Published : 18 Jun 2018 09:31 AM
Last Updated : 18 Jun 2018 09:31 AM

கழிவுநீர்த் தொட்டியாகும் ஏரி!

பெ

ங்களூருவில் உள்ள பெள்ளந்தூர் ஏரி, நகரின் மிகப் பெரிய கழிவுநீர்த் தொட்டியாக மாறிவருகிறது என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயம் நியமித்திருக்கும் குழு அதிர்ச்சி தெரிவித்திருக்கிறது. ஏரியின் ஒரு மில்லி லிட்டர் நீர்கூடச் சுத்தமில்லை. அரசும் பிற நிறுவனங்களும் கடமை தவறிவிட்டன என்று அந்தக் குழு வெளியிட்டிருக்கும் அறிக்கை குற்றம்சாட்டுகிறது. பெள்ளந்தூர் ஏரி அடிக்கடி தீப்பிடித்து எரியும். ஜனவரியில், இந்த ஏரியில் பெரிய அளவில் தீ பிடித்தபோது, தீயை அணைக்க 5,000 ராணுவ வீரர்கள் பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஏரியில் கழிவுநீரும் குப்பையும் அதிக அளவில் கலப்பதால் மீத்தேன் வெடிப்பு ஏற்பட்டு தீப்பிடிப்பதாக ஆய்வாளர் கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

700 ஏக்கர் பரப்பளவில் விரிந்திருக்கும் இந்த ஏரியில் நாளொன்றுக்கு 48 கோடி லிட்டர் கழிவுகள் சேர்கின்றன. கட்டுமானக் கழிவுகள், மாநகராட்சி கொட்டும் திடக் கழிவு என்று பல்வேறு கழிவுகள் கொட்டப்படுவதால் ஹைட்ரோபைட், மைக்ரோபைட்டுகள் என்று அழைக்கப்படும் நீர்த்தாவரங்கள் ஏரியில் அதிகமாகப் பரவியிருக்கின்றன. இதனால், நீரைத் தேக்கிவைக்கும் திறனை பெள்ளந்தூர் ஏரி வேகமாக இழந்துவருவதாக அக்குழு கூறியிருக்கிறது. அருகில் உள்ள வரத்தூர் ஏரி இதைவிட மோசம் என்கிறது அக்குழு. மத்திய - மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியங்கள் இணைந்து ஒரு குழுவை உருவாக்கி, இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாண வேண்டும் என்று தெரிவித்திருக்கும் இக்குழு, ஏரிப் பகுதியில் கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்தவும், தவறிழைப்பவர்களுக்கு அபராதம் விதிக்கவும் பரிந்துரைத்திருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x