Published : 31 Oct 2017 12:39 PM
Last Updated : 31 Oct 2017 12:39 PM

நெட்டிசன் நோட்ஸ்: சென்னையில் கனமழை- ஸ்டிக்கர் தயாரா?

வட கிழக்குப் பருவமழை தொடங்கியதை அடுத்து, தலைநகர் சென்னையிலும், கடலோர மாவட்டங்களிலும் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதுகுறித்து நெட்டிசன்கள் கவிதைகள் சொல்லியும், விழிப்புணர்வை விதைத்தும் வருகின்றனர். அவர்களின் கருத்து இன்றைய நெட்டிசன் நோட்ஸில்...

பிரதாபன் ஜெயராமன்

மழை வந்தால், ஒட்டி பிழைக்க வந்தவர்கள், பூர்வ குடிகள் , இடமற்றோர், பொருளாதாரமற்றோர் கட்டியிருக்கும் ஏரி மற்றும் ஆற்றோர குடிசைகளும் மட்டுமே ஞாபகம் வரும் நமக்கு, ஏன் அந்த ஆறுகளை அழித்து, நீர்வழிகளை நாசமாக்கி அமைக்கப்பட்ட தொழிற்சாலைகள், அரசு கட்டிடங்கள், தனியார் ஆக்கிரமிப்புகள் கண்ணுக்கு தெரிய மறுக்கிறது?

பொதுப்புத்தி இப்படித்தான் வளர்க்கப்படுகிறது! #மழை

சங்கர ராம பாரதி

பெருமழையின் சிறுதுளியும் பரவசம் - மழை.

Vairavadivel Jayasuriya

மழை இவ்வளவு பெய்தும், நம்மிடம் மழைநீர் சேகரிப்பு இல்லையே?

Shri Valson

முன்னெல்லாம் மழை வந்தா வெளிய பாத்து ரசிக்க, குடை கொண்டுவருவோம்.

இப்போ கீழ இருக்கிற முக்கியமான பொருளை தூக்கி பரண்ட்ல போடுறோம்.

Dhina Dhina

மழை பொழிய வேண்டும். எந்தவித உயிர் சேதமும் பொருட்சேதமும் இன்றி நல்ல மழை பொழிய வேண்டும் இறைவா!

Haran Prasanna

சென்னையில் வெளுத்து வாங்குகிறது மழை. வெதர்மேன் மிகச் சரியாகக் கணிக்கிறார். அவர் சொன்னதை வைத்து மாலை நான்கு மணிக்குக் கிளம்பி, மகன் ,மகளை நாலே முக்காலுக்கு அழைத்துக்கொண்டு வீட்டுக் கதவைத் திறக்கவும் மழை அடித்துப் பிளக்கிறது. வெதர்மேனுக்கு நாம் கடமைப்பட்டுள்ளோம்.

சென்னைக்கு மழை மிகவும் அவசியம். ஆனால் மழை நீரைச் சேமிக்க என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன என்று யாருக்கும் தெரியாது. அரசு என்ன செய்யும் என்று தெரியவில்லை. பார்க்கலாம்.

வெங்கடேஷ் ஆறுமுகம்

புகழ்மிக்க 2015 வெள்ளத்தில் சென்னையில் சிக்கிக் கொண்டவன் நான்.! அதன் பிறகு மதுரை வந்துவிட்டாலும். இந்த 2017-ம் ஆண்டிலும் இதே செய்திகளைப் படிக்கும் போது மனது கனக்கிறது.. இந்த இரண்டு ஆண்டுகளில் ஒரு மழை வெள்ளத்தை சந்திக்க சென்னையில் என்ன கட்டமைப்புகள் தான் செய்யப்பட்டன.?

ஒரு இயற்கை பேரிடர் வந்தபின்பும் கூட அது மீண்டும் வந்தால் எப்படி எதிர்கொள்வது என்பதெல்லாம் யாருக்கும் தெரியாதா? முறையான நீர் வடிகால் வசதி ,குப்பைகளை அடைக்காத சாக்கடை வசதி, நீர் தேங்காத சாலைகளை உடைத்து புதிய சாலைகள் போடும் முறை, சீரான மின்சாரம், இவையெல்லாம் செய்திருக்க முடியாதா?

கரிகாலன்

லேசான மழை. ஆடைகளை ஈரமாக்கி, சேறாக்கியது. ஆனாலும் இந்த பைக் பயணம் உறவில் கதகதப்பையும் காதலையும் தருவது.

