Published : 08 Dec 2017 09:34 AM
Last Updated : 08 Dec 2017 09:34 AM

இப்படிக்கு இவர்கள்: பிரச்சாரமும் உண்மை நிலையும்!

பிரச்சாரமும் உண்மை நிலையும்!

டி

ச.7 அன்று வெளியான, ‘குஜராத் மதுவிலக்கின் மற்றொரு முகம்’ கட்டுரை வாசித்தேன். காந்தி பிறந்த மண்ணில், போன்செய்தால் போதும்... முகவரி தேடி வருகிறது மது! என்பதைப் படித்தபோது மனம் வேதனையின் உச்சத்துக்கே செல்கிறது. ‘ஒவ்வொரு ஆண்டும் 7.50 லட்சம் லிட்டர் எரிசாராயம் கைப்பற்றப்படுகிறது. சட்டவிரோத மது அருந்தி, கடந்த 2012-ல் 143 பேரும், 2016-ல் வரேலி கிராமத்தில் 15 பேரும் உயிரிழந்த சம்பவங்களைக் கட்டுரை சுட்டிக்காட்டுகிறது. தமிழகத்தைப் போலவே குஜராத்திலும் மீனா படேல் தலைமையில், சட்டவிரோத மது விற்பனை மையங்களை அடித்து நொறுக்கியுள்ளார்கள் பெண்கள் என்ற செய்திகள், எத்தனை பொய் மூட்டைகளை 2014 நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில், மோடியின் ‘வணிக’ பாணி ஆதரவுப் பிரச்சாரகர் கள் அவிழ்த்துவிட்டுள்ளார்கள் என்று தெரிகிறது.

-ஆர்.முருகேசன், அந்தியூர்.

அரசுக்குப் பொறுப்பிருக்கிறது!

2015

டிசம்பர் மாதம் சென்னைவாசிகளுக்கு ஏற்பட்ட அதே கொடுமைகள் தென்மேற்குப் பகுதியான கன்னியாகுமரி மாவட்ட மக்களுக்கும் ஏற்பட்டிருக்கிறது. வானிலை மையம் கடுமையான மழை மட்டுமே பொழியும் என்று தெரிவித்த நிலையில், அங்கே ஒக்கி புயல் கோர தாண்டவம் ஆடியிருக்கிறது. வானிலை நிலவரங்களைத் துல்லியமக அறிந்துகொள்ளும் அளவுக்கு அறிவியலில் நாம் இன்னும் முன்னேறவில்லையோ என்ற சந்தேகம் எழுகிறது. விண்வெளி ஆய்வுகளில் வெற்றி கண்டுவரும் நாம், வானிலை தொடர்பாக தெளிவான, துல்லியமான விவரங்களை மக்களுக் குத் தெரிவிப்பதிலும் பொறுப்புணர்வோடு நடந்துகொள்ள வேண்டும். காப்பதற்கும், வழிநடத்துவதற்கும் அரசு இருக்கிறது என்ற நம்பிக்கையில்தான் மக்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். புரிந்துகொள்ளுமா அரசு?!

-நன்னிலம் இளங்கோவன், மயிலாடுதுறை.

பணிப் பாதுகாப்பின் அவசியம்

‘ப

லி கேட்கும் பணிச் சுமை’ குறித்த கட்டுரையில், தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பப் பணியாற்றும் இளைஞர்கள், பணிப் பாதுகாப்பின்றிப் படும் அல்லல்களை கட்டுரையாளர் வெ.சந்திரமோகன் ஒரு நிகழ்வின் மூலம் சுட்டிக்காட்டியுள்ளார். ஜப்பானில் இறந்த 27 வயது இளைஞரைப் போல, இந்திய தேசத்திலும் பன்னாட்டுத் தனியார் நிறுவனங்கள் வேலை நேரமின்றி நடத்தும் பணிச் சுரண்டலால், பணிப் பாதுகாப்பின்றித் துன்புறுவோர் பலருண்டு. மேலும், ‘இல்லத்திலேயே பணி’ என்று முழு நேரமும் பணிச் சுமை ஏற்றுவதைக் காண முடியும். பணிச் சுரண்டல் நடத்தும் பன்னாட்டுத் தனியார் நிறுவனங்களின் பார்வையில் இக்கட்டுரை தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். இதன் மூலம் இளைஞர்களின் பணிச் சுமை குறைய வேண்டும்.

- கு.மா.பா.திருநாவுக்கரசு, சென்னை.

தேவை அணி திரட்டல்

யர் நீதிமன்றத்தில் தமிழ் விரைவில் ஒலிக்க வேண்டும் என்ற சீரிய நோக்கில் வழக்கறிஞர் பகத்சிங்கின் பேட்டி (நவ. 27), தலையங்கம் (நவ.28) மூலம் ‘தி இந்து’ எடுத்துவரும் முயற்சிக்கு நன்றி. மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது, அவர் வைத்த இதே கோரிக்கையை இன்று அவரே காலம் கடத்துவது அவரும் ‘டெல்லிவாசி’ ஆகிவிட்டார் என்று பகத்சிங் குறிப்பிட்டது உண்மையே. வி.சி.க, மற்றும் பா.ம.க போன்ற கட்சிகள் இதற்கென பெரிய மாநாடுகளை நடத்தினாலும் அதில் பொதுமக்கள் பங்கேற்பது மிகவும் குறைவு. இவ்விஷயத்தில் மக்களின் பங்களிப்பு மிகவும் இன்றியமையாதது. இதற்கு தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் என்றில்லாமல் ஆளும்கட்சி உட்பட அனைத்துக் கட்சிகளும் ஒருங்கிணைந்து முயற்சிக்க வேண்டும். இதன் மூலம் மற்ற மாநிலங்களும் பயன்பெறும்.

-அ.பட்டவராயன், திருச்செந்தூர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x