Last Updated : 28 Oct, 2016 10:01 AM

 

Published : 28 Oct 2016 10:01 AM
Last Updated : 28 Oct 2016 10:01 AM

மெட்றாஸ் அந்த மெட்ராஸ் 12: வஸ்ஸ்ஸ்... போக்குவரத்தை நிறுத்துங்கள்!

மெட்றாஸ் மாநகருக்குப் பெருமை யும் அழகும் கூட்டிய ஒரு புரா தன மாளிகை, அதன் பழமைத் தன்மை மாறாமல் அதே சமயம் மெரு கூட்டப்பட்டு புதுப்பிக்கப்பட்டிருக்கிறது. பிரிட்டனுக்கான துணை ஹைகமி ஷனர்கள் வசிக்கும் இல்லமான காட்டிங்லி (Cottingley) தான் அந்த மாளிகை. அதன் கம்பீரமான தோற்ற மும் முகப்பும் விசாலமான அறைகளும் தாழ்வாரங்களும் கூடங்களும், உத்தரத் தில் இருந்து தொங்கும் அழகிய வேலைப்பாடு அமைந்த சர விளக்கு களும் பார்க்கப் பார்க்க பரவசமூட்டும்.

அந்த மாளிகையை வெறும் வசிப்பிடமாக மட்டும் வைத்திருக்காமல் மேலும் சில பயனுள்ள பணிகளுக்கும் அதைப் பயன்படுத்த வேண்டும் என்று மைக்கேல் ஹெரிட்ஜ் அவருடைய மனைவி எலிசபெத் இருவரும் முடிவு செய்தனர். அதன்படி பிரிட்டிஷ் கல்வி யாளர்கள் சங்கக் கூட்டத்தை அங்கே நடத்தினர். தமிழக அரசில் அறிவியல் நகர நிர்வாகப் பொறுப்பையும் வகித்த மூத்த மாநில அதிகாரி சந்திரகாந்த் கரியாலி எழுதிய புத்தகத்தை, ஹெரிட்ஜ் அங்கே வெளியிட்டார். அறிவியல் நகரத்தில் ஒரு பகுதி மகளிரையே மையமாகக் கொண்டிருக்கும் என்று கரியாலி அப்போது தெரிவித்தார். ஆக்ஸ்போர்டில் படித்த கரியாலியின் இரண்டாவது புத்தகம் இது. முதல் புத்தகம் ‘நவீன இந்தியாவில் பெண்களின் பங்கு’ என்ற தலைப்பிலானது.

உயிரியல் பூங்கா உருவானது

டாக்டர் ஜேம்ஸ் ஆண்டர்சன் என்பவர் அன்றைய மதறாஸ் மாகாணத்தில் சர்ஜனாகப் பணிபுரிந்தார். 1778-ல் இந்த இடத்தை விலைக்கு வாங்கினார். 1792-ல் மேலும் சில பகுதிகளையும் சேர்த்து மொத்தம் 110 ஏக்கர்களாக்கினார். அங்கு உயிரியல் பூங்கா உருவானது. அந்த இடத்தைச் சுற்றிலும் ஒரு பகுதியில் கல்லூரி சாலை, கிரீம்ஸ் சாலை, மவுண்ட் சாலை, நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, ஹாடோஸ் சாலை ஆகியவை இருந்தன. டாக்டர் 1809-ல் மறைந்த பிறகு உயிரியல் பூங்காவாக அதைப் பராமரிக்கும் ஆர்வம் அப்போதைய ஆங்கிலேயே அரசுக்குக் குறைந்துவிட்டது. அதன் பிறகு 6 தோட்ட வீடுகளுக்கு அந்த இடம் பகிர்ந்து தரப்பட்டது. காட்டிங்லி அதில் ஒன்று.

1940-களில் அந்த இடம் மெட் றாஸ் ஆட்சியர் (கலெக்டர்) இல்ல மாக இருந்தது. நாடு சுதந்திரம் அடைந்த பிறகு பிரிட்டிஷ் அரசுக்கு குத்தகைக்குத் தரப்பட்டது. நீண்ட காலப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு பிரிட்டிஷ் அரசுக்கு அந்த இடம் விலைக்கே விற்கப்பட்டது. பிரிட்டிஷ் அரசாங்கம் மெட்றாசில் விலை கொடுத்து வாங்கிய ஒரே இடம் என்ற வரலாறு இதனுடையது!

