Last Updated : 01 Jul, 2016 09:16 AM

 

Published : 01 Jul 2016 09:16 AM
Last Updated : 01 Jul 2016 09:16 AM

இந்திய - இலங்கை மீனவர் பிரச்சினைக்கு தீர்வு?

இலங்கை கடல் பகுதியில் இந்திய மீனவர்கள் சட்டவிரோதமாக மீன் பிடிக்கும் பிரச்சினை பல ஆண்டு களாக நீடிக்கிறது. இதனால் இலங்கை மீனவர்களின் வாழ்வா தாரத்துக்கு அச்சுறுத்தல் உள்ளது. இலங்கை, இந்தியா ஆகிய 2 நாடுகளில் மீனவர் சமுதாயம் மிகவும் ஏழ்மை நிலையில் இருப்பதால், இது இரு நாட்டு பிரச்சினையாகவும் உள்ளது.

இந்திய மீனவர்கள் கடலடியில் இழு வலை மடியை பயன்படுத்தி (கடலடியில் வாரி செல்லும் பை போன்ற மிகப்பெரிய வலை) மீன் பிடிக்கின்றனர். இதனால் கடல் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதுடன், இலங்கை வடக்கு மாகாணத்தில் உள்ள மீனவர்களை நேரடியாக பாதிக்கிறது. இந்திய மீனவர்கள் அத்துமீறி இலங்கை கடல் பகுதியில் இழுவலை மடியை பயன்படுத்தி மீன்பிடிப்பதால், இலங்கை மீனவர்களின் வலைகள் சேதம் அடைகின்றன.

அதற்கு பயந்தே அவர்கள் மீன் பிடிக்க செல்லாமல் கரைகளில் ஒதுங்கிவிடு கின்றனர். இலங்கை வடக்கு மாகாணத்தில் 2 லட்சம் மீனவர்கள், மீன்பிடிப்பு தொழிலை மட்டுமே நம்பி உள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் கொடூரமான இலங்கை போரில் தங்கள் குடும்ப உறுப்பினர்களை இழந்தவர்கள், வீடுகளை இழந்தவர்கள், உடைமைகளை இழந்தவர்கள். தற்போது தங்கள் வாழ்க்கையை மீட்டெடுக்க கடுமை யாகப் போராடி கொண்டிருக்கின்றனர். இப்போதுதான் கடலுக்கு செல்லும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்துள்ளது.

ஆனால், இந்திய மீனவர்கள் குறிப்பாக தமிழக மீனவர்கள் என்று கூறப்படுபவர்கள் பெரிய இயந்திர படகுகள், பெரிய வலை களுடன் ஒருநாள் விட்டு ஒருநாள் மீன் பிடிக்க வருகின்றனர். அவர்களுடன் இலங்கை மீனவர்களால் போட்டி போட முடிவதில்லை. இலங்கை வடக்கு மாகாண மீனவர்கள் பாரம்பரிய முறையில் சிறிய படகுகள், சிறிய வலைகளை பயன்படுத்தி மீன்பிடிக்கின்றனர்.

இந்திய மீனவர்கள் அத்துமீறி மீன் பிடிப்பது சுற்றுச்சூழலுக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. சில ஆண்டு களாக இழுவலை மடியை பயன்படுத்து வதால் கடலடியில் உள்ள உயிரினங்கள் அழிகின்றன. குறிப்பாக பவள பாறைகள், உயிரினங்களின் முட்டைகள் அழிக்கப் படுகின்றன. இதனால் பாக் ஜலசந்தியில் நீர்வாழ் உயிரினங்களுக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்படுகிறது.

அரசியல் காரணம்

இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாண இந்தியா, இலங்கை ஆகிய இரு நாடுகளும் கடந்த சில ஆண்டுகளாக முயற்சி மேற் கொண்டன. ஆனால், சிறிதளவுதான் முன் னேற்றம் கிடைத்தது. இதற்கு காரணம் அரசியல். ஒருபக்கம் இந்திய மீனவர்கள் இலங்கை கடல் பகுதிக்குள் சட்டவிரோத மாக மீன் பிடிப்பதால், இலங்கை மீனவர் கள் பாதிக்கப்படுகின்றனர். மறுபக்கம், இலங்கை கடல் பகுதியில் இந்திய மீனவர் கள் கைது செய்யப்பட்டால் இந்தியாவில் கண்டனக் குரல் எழுப்புகின்றனர்.

அதே நேரத்தில் தனது கடல் பகுதிக் குள் அத்து மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க இலங்கை அரசுக்கு சட்டப்படி உரிமை உள்ளது. அதன்படி தற்போது இலங்கை கடல் பகுதிக்குள் அத்துமீறி நுழைபவர்கள் கைது செய்யப்படுகின்றனர். அவர்களுடைய படகுகள் பறிமுதல் செய் யப்படுகின்றன. எனினும் இந்த தண்டனை குறைந்த காலத்துக்குத்தான். அரசியல் பேச்சுவார்த்தைக்கு பின்னர் மீனவர் களும் படகுகளும் விடுவிக்கப்படுகின்றன.

