Published : 27 Apr 2016 05:32 PM
Last Updated : 27 Apr 2016 05:32 PM

நெட்டிசன் நோட்ஸ்: பணம் பறிமுதலும் வரலாற்று சாதனையும்!

சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் சட்டத்துக்கு புறம்பாக பணப் பரிமாற்றங்களும், பணப் பட்டுவாடாவும் நடந்து வருவதாகக் கட்சிகளே குற்றம்சாட்டி வருகின்றன. ஓட்டுக்கு பணம் வாங்குவதையும், தேர்தல் ஆணையம் அதைப் பறிமுதல் செய்வதையும் நெட்டிசன்கள் உலகம் எப்படிப் பார்க்கிறது?

>சி.பி.செந்தில்குமார்:

ஓட்டுப்போட வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள்: தடுக்க இளைஞர் படையை தயார் செய்கிறது தேர்தல் கமிஷன். #அவங்களுக்கும் ஒரு கிஃப்ட் பார்சல்.

>vigneshvicky:

பணம் வாங்கி ஓட்டளித்தால் ஓராண்டு தண்டனை - தேர்தல் ஆணையம்: செய்தி

பணம் வாங்கிட்டு தகுதியற்றவருக்கு ஓட்டுபோட்டா அடுத்த 5 ஆண்டுகளுமே தண்டனைதான்.

>Dr S RAMADOSS:

கரூரில் பணம் பறிமுதல்: அ.தி.மு.க. தேர்தலில் போட்டியிட தடை தேவை!

>அரசியல் வியாதிகள்:

பணம் பறிமுதலில் தமிழகம் முதல் இடம் ! இதுவே திமுக, அதிமுகவின் வரலாற்று சாதனைகள்.

#TNElections2016

>காமராஜ் ஜனதாகாங்கிரஸ்:

பணம் பாதாளம் வரைக்கும் பாயும்போது, வாக்கு சாவடி வரைக்கும் பாயாதா...

>Sundaram Chinnusamy:

"எங்கள் கட்சியை சேர்ந்தவர்களிடமிருந்துதான் கோடி கோடியாக பணம் கைப்பற்றப்படுகிறது. மக்களிடம் கொள்ளையடித்த பணத்தில் ஒரு சிறு பகுதியையாவது மீண்டும் மக்களுக்கே அளிக்க எங்கள் கட்சி மட்டுமே முனைப்புடன் செயல்படுகிறது என்பதையே இது காட்டுகிறது. மாற்றுக்கட்சியினர் கொள்ளையடித்த பணம் முழுவதையும் தாங்களே வைத்துக்கொள்ள வேண்டும் என்ற பேராசை பிடித்தவர்கள் என்பதும் இதிலிருந்து தெரிகிறது. அவர்களை வாக்காளர்கள் புறக்கணிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்"

# உடான்ஸ் செய்திகளுக்காக...... உங்கள் உண்மை விளம்பி சுந்தரம்...

>jayabalan sivaganga:

பணம் எப்படா கொடுப்பாங்கன்னு எதிர்பார்த்து காத்திருக்கேன்...

பணம் கொடுத்த கட்சிக்கு கண்டிப்பாக ஓட்டு இல்லை!

பணம் ஆதரவற்றோர்க்கு....

>Selvin G:

ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுக்க தமிழகத்தில் 21 ஆயிரம் இளைஞர் குழுக்கள்! தேர்தல் ஆணையம் அதிரடி

அந்த குழுவ வச்சே கொடுக்க போறாங்க

>மNoஜ்:

அவசரனும்னு ஆம்புலன்ஸ் எல்லாம் போகுது.....உள்ள பணம் இருக்கா, பொணம் இருக்கானு கடவுளுக்குதான் வெளிச்சம்...

>Naanjil Peter:

பணப்பரிமாற்றம் இல்லாமல், ஓட்டுக்கு பணம் கொடுக்காத, பணம் வாங்காத தேர்தலாக இந்த தேர்தலை நாம் நடத்த முடியுமா?

>Afsalkhan:

ஓட்டுப்போட பணம் வாங்க வெட்கப்படவேண்டும்: ரா.லக்கானி

ஆபீசருங்க பூராம் தலைகாய்ஞ்ச ஜனங்களையே குறை சொல்றீங்க. குடுக்குறவங்கள திட்டுங்களேன்!

>தமிழ் பையன்:

கோடிக்கணக்கில் பணம் வைத்துக் கொண்டு நமக்காக உழைக்க தயாராய் இருக்கிறார்கள் தலைவர்கள். நாமோ அது தெரியாமல் இருக்கிறோம் ஏழைகளாய்!!

>மெத்த வீட்டான்:

அதிமுக பிரமுகர் அன்புநாதன் வீட்டில் பணம் பறிமுதல் செய்த கரூர் எஸ்.பி வந்திதாவை சுட்டுக்கொல்ல முயற்சி

#தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீரும் துப்பாக்கியுமா இருக்கு!

>ரயில்பயணி:

பறிமுதல் பண்ண பணத்தையெல்லாம் கஜானாவுல போட்டிருந்தாலே, தமிழ்நாட்டோட பாதி கடனை அடைச்சிருக்கலாம் போலயே!!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x