Published : 19 Aug 2016 12:18 PM
Last Updated : 19 Aug 2016 12:18 PM

நெட்டிசன் நோட்ஸ்: இறுதிச்சுற்று நாயகிகள்... சாக்‌ஷியும் சிந்துவும்!

ரியோ ஒலிம்பிக் தொடங்கி 12 நாட்கள் ஆன பின்னரும், இந்திய வீரர்கள் யாரும் பதக்கம் பெறாத நிலையில், இன்று (வியாழன்) அதிகாலை, வெண்கலப் பதக்கம் பெற்றுத் தந்திருக்கிறார் மல்யுத்த வீராங்கனை சாக்‌ஷி மாலிக். பேட்மிண்டன் இறுதிப் போட்டியில் நுழைந்து பதக்கத்தை உறுதி செய்திருக்கிறார் சிந்து.

பதக்க வேட்டையைத் தொடங்கி வைத்த சாக்‌ஷிக்கும், உறுதி செய்த சிந்துவுக்கும் பாராட்டுகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன. அவற்றின் தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்..

>Divagar C

சன்ரைஸ் சர்ப்ரைஸ் - சாக்‌ஷி மாலிக் வெண்கலம்!

>Shahjahan R

சாக்ஷி மாலிக் - அப்பா பெயர் சுதேஷ், அம்மா பெயர் சுக்வீர். ஹரியாணாவின் ரோடக் அருகே மொக்ரா கிராமத்தைச் சேர்ந்தவர்கள். ஆச்சரிய நிகழ்வாக இதற்கு முன் ஒலிம்பிக்கில் குத்துச் சண்டை அல்லது மல்யுத்தத்தில் பதக்கம் வென்ற சுஷில் குமார், விஜேந்தர் சிங், யோகேஸ்வர் தத் ஆகியோரும் ஹரியாணாவைச் சேர்ந்தவர்கள்தான்.

>Bala Murugan

தினமும் ரியோ ஒலிம்பிக்கில் இந்தியா பதக்கம் பெறாதா என்ற ஏக்கத்துடன் செய்திகளைக் கண்டு வந்தவர்களுக்கு ஆறுதல் - சாக்‌ஷி மாலிக்கின் வெண்கலம்.

>விஷ்வா ‏

சாக்‌ஷி மாலிக் தேசியக் கொடியுடன் தன் வெற்றியை கொண்டாடியபோது கண்களில் வந்த ஆனந்தக் கண்ணீரை அடக்கமுடியவில்லையே, ஏன்? ஏன்னா நான் இந்தியன். #ஜெய்ஹிந்த்

>ஜிரா

இன்றைய இந்திய அரசியல் சமூகச் சூழலில் சாக்‌ஷி வாங்கியிருக்கும் ஒரு வெண்கலப் பதக்கம் ஓராயிரம் தங்கப் பதக்கங்களினும் உயர்வானது.

>Banu Reka TR

சாக்‌ஷி கண்ணு... மெடலு வாங்கியாச்சு, நல்லது, வாழ்த்துகள்.. இந்தாங்க இலவச அறிவுரை புடிச்சுகோங்க...

வந்தவுடனே பொழப்ப பாருங்க.... என்னமோ இந்த அரசியல்வாதிகள் தாங்க தான் கஷ்டப்பட்டு பயிற்சி கொடுத்து அனுப்பின மாதிரி நீங்க இந்தியா வர்றவரை பில்டப் கொடுப்பாங்க. நம்பிடாதிங்க. உஷாரா இருந்துக்குங்க. அவ்வளவுதான். வாழ்க வளமுடன்..

>வெல்லெஸ்லி பிரபு ‏

வெண்கல பதக்கம் வென்ற சாக்‌ஷி மாலிக்குக்கு 2.5 கோடி பரிசு. - இதைப் பயிற்சி காலத்தில் செலவழிச்சிருந்தால் தங்கமே வாங்கியிருப்பாரே!

>சிவகார்த்திக்

காலேஜ்ல ஸ்போர்ட்ஸ் அவர்லகூட வெயில்படாம ஓரமா ஒக்காந்து மொபைல் நோண்டுனவங்கள்லாம் ப்ரவுடு மொமண்ட் ஆகுறாங்களே.. ஓ மை சாக்‌ஷி..

>SKP Karuna ‏

ஒரு வெங்கலக்கிண்ணியாவது உண்டா என அங்கலாய்த்த என் மீது ஓர் வெண்கலத்தை வீசிச் சென்றிருக்கார் சாக்‌ஷி. பாய்ந்து பிடிச்சுக்றேன்மா., நன்றி.

