆசை என்று மருமகன் மா.அண்ணாதுரையிடம் சொல்லியிருக்கிறார். தமிழக, புதுச்சேரி அரசுகள் பாரதிதாசனின் விருப்பங்களை நிறைவேற்ற வேண்டும்.

ரா. ரேவதி, ஈரோடு.

பெண்களுக்கு முன்மாதிரி

ப்ரல் 19-ல் வெளியான ‘மரணம் ஒரு கலை’ தொடரில் மணலூர் மணியம்மா பற்றிய தகவல்கள் நெகிழவைத்தன. சமுதாயத்தில் ஏற்படுகிற பல தடைகளையும் தகர்த்துக்கொண்டு, தன்னந்தனியாக தற்காப்புக் கலைகளைக் கற்றுக்கொண்டு, சாதி ஏற்றத்தாழ்வுக்கு எதிராகவும், பண்ணை அடிமைத்தனத்துக்கு எதிராகவும் போராடிய மணலூர் மணியம்மாவின் துணிச்சல் அபாரமானது. அவர் போராடிய காலத்தில் தொடுத்த எண்ணற்ற வழக்குகளிலிருந்தும், ஒன்றரை ஆண்டுகள் சிறையில் இருந்து கஷ்டப்பட்டும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவே போராடியிருக்கிறார். சாதிக்க நினைக்கும் பெண்களுக்கு ஒரு முன்னுதாரணம் அவர்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x