Last Updated : 23 Apr, 2018 04:46 PM

 

Published : 23 Apr 2018 04:46 PM
Last Updated : 23 Apr 2018 04:46 PM

உஷ்! கண்டுக்காதீங்க! தருணம்: சன் ரைசர்ஸ் தோல்வி எதனால்?

ஹைதராபாத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆதிக்க நிலையிலிருந்து தோல்வி நிலைக்குச் சென்றிருக்கும் காரணம் வில்லியம்சன், யூசுப் பத்தான், ஷாகிப் அல் ஹசன் ஆகியோரது பேட்டிங். ஆனாலும் கடைசியில் 4 ரன்களில் தோல்வி.

இந்த 4 ரன்கள் தோல்வி என்பது வெற்றியாக மாறியிருக்க வேண்டிய தருணத்தில் நடுவர் மிகப்பெரிய தவறிழைத்தார். அதை யாரும் பெரிதாகவும் எடுத்துக்கொள்ளவில்லை, சென்னை வெற்றியில் தீபக் சாஹரின் அருமையான தொடக்க ஓவர்கள், ராயுடு, ரெய்னா, தோனி அதிரடி எல்லாவற்றையும் காட்டிலும் நடுவரின் இந்தத் தவறுதான் சன் ரைசர்ஸ் வெற்றியைத் தடுத்த ஒரு பிரதான காரணமாகக் கூற முடியும்.

முதல் போட்டியிலேயே தோனிக்கு பிளம்ப் எல்.பியை நடுவர் தர மறுத்து மூன்றாவது நடுவரிடம் சென்று எல்.பி.தீர்ப்பு பெற வேண்டியதாயிற்று, பிறகு இன்னொரு போட்டியில் கேட்சைப் பிடித்து பவுண்டரி கோட்டின் மீது விழுந்து புரண்டார் வீரர் இதனை அவுட் என்று கூறிவிட்டு பிறகு 3வது நடுவரிடம் முறையீடு செய்தார் களநடுவர்.

குறிப்பாக தோனி தலைமை சென்னை சூப்பர் கிங்ஸ், கோலி தலைமை ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு, ரோஹித் தலைமை மும்பை இந்தியன்ஸ் போன்ற ஹெவி ஸ்பான்சர்கள், சூப்பர் ஸ்டார்கள் போட்டியாக அமையும் போது நடுவர்கள் சில வேளைகளில் சாதகமாக நடக்க முற்படுவது போன்ற தோற்றம் ஏற்படுகிறது.

நேற்று சன் ரைசர்ஸ் ஹைதராபாத் 22/3 என்றும் பிறகு 71/4 என்று ஆகி கேன் வில்லியம்சன், யூசுப் பத்தான் மீண்டெழுந்த போது ஜடேஜாவை லாங் ஆஃபில் ஒரு சிக்சர் விளாசினார், பிறகு கரண் ஷர்மா பந்து வீச்சில் ஒரே ஓவரில் மிட்விக்கெட், ஸ்கொயர்லெக், லாங் ஆஃப் ஆகிய இடங்களில் சிக்சர்களை அடித்தார் வில்லியம்சன்.

யூசுப் பத்தான் 12 பந்துகளில் 9 ரன்கள் எடுத்த போது கேன் வில்லியம்சனைப் பார்த்து உத்வேகம் பெற்று பிராவோவை 2 மிகப்பெரிய சிக்சர்களை விளாசினார். இதனையடுத்து 4 ஓவர்களில் 52 என்று சன் ரைசர்ஸ் வெற்றி ஆரத்துக்குள் வந்தது.

17வது ஓவரை ஷர்துல் தாக்குர் வீச முதல் பந்தில் வில்லியம்சன் 2 ரன்கள் சேர்த்தார்.

அடுத்த பந்து தாக்கூரினுடையது ஒரு இடுப்புக்கு மேல் வந்த புல்டாஸ். வில்லியம்சன் திடீரென இதனை எதிர்பார்க்காததால் 1 ரன் தான் வந்தது. பந்து க்ளீனாக நோ-பால் என்று தெரிந்தது, ஸ்கொயர் லெக் நடுபர் வினீத் குல்கர்னி என்ன நடந்ததென்று தெரியாவர் போல் வாளாவிருந்தார். வில்லியம்சன் உண்மையில் கடும் ஏமாற்றமடைந்தார். அது நோ-பால் தான், அடுத்த பந்து ஃப்ரீ ஹிட் கிடைத்திருக்க வேண்டும். ஆனால் ஒன்றுமே ஆகாதது போல் நடுவர்கள் பேசாமல் இருந்தனர்.

அடுத்த பந்தை யூசுப் பத்தான் தாக்கூரை சிக்ஸ் விளாசினார், இதுவும் புல்டாஸ்தான் ஆனால் இடுப்புக்குச் சற்றுதான் கீழ் வந்தது போல் தெரிந்தது, அது சிக்ஸ் ஆனது, இது ஃப்ரீ ஹிட்டாகியிருந்தாலும் சிக்ஸ்தான். ஆனால் ரன்னும் இல்லாமல் கூடுதல் பந்தும் இல்லாமல் போனது கடைசியில் ரஷீத் கான் 4 பந்துகளில் 17 ரன்கள் விளாசி திகைப்பூட்டினாலும் ஒரேயொரு கொடுக்காத நோ-பால் சன்ரைசர்ஸின் 4 ரன்கள் தோல்வியில் முடிந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x