Published : 24 Apr 2015 05:58 PM
Last Updated : 24 Apr 2015 05:58 PM
தமிழுக்கும் அமுதென்று பேர். பாரதிதாசனின் இந்தப் பாடலை நீங்கள் கேட்டிருக்கிறீர்களா?
முத்துராமன் நடித்த பஞ்சவர்ணக் கிளி படத்தில் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் பி.சுசீலா தமிழுக்கும் அமுதென்று பேர் பாடலை பாடி இருப்பார்.மிக மிக மென்மையான இந்தப் பாடலைக் கேட்கும்போதே நம்மை மெஸ்மரிசம் செய்த உணர்வு ஏற்படும்.
இந்த தலைமுறையில் இந்தப் பாடலை கேட்பதற்கான அல்லது ரசிப்பதற்கான வாய்ப்பு இல்லை என்கிறீர்களா? இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் அந்த வாய்ப்பை நமக்குக் கொடுத்திருக்கிறார்.
ஜேம்ஸ் வசந்தன் இயக்குநராக அறிமுகமான படம் 'வானவில் வாழ்க்கை'. இதில் பாரதிதாசன் பாடல் வரிகளைக் கொண்டு கல்லூரி கலைநிகழ்ச்சி ஒன்றில் மேடையில் பாடுவதைப் போல காட்சிப்படுத்தி இருக்கிறார்.
ஜேம்ஸ் வசந்தனின் டிரெண்டி இசையில், ஜித்தின், ஜனனி ஆகிய இருவரும் இப்பாடலை பாடியுள்ளனர். பாடலின் தன்மையை சிதையாமல், இசையோடு கலந்த அந்தப் பாடலை பார்த்து, கேட்டு ரசிக்க:
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT