Published : 06 Nov 2017 06:29 PM
Last Updated : 06 Nov 2017 06:29 PM

முட்டையை ஃபிரிட்ஜில் எங்கே வைக்க வேண்டும் தெரியுமா?

“ராத்திரி லேட்டானா என்ன.. ஃபிரிட்ஜ்ல முட்டை இருக்கு.. ஆம்லெட் போட்டு சாப்டுக்கலாம்” என அர்த்த ராத்திரியானாலும், அவசர காலையானாலும் சமயத்துக்கு கைகொடுப்பது முட்டை.

பசிக்கும், ருசிக்கும் துணையான முட்டை பிரிட்ஜில் இருப்பது நல்ல விஷயம்தான். ஆனால் முட்டை கெடாமல் இருப்பது அதைவிட முக்கியம் இல்லையா? நீங்கள் ஃபிரிட்ஜில் வைத்திருக்கும் முட்டை விரைவில் கெட்டுப் போவதற்கான சாத்தியம் அதிகம் என்கிறார் ஆராய்ச்சியாளர் லாட்கா லேக்.

இதென்ன புதுக்கதை? ஆம். பொதுவாக ஃபிரிட்ஜின் கதவுப் பகுதில் உள்ள பிளாஸ்டிக் ‘முட்டைக் கூடை’யில் தான் முட்டைகளை வைக்கிறோம். முட்டைக்கு சீரான சீதோஷ்ண நிலை அவசியம். ஃபிரிட்ஜின் கதவு திறந்து மூடும்போதெல்லாம் சீதோஷ்ண நிலை மாறும். அப்படி மாறும்போது, கதவருகில் வைத்திருக்கும் முட்டைகள் கெட்டுப் போக வாய்ப்புகள் அதிகமாம்.

அப்படியென்றால், முட்டைகளை ஃபிரிட்ஜில் வைக்கக் கூடாதா? தாராளமாக வைக்கலாம். ஆனால், கதவுப் பகுதியில் வைக்காமல் உள்ளே வைத்தால்தான், முட்டை சீக்கிரம் கெடாமல் இருக்கும் என்கிறார் லாட்கா லேக். ஆக, ஃபிரிட்ஜின் கதவருகே முட்டையை வைக்காமல், உள்ளே சீரான சீதோஷணத்தில் வைத்தால், முட்டை கெடாது.

‘முட்டை கெட்டுப் போறவரைக்கும் காத்திருக்கறதில்லை.. சட்டுபுட்டுன்னு ஆம்லெட்டோ, முட்டை தோசையோ, ஹாஃப் பாயிலோ செஞ்சு சாப்ட்ருவோம்’ என்று சொல்பவர்களுக்கு, முட்டையை எங்கே வைத்தாலும், எப்போது வைத்தாலும் கவலைப்பட வேண்டியதில்லை.. அதுதான் சீக்கிரம் வயிற்றுக்கு குடியேறப் போகிறதே!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x