Published : 26 May 2016 10:23 AM
Last Updated : 26 May 2016 10:23 AM

பரிந்துரை 3 - கவனிக்க வேண்டிய புத்தகங்கள்

இந்துக்கள் ஒரு மாற்று வரலாறு

வெண்டி டோனிகர்

தமிழில் : க. பூரணச்சந்திரன்

விலை ரூ : 750 எதிர் வெளியீடு

தொடர்புக்கு: 98650 05084

இந்து மரபின் இயல்பைப் புரிந்து கொள்வதற்கு உதவும் வகையில் எழுதப்பட்ட விரிவான நூல் இது. சிறந்த பகுப்பாய்வு கொண்ட இந்நூல் மூவாயிரம் ஆண்டுகளாகப் பரந்துகிடக்கும் தலங்கள், சடங்குத் தருணங்கள், நேசத்திற்குரிய நூல்கள் ஆகியவற்றினூடே பயணம் செய்யும் அனுபவத்தைத் தருகிறது. அமர்த்யா சென், டேவிட் ஷூல்மன் போன்ற அறிஞர்களின் பாராட்டைப் பெற்றிருப்பது இந்நூலின் தனிச்சிறப்பு.

********

பிம்பச் சிறை - எம்.ஜி.ராமச்சந்திரன் திரையிலும் அரசியலிலும்

எம்.எஸ்.எஸ்.பாண்டியன் தமிழில்: பூ.கொ.சரவணன்

பிரக்ஞை வெளியீடு

தொடர்புக்கு: 99400 44042

சர்வதேச அளவில் புகழ்பெற்ற சிந்தனை யாளரான எம்.எஸ்.எஸ். பாண்டியனால் 1990-ல் ‘தி இமேஜ் டிராப்’ எனும் தலைப்பில் எழுதப்பட்ட ஆங்கில நூலின் தமிழாக்கம் இந்நூல். நடிகர், அரசியல் தலைவர் என்று இயங்கிய எம்.ஜி.ஆர். எனும் பிம்பத்தை கறாரான விமர்சனப் பார்வையுடன் இந்நூல் அணுகுகிறது. தமிழ்த் திரையுலகுக்கும் அரசியல் நிகழ்வுகளுக்கும் இடையிலான உறுதியான தொடர்பு இதில் பதிவாகியிருக்கிறது.

********

நந்தனின் பிள்ளைகள்: பறையர் வரலாறு 1850-1956

ராஜ் சேகர் பாசு தமிழில் அ. குமரேசன்

விலை ரூ.500, கிழக்கு வெளியீடு

தொடர்புக்கு: 044-42009601

பறையர்கள் என்பவர்கள் யார் என்னும் ஆதாரக் கேள்வியுடன் தொடங்கும் இந்த ஆய்வுநூல் 19-ம் நூற்றாண்டின் தொடக்கம் முதல் 20-ம் நூற்றாண்டின் பிற்பகுதி வரையிலான பறையர்களின் சமூக, அரசியல், பொருளாதார வாழ்க்கை முறையை ஆதாரபூர்வமாகப் பதிவு செய்திருக்கிறது. பிரிட்டிஷ் காலனியாதிக் கத்துக்கு முன்பும் பின்பும் அம்மக்களின் வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்களும் விரிவாகப் பதிவாகியிருக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x