>Anbu ‏

#SakshiMalik இன்னிக்குதான் முக்கால்வாசி பேரு சாக்‌ஷி மாலிக் அப்படி ஒருத்தர் இருக்குறதயே கேள்விப்படுறோம்.. ஆனா இனிமே மறக்கமாட்டோம்..

>Mohan King

அதிகாலையிலேயே இந்தியர்களின் மனங்களை பதக்கத்தால் நிரப்பிய பாசக்கார தங்கச்சி... சாக்ஷி மாலிக்! ரக்‌ஷாபந்தன் வாழ்த்துக்கள்!

>pughalarasu

இது சாக்‌ஷி மாலிக்கின்

#இறுதிசுற்று

>Boopathy Murugesh

வாழ்க்கையில் ஒரு ஆணின் வெற்றிக்கு பின் ஒரு பெண் இருப்பது போல, விளையாட்டுகளில் ஒரு பெண்ணின் வெற்றிக்கு பின் ஒரு நிச்சயம் ஒரு ஆண் இருப்பான்.. தனது பயிற்சியாளருடன் சாக்சி..

>ansari masthan

வெட்கி தலைகுனிந்துக் கொண்டிருந்த ரணப்பொழுதுகளிலிருந்து மீண்டு, எட்டி பறித்துவிட்டோம் ஒரு வெண்கலத்தை! நன்றி சாக்‌ஷி.

>open talk ‏

#சாக்‌ஷி... #மகிழ்ச்சி...!

>Kavi Arasu

இந்திய பொது சமூகத்தில் உலகளாவிய விளையாட்டுப் போட்டிகளில் பெண்கள் பங்கேற்று வெற்றிகளைக் குவிப்பதென்பது அற்புத நிகழ்வுகளுள் ஒன்று. அதுவும் மல்யுத்தம் என்பது இன்னும் பெருமகிழ்ச்சியை தரவல்லது. மல்யுத்தம் பெரும்பாலும் ஆண்களுக்கான விளையாட்டாகவே கருதப்படுவதால். அதில் பங்கேற்க வரும் பெண்களின் எண்ணிக்கை மிகவும் சொற்பமே...

இதுபோன்ற சூழலைத்தான் எதிர்கொண்டார் சாக்‌ஷி. சாக்ஷியின் ஆரம்பகால மல்யுத்த பயிற்சிகள் ஆண் மல்யுத்த வீரர்களுடனே நடந்தது. ஆண்கள் நிரம்பியிருக்கும் மல்யுத்த அரங்கில் அவர் மட்டுமே பெண். பின்னர் கடுமையான பயிற்சிகளை கடந்து கைதேர்ந்த மல்யுத்த வீராங்கனையாக உருவாகினார் சாக்‌ஷி.

அதனைத் தொடர்ந்து நகர, மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்று தனது திறமையை வெளிப்பட்டுத்தி தேசிய அணிக்கு தேர்வானார். இறுதியாக இந்தியாவிற்கான முதல் பதக்கத்தை வென்று சாதனையும் படைத்திருக்கிறார்.

>Azhwar Raja

கைக்கெட்டும் தூரத்தில் 'பதக்கம்' ; இறுதிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து.

>கிரி பிரசன்னா®

(ட்விட்டர்) சந்துல சிந்து (புகழ்) பாட வேண்டிய நேரம் வந்துடுச்சு #Rio2016

>Sowmiya Sellamuthu

பொண்ணாலதாலதான் பொன் வரணும்னு இருந்தா யாரால மாத்த முடியும்?

>அருண்

இந்தியாவுக்கு ஒரு பதக்கம் உறுதியானது. ஏய் எவனா இருந்தாலும் இப்ப வா இப்ப வா

>V Vasudev ‏

எப்டியோ மெடல் ஒன்னு இருக்கு. அது கோல்டா இருந்தா சந்தோசம்!! #சிந்து

>Kailash Chandrasekar ‏

'சிந்து' நதியின் மிசை ஒலிம்பிக்கிலே...

பேட்மிண்டன் இறுதியிலே!

>எஸ்.கருணா ‏

சிந்து என்று சொல்லடா...

தலை நிமிர்ந்து செல்லடா...

>Vikraman Sabapathi

சிந்து - வாடி ராசாத்தி

>Panneer Selvam

Best wishes to Sindhu for a hold on Gold

சிந்து தங்கத்திற்கு முந்து!

>யோகேஷ்

இந்திய வானில் சிந்து உன்னால்

நேற்று வெள்ளி முளைத்தது

இன்று உன்னால் பொன்னெழில் பூக்கும்

>ஆண்டவர் ‏

சாக்‌ஷி, சிந்து....

ஒலிம்பிக் அரங்கில் பெண்ணியம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x