இந்த பகுதியில் நீண்ட காலமாக வசிக்கும் கே.ஆர்.என்.மேனன் சுவா ரஸ்யமான சில தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். அவருடைய வீட்டுக்கும் காட்டிங்லி இல்லத்துக்கும் இடையில் அன்றைய இம்பீரியல் வங்கி அதிகாரிகள் (பிறகு, அதுவே பாரத ஸ்டேட் வங்கியானது) பங்களாக்களில் வாழ்ந்தனர். நீதிபதி ஏ.எஸ்.பி. அய்யரும் அப்பகுதியில் குடியிருந்தார். அவர் நல்ல ஆங்கிலப் புலமையும் நகைச்சுவை உணர்வும் மிக்கவர். இவ்விரண்டையும் பறைசாற்றும் வகையிலான ஒரு சம்பவத்தை மேனன் குறிப்பிட்டார்.

பாம்புகளின் போக்குவரத்து

அய்யரின் வீட்டுக்குப் பக்கத்தில் வசித்த வங்கி அதிகாரி ஒருவர், அய்யருக்கு ஒரு சீட்டு அனுப்பினார். ஆங்கிலத்தில் எழுதப்பட்ட அந்தச் சீட்டில் இரு வீடுகளுக்கும் இடையில் பாம்புகளின் போக்குவரத்து அதிகமாகி விட்டது குறித்து கவலை தெரிவித்து, இந்தப் போக்குவரத்துக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்குமாறு அதிகார தோரணையில் கடிதத்தை முடித்திருந் தார். அந்தக் காலத்தில் பெரிய மனிதர்கள் இப்படி துண்டுச் சீட்டுகள் மூலம் தங்களுடைய கருத்துகளைப் பரிமாறிக்கொள்வது வழக்கமாக இருந்தது. அய்யர் இந்தத் துண்டுச் சீட்டைப் பார்த்ததும் பதிலுக்கு ஒரு துண்டுச் சீட்டை தன்னுடைய பாணியில் எழுதி அனுப்பினார்.

“நம்முடைய வீடுகளுக்கு இடை யில் இப்படி பாம்புகள் அடிக்கடி போய்வருவது எனக்கும்தான் கவலை யாக இருக்கிறது; இந்தப் பாம்புகளில் உங்களுடையது எது என்று நீங்கள் அடையாளம் காட்டினால், மற்றதை (அநேகமாக அது என்னுடையதாகத்தான் இருக்க வேண்டும்) நான் கட்டுப்படுத்திவிடுகிறேன்” என்று பதில் அளித்தார்!

சென்னை கோட்டை

புனித ஜார்ஜ் கோட்டை மற்றும் புனித கிளேசியஸ் கோட்டைகளின் தீர்மானமான எல்லைகள் எவை என்று சி.ஏ. ரெட்டி என்ற வாசகர் என்னைக் கேட்டிருக்கிறார். சென்னையில் புனித ஜார்ஜ் கோட்டையைச் சுற்றி வாருங்கள். அதனுடைய எல்லைகள் வெறுங்கண்ணுக்கே நன்றாகத் தெரி யும். கொடிமரச் சாலை தெற்கிலும், சர் முத்துசாமி ஐயர் சாலை மேற்கிலும், கோட்டைப் பகுதிச் சாலை வடக்கிலும், காமராஜர் சாலை கிழக்கிலும் எல்லைகளாக உள்ளன.

அவர் புனித ‘கிளேசியஸ்’ கோட்டை என்று குறிப்பிட்டிருப்பது ஆங்கிலத்தில் ‘கிளேசிஸ்’ என்ற வார்த்தையாக இருக்க வேண்டும். அப்படியென்றால் கோட்டையின் முன்புறத்தில் உள்ள ‘சரிவான பகுதி’ என்று பொருள். கோட்டையின் பாதுகாப்புக்காக நிறுத் தப்படும் காவலர்கள் எதிரியைத் தொலை விலேயே நிறுத்திவிடுவதற்காகவும், எதிர் தாக்குதல் தொடுப்பதற்காகவும் இந்த முன்பக்க அரண் எல்லா கோட்டைகளிலும் ஏற்படுத்தப்பட்டு இருக்கும்.

புனித ஜார்ஜ் கோட்டையின் தென்பகுதி பார்த்த மாத்திரத்திலேயே தெளிவாகத் தெரியும் வகையில் எடுப்பாக கட்டப்பட்டிருக்கிறது. அங்கே ராணுவக் குடியிருப்புகள் கட்டப் பட்டுள்ளன. கொடிமர இல்லம், கோட்டைத் தளபதியின் இல்லம் ஆகியவை இப்பகுதியில் இருக் கின்றன.

- சரித்திரம் பேசும்...

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x