Published : 19 Jun 2018 04:34 PM
Last Updated : 19 Jun 2018 04:34 PM

நெட்டிசன் நோட்ஸ்: சேலம் - சென்னை பசுமைவழிச் சாலை திட்டம் - இருளும் எதிர்காலம்

சேலம் - சென்னை இடையே ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பில் எட்டு வழி பசுமை சாலை 277 கிமீ தொலைவுக்கு அமைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. இத்திட்டத்துக்கு விவசாய நிலங்களை கையகப்படுத்த விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து நெட்டிசன்கள் தங்கள் கருத்தைப் பதிவிட்டு வருகிறார்கள். அவற்றின் தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில் ...

டான் DON டான்

‏என்னைக்காவது இந்த நாட்ல விஐபிகளோட/அமைச்சரோட/ அரசியல்வாதிகளுக்கு சொந்தமான நிலம் இப்படி வளர்ச்சிங்கிற பேர்ல கையகப்படுத்தப்பட்டு அழுது பாத்திருக்கீங்களா??

சாமானியன அடிக்கிறதுதான் இங்க வளர்ச்சி :(

குஸ்தி வாத்தியார்

‏#SalemChennaiHighway அமையவிருக்கும் இடங்களில் மக்கள் பசுமாடுகளைக் கொண்டு #கோ_சாலைகளை அமைத்திருந்தால் இன்று #சமூகவிரோதி பட்டமும் கிடைத்திருக்காது தங்களது நிலங்களும் பாதுகாப்பாக இருந்திருக்கும்.

#மாட்டுக்கு இருக்கும் மதிப்பு #மனிதனுக்கு இல்லை இந்த ஆட்சியில்.

இளங்கோ

‏மன்சூர் அலிகான், பியூஸ் மானுஷ், வளர்மதி, சாதாரணக்கிழவி  மற்றும் போராடும் அனைவருமே கைது!

எத்தனை பேரை கைது செய்த பிறகு உங்க ஆத்திரம் தணியும், அடக்குமுறையாளர்களே?

நாங்க வேணும்னா எல்லாரும் மூட்டை முடிச்சோட கிளம்பி ஆப்பிரிக்கா இல்ல அலாஸ்கான்னு அகதியா போயிரவா?

Sudhan

‏கட்சியைப் பார்த்து கட்சி தலைவரைப் பார்த்து இனி வாக்களிப்பார்கள்? இவை அனைத்தும் நமக்கு நாமே செய்து கொண்ட தீமை! தீதும் நன்றும் பிற தர வாரா!!

Ashok K

‏#SalemToChennai இன்னும் எத்தனை உயிரை காவு வாங்கப் போகுதோ...

பார்த்திபன்

‏போற போக்க பாத்தா தமிழ்நாடு ங்கற பேர மாத்தி "சம்பந்தி நாடு" ன்னு வச்சாலும் வியப்பதற்கில்லை.. #SalemToChennai

S. P. Udayakumar

‏இருளும் எதிர்காலம்!

சேலம்-சென்னை எட்டு வழிச் சாலைக்கு எதிராகப் பேசினாலே கைது செய்வோம், சிறை வைப்போம் எனும் எடப்பாடி அரசின் பாசிச அணுகுமுறையை எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ள முடியாது.

Philip

‏#SalemToChennai அடுத்து மொத்த மக்களையும் சுட்டுக்கொல்ல திட்டமா? அடக்குமுறை, மனித உரிமைமீறல், அராஜகம் அனைத்தும் தலைவிரித்தாடுகிறது சேலத்தில்

Tharun Kumar

‏சாலைகள் வேண்டாம் சொல்லவில்லை பசுமைகளை அழித்து பசுமை சாலை வேண்டாம் தான் சொல்கிறோம். 

கா ர் த் தி         

‏ரோடு இல்லாத இடத்துக்கு முதல்ல ரோடு போடுங்க

இராவீ

‏இவனுக 8 வழி சாலைக்கு ஏன் இவ்வளவு அவசரப்படுறாங்க? 6 மணி நேரத்தை 3 மணி நேரம் ஆக்கி அப்படி என்ன கிடைக்கும்?

