Last Updated : 27 May, 2015 03:03 PM

 

Published : 27 May 2015 03:03 PM
Last Updated : 27 May 2015 03:03 PM

ட்வீட்டாம்லேட்: மதுவுக்கு எதிராக தொடரும் ட்வீட் போராட்டம்!

டாஸ்மாக் - சிறுகுறிப்பு முதல் பெருங்கட்டுரை வரை எழுதித் தீர்ப்பதற்குக் களம் அமைத்துத் தரும் சொல்லாகிவிட்டது தமிழ்ச் சமூகத்தில்.

கடந்த 23-ம் தேதி >#BanTasmac என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் இடம்பெற்றது. இந்த ஹேஷ்டேக் மது விற்பனைக்கு எதிராக இணையப் போராட்டமாகவே திகழ்கிறது.

ட்விட்டரில் மவுனப் புரட்சியாக முன்னெடுக்கப்பட்ட #BanTasmac என்ற ஹேஷ்டேகில் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் குறும்பதிவுகள் கொட்டப்பட்டு வருகின்றன. இணையப் போராளிகள் களத்தில் இறங்கி இட்ட டாஸ்மாக்குக்கு எதிரான பதிவுகளில சில இன்றைய ட்வீட்டாம்லேட்டில்...

Jhansi Natarajan ‏@NatarajanJhansi - மது அடிமைத்தனத்தை வைத்து அரசியல் செய்து ஆட்சி நடத்தும் கட்சிகளை முதலில் நாம் தடை செய்ய வேண்டும்.

மருதாணி ‏@RedManoRed - குடிகார பசங்க... புள்ளகுட்டிய படிக்க வக்கில்ல... குடிக்க புட்டி தேடுறாங்க #BanTasmac

B R K ™ ‏@Rajasirr - இவர்களின் போராட்ட அளவிற்கு எல்லையில்லாமல் போய்விட்டது அதற்காகவாவது #BanTasmac

j anakiraman ‏@periyakulam - அம்மா... உங்களுக்கு இருக்கும் செல்வாக்கைப் பயன்படுத்தி மதுக் கடைகளை ஒழியங்களேன். #BanTasmac

Ganapathy ‏@ganapathveera - நான் செத்தப் பிறகு என் நண்பன் வருவதற்குள் முகத்தை மூடி விடுங்கள். இல்லை என்றால், செத்ததுக்கும் ட்ரீட் கேப்பான் #BanTasmac

வெ.தனஞ்செயன் ‏@thananjayanv - குடிகாரன காமெடியனாப் பார்த்தக் காலம் போய், குடிக்காதவன நக்கலா பார்க்கிற காலமா மாறிப்போச்சு #BanTasmac

N.ரஜினிராமச்சந்திரன் ‏@rajinirams - தன்னை தேடி வரும் நுகர்வோரை மிக கேவலமாக நடத்துவது உலகிலேயே இது மட்டும் தான் #BanTasmac

Balaji Gopal ‏@gopalbalaji - #BanTASMAC இளைஞர்களை பாதுகாக்க தடை செய்யுங்கள் டாஸ்மாக்கை.

செங்காந்தள் ‏@kumarfaculty - குடிப்பவர்கள் ரோட்டில் மயங்கிக் கிடக்கிறார்கள். குடும்பத்தார்கள் வீட்டில் பசியில் மயங்கிக் கிடக்கிறார்கள் #Bantasmac

ட்விட்டர்MGR ‏@RavikumarMGR - யாரைக் கேட்டாலும் டாஸ்மாக்குக்கு எதிர்வீடு, டாஸ்மாக்கு பக்கத்து சந்துன்னு தமிழ்நாட்டு லேண்ட்மார்க்கா இருக்குறதையா மூடச் சொல்றீங்க! #BanTasmac

சி.பி.செந்தில்குமார் ‏@senthilcp - அரசின் வருமானம் போய்விடுமே என பயந்தால் குடிமக்களின் எதிர்காலமே வீணாய்ப் போய்விடும் #BanTASMAC

பித்தன் ‏@kiramaththan - அரசாங்கமே நடத்துது. அதை மூடத்தான் சொல்லணும், தடை அல்ல, Not #BanTasmac, #CloseTasmac

படித்துறை பிரபா® ‏@iampadithurai - ஃபுல்லா தண்ணிய போட்டு போயி டாஸ்மாக் மூட சொல்லி வாசல்ல நின்னு போற வரவன எல்லாம் தூக்கி போட்டு மிதிக்கணும் #BanTasmac

ÅЯαvîŋd ‏@Imarvnd - #BanTasmac ட்ரெண்டாகரதோடு விடாம, ஏதாவது நடவடிக்கை எடுத்தா நல்லா இருக்கும்.

குறும்புக்காரன் ‏@kurumbukaran - மது அருந்துவது உடலுக்கு கேடு. மது விற்பது அரசுக்கு வெட்ககேடு.

ஆபிள் சாப்பிட ஆதாம் ‏@Judesonjj - தங்களோட சுயநலத்துக்காக மத்தவங்கள பயன்படுத்துற அரசியல்வாதிங்க மத்தியில, தன்னலம் இல்லாம குடிக்குறவனை திருத்த சொல்லி நிக்குது இந்த சமூகம் #BanTasmac

தன்மானச்சிங்கம் ‏@palavai007 - வரலாற்று கலங்கம் உண்டாகும் முன் #Bantasmac

R@J€$H ‏@raajsh01 - பார்ட்டி என்ற வார்த்தைக்கு குடிப்பது என்று பொருள் மாறிப்போனது. பால் பூத் ஒண்ணுதான் இருக்கு ஆனால் Tasmac 3 இருக்கு எங்க ஊருல. #BanTasmac

Sen ‏@Sen_Tamilan - #சாதி கலவரத்தில் பாதி கலவரத்துக்கு காரணம் #டாஸ்மாக்

உழவே தலை ‏@ThanjaiSabari - சாராயம், எங்கேயுமே கிடைக்கவில்லை என்றால், என்னைப் போன்ற மிதமான(!) குடிகாரர்கள், குடிப்பதையே சுலபமாக மறந்து விடுவோம் #BanTasmac

Gokila ‏@gokila_honey - மக்கள் நலனுக்காக குடியை தடை பண்ண கேரளா முதல்வர் எங்க, மக்களை கெடுத்து அந்த காசுல தன் பேரை விளம்பரம் பண்ணு நம்ம முதல்வர் எங்க #BanTasmac

Arunvijay ‏@Arunleaks - கல்யாணத்துக்கு தாலியும் குடுப்பாங்களாம். அத வித்து குடிக்க சரக்கு விப்பாங்களாம். தட் அவரே பாம் வெப்பாறாம் அவரே எடுப்பாறாம் moment #bantasmac

Satheesh Kumar ‏@saysatheesh - டாஸ்மாக்கை எல்லாம் மளிகை கடையா மாத்திட்டாலும் அதே வருமானம் வருமில்லே?? ஜஸ்ட் ஆஸ்கிங் #BanTASMAC

டெமுஜின் கப்பல் ‏@iKappal - டாஸ்மாக் பாய்ஸ் சார்பாக #BanTasmac டேக்கிற்கு ஆதரவளிக்கிறோம்.

சால்ட்&பெப்பர் தளபதி ‏@thalabathe - நா குடிச்சிருக்கேன்னு அவமானமா பீல் பண்ணவங்க எல்லாம் குட்ச்சிருக்கேண்டான்னு பெருமையா சொல்ல வச்சிட்டானுங்க #BanTasmac

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x