எனவே, படகுகளை பறிமுதல் செய் வதற்கு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு இலங்கை மீன்பிடி (வெளிநாட்டு மீன்பிடி படகுகள் ஒழுங்கு முறை) சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வரவேண்டும். இந்திய - இலங்கை மீனவர்களுக்குள் ஏற்படும் சச்சரவுகளுக்கு தீர்வு காண வேண்டும் என்று இலங்கை அரசை தமிழ் தேசிய கூட்டமைப்பு (டிஎன்ஏ) தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

டிஎன்ஏ தலைவரும் இலங்கை எதிர்க் கட்சி தலைவருமான ஆர்.சம்பந்தன் இந்தப் பிரச்சினையை நாடாளுமன்றத்தில் சமீபத் தில் எழுப்பினார். அப்போது, இலங்கை கப்பற்படையினருடன் இந்திய கப்பற்படை அல்லது கடலோர காவல் படையினர் இணைந்து சர்வதேச கடல் எல்லை பகுதி யில் கூட்டு ரோந்து பணி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கலாம் என்று யோசனை யும் தெரிவித்தார். இதுபற்றி இரு நாடுகளும் தீவிரமாக பரிசீலிக்க வேண்டும். இந்தப் பிரச்சினை தொடர்பாக நானும் தனிநபர் மசோதாவை சமர்ப்பித்தேன். என் னுடைய தனிநபர் மசோதாவில் கூறப்பட்டிருப்பதாவது:

* கடலடி மீன்பிடிப்புக்கு அனுமதி வழங்கும் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரவேண்டும்.

* இலங்கை கடல் பகுதியில் கடலடி மீன்பிடிப்புக்கான பெரிய வலைகளை பயன்படுத்துவது, வைத்திருப்பது, ஏற்று மதி செய்வது, வாங்குவது போன்ற எல்லா வற்றுக்கும் தடை விதிக்க வேண்டும்.

* அதையும் மீறி கடலடி மீன்பிடிப்பில் ஈடுபட்டால், என்ன தண்டனை என்பதை அறுதியிட்டு கூற வேண்டும்.

எனவே இந்த விஷயத்தில இரு நாடு களும் தெளிவான முடிவெடுக்க வேண்டும். அதேபோல் இலங்கை மீனவர்களின் வாழ் வாதாரத்தை பாதுகாக்கவும், கடல்வளம், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் இலங்கை அரசும் உடனடியாக சட்டத் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். இதற்கு இலங்கை எம்.பி.க்கள் ஒற்றுமையாக இருந்து கடலடி மீன்பிடிப்புக்கு தடை கொண்டு வர ஆதரவு தெரிவிக்க வேண்டும்.

இழுவலை மடியை பயன்படுத்தி மீன் பிடிப்பதற்கு தடை விதிக்கும் அதே வேளையில் ஆழ்கடல் மீன்பிடிப்பு போன்ற மாற்று திட்டங்களை இரு நாடுகளும் மீன வர்கள் மத்தியில் ஊக்கப்படுத்த வேண்டும். இதை இந்திய அரசு உடனடியாக செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இந்த திட்டங்களை அரசும் தமிழக மக்களும் அங்கீகரிக்க வேண்டும் என்று வேண்டு கோள் விடுக்கிறேன். இதில்தான் ஆயிரக்கணக்கான இலங்கை தமிழர்களின் வாழ்வாதாரம் அடங்கி உள்ளது.

கடலில் மீன்வளத்தை பெருக்கும் நோக்கில் கடலில் மீன்பிடிக்க 45 நாள் தடை விதிக்கப்படுகிறது. அந்த தடை தமிழ் நாட்டில் சமீபத்தில் முடிந்தது. அதன் பின்னர் மீண்டும் இலங்கை கடல் பகுதிக் குள் சட்டவிரோதமாக நுழைந்த குற்றத் தால் மீனவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

இலங்கை கடல் பகுதிக்குள் இந்திய மீனவர்கள் தொடர்ந்து அத்துமீறி நுழைந்து மீன்பிடித்துக் கொண்டிருந்தால் பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது. அர்த்தமுள்ள பேச்சுவார்த்தையும் நடத்த முடியாது. எனவே, பிரச்சினையை பேசி தீர்வு காணும் வரை கடலில் மீன்பிடிக்க தடை கொண்டு வருவது குறித்து இந்திய அரசும் தமிழக அரசும் பரிசீலிக்க வேண் டும். அப்படி தடை கொண்டு வந்தால், இருதரப்பிலும் நம்பிக்கை ஏற்படுத்தும் நடவடிக்கையாக அமையும். அந்த தடை விரைந்து தீர்வு காணவும் உதவும்.

இந்தியா, இலங்கை அரசுகள் அரசியல், காரசார பேச்சு போன்ற எல்லா விஷயங் களையும் தவிர்த்துவிட்டு மீனவர்களின் நலனுக்கு பயன்தரும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய நேரம் இதுதான்.

எம்.ஏ.சுமந்திரன், வழக்கறிஞர்
இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பி.
தொடர்புக்கு : ma.sumanthiran@gmail.com
தமிழில் சுருக்கமாக: ஏ.எல்.பழனிசாமி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x