இரவி

‏ஓர் விவசாயியின் நிலத்தை அத்துமீறி ஆக்கிரமித்து, தடுத்து விவசாயியைக் கைது செய்வது தமிழகத்தில் மட்டுமே நடக்கும்....

Lenin Dakshinamurthi

‏பசுமையான மலைகளை அழித்து பசுமை சாலைகளாம் அடே நாற்கர சாலைகள் அமைக்கும் போது வெட்டப்பட்ட மரங்கள் எங்கே? கனிமவள வேட்டைக்கு புதிய பெயர் சேலம் சென்னை எட்டுவழிச் சாலை! எழுக போராடுக!

LR Jagadheesan

அவர்கள் அரசியல் கோமாளிகள் என உங்களை நீங்களே ஏமாற்றிக்கொள்ளுங்கள். அவர்களோ பெரும் கொள்ளைக்காரர்களாகவும் கொலைகாரர்களாகவும் உருவாகி வெகுகாலமாகிறது. யாரை வதைத்து, யாரை அழித்து, யாருக்காக இந்த ஆட்சி நடந்துகொண்டிருக்கிறது என்பதை அனைவராலும் கைவிடப்பட்டு தன் சொந்த நிலத்தில் அநாதரவாய் அரற்றும் அந்த தலைகாய்ந்த மூதாட்டியை விட வேறுயாரும் உங்களுக்கு உணர்த்தமுடியாது.

"வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும்

கோலொடு நின்றான் இரவு."

மு.கருணாநிதி உரை: ஆட்சிக்கோல் ஏந்தியிருப்பவர்கள் தமது குடிமக்களிடம் அதிகாரத்தைக் காட்டிப் பொருளைப் பறிப்பது, வேல் ஏந்திய கொள்ளைக்காரனின் மிரட்டலைப் போன்றது

Shivakumar Samu

‏இதுமாதிரி பிரச்சினைகளால் மக்கள் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காகதான் சென்னை-சேலம் அகலப்பாதை என்பது எத்ணீ பேர்க்குத் தெர்யூம்...?

''நீ பாட்டுக்கு உன் ரூட்ல போலாம்.

நாங்க பாட்டுக்கு ஓரமா தள்ளீனு போறம்''

அஜ்மல் அரசை

‏எஸ்.வி.சேகரை கைது செய்ய முடியாத தமிழக  காவல்துறையின் மகத்தான சாதனை யாதெனில் சேலம் எட்டு வழிச் சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடிய மூதாட்டியை கைது செய்ததுதான்.

தமிழன் மாரீஸ்

‏சேலம் -சென்னை 8 வழிச்சாலை!

தொடர்ந்து விவசாயிகள் கைது!

நேற்று மன்சூர்அலிகான்

இன்று பியூஷ்மானுஷ்,

நாளை???

எட்டு வழி பாதைக்காக அழிக்கும் வளங்கள், மறுபடியும் உருவாக 20 ஆண்டுகள் ஆகுமாம்..

பா. ஜீவ சுந்தரி

தூத்துக்குடியின் ஸ்னோலின் என்றாலும் சேலம் 8 வழி நாசகர சாலைத் திட்டத்தை எதிர்க்கும் வயது முதிர்ந்த மூதாட்டி என்றாலும் இந்த அரசுக்கு ஒன்றுதான். வாய் திறந்து பேசுபவர்கள், போராடுபவர்கள் அரசின் எதிரிகள்; சமூக விரோதிகள்

அனிதா ♡

‏சென்னை சேலம் பசுமை சாலையை எதிர்த்த பியூஸ் மானுஷ் போலீஸாரால் கைது!

அரசைப்பற்றி அவதூறாகப் பேசிய குருமூர்த்தி, பெண்களைத் தவறாகப் பேசிய சேகர்,

அரசியல் நாகரிகம் தெரியாத ராஜாவை கைது செய்யவில்லை!ஆனால் சமூக ஆர்வலர்களை கைது செய்வது, கருத்துரிமையை பறித்து சர்வாதிகார ஆட்சி நடத்துவது சமம் 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x