Bala G

இந்த மழை குளிருக்கு கதககதப்பாக கம்பளி போர்வைக்குள் சுருண்டு படுத்திருக்கும் என் குழந்தைகளை பார்க்கிறேன்.. ஒதுங்கிக்கொள்ள கூடுகளற்ற குழந்தைகளின் முகம் நினைவில் வந்து துன்புறுத்துகிறது...

Udhai Kumar

சென்னையில் மழை தற்போது வலுப்பெற்றது. பல நாட்களுக்கு முன்னரே மழை பற்றிய எச்சரிக்கை விடுத்தும் இந்த அரசு எந்த முன்னேற்பாட்டையும் செய்யாமல் போய்விட்டது. இன்னும் ரெண்டு, மூணு நாள் சென்னையில் வாகனங்களில் பயணிப்போர்களின் நிலைமை பரிதாபம்தான்.

தொலைநோக்கில் செய்யாத எந்த திட்டமும் மக்களை வெகுவாக பாதிக்கின்றது. வடிநீர் கால்வாய்கள் தூர்ந்து போய், இந்த சாதாரண மழைக்கே சாலை முழுவதும் வெள்ளம் ஓடிக்கொண்டிருக்கின்றது.

Elamathi Sai Ram

சரியான நேரத்துல தொடங்கி இடியும், மின்னலும், மேகவெடிப்புமா வடகிழக்கு பருவமழை தீபாவளி கொண்டாடுது :)

என்ன ஆனாலும் மழை நமக்கு தரும் நம்பிக்கையை அரசுகள் மட்டுமல்ல.. வேறு யாராலும் தரமுடியாது..

ஒரு அஞ்சு மாசத்தைக்கு முந்தைய தமிழ்நாடு தண்ணி இல்லாம கதறுனத ஒருநாள்ல மறக்கடிச்சிடுச்சி இந்த மாமழை. ஒவ்வொருவருள்ளும் நிரம்பித் தளும்பக்கூடியது மழை தரும் நம்பிக்கை.

Hansa Hansa

ஸ்டிக்கர் எல்லாம் தயாரா?

மழை வெளுத்து வாங்குதே?

Senthil Jagannathan

தொடர்ந்து பெய்யும் ஒரு மணி நேர மழைக்கே தாங்காத தார்சாலைகளும் அதனோடு உண்டாகும் டிராஃபிக்கும் தரும் துயரம் சொல்லிமாளாது.

Shan Karuppusamy

சென்னை ஒரு காலத்தில் பாம்புகள் நிறைந்த பகுதியாக இருந்திருக்க வேண்டும். அதன் நில அமைப்பு அப்படி. அவற்றின் பெரும்பாலான வாழ்விடங்களை நாம் பறித்துக் கொண்டுவிட்டோம். இப்போது மழை தொடங்கிவிட்டதால் பாம்புகள் ஏற்கனவே சுருங்கிவிட்ட தங்கள் இருப்பிடத்தை விட்டு வெளியேறவேண்டிய கட்டாயம் நேரும். பாம்புகளைக் கண்டால் அடிக்கவோ கொல்லவோ செய்யாதீர்கள்.

கீழே கண்ட எண்களுக்கு அழையுங்கள். அவர்கள் வந்து பாதுகாப்பாக அவற்றைப் பிடித்து அவற்றின் வாழ்விடங்களுக்குக் கொண்டு செல்வார்கள். 24 மணி நேரமும் செயல்படும் தன்னார்வலர்கள் 20 நிமிடங்களில் வருவதாக வாக்களிக்கிறார்கள்.

வனத்துறை - 044-22200335

ஆர்வலர்கள் - 9945070909, 7845018969

Raju Mariappan

சென்னையில் மழை பெய்கிறது அவ்வுளவு தான். பருவ மழை தான் இது. சென்னையில் உள்ள தங்கள் பிள்ளைகளுக்கு சொந்தங்களுக்கு என்னவாயிற்று என்று ஊரில் இருப்பவர்கள் பதறவேண்டாம். அரசாங்கத்தின் மெத்தனத்தால் வழக்கம் போல் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியிருக்கிறது. நேற்று நள்ளிரவு முதல் லேசான மழையே பெய்து வருகிறது. மக்கள் தங்கள் பணிகளை வழக்கம்போல் செய்கிறார்கள். கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது, அவ்வளவே. பூமி குளிர இன்னும் மழை தேவை...

Meena Somu

காலையில் ஏகாந்தமா நனைந்த மழை, இரவில் பயமுறுத்துதே ! இதுதான் வாழ்க்கையா ?

ரஹீம் கஸாலி @rahimgazali

மழை பெய்தால் தண்ணீர் தேங்கத்தான் செய்யும் -அமைச்சர் ஜெயக்குமார்

அமைச்சர்கள் வீட்டின் முன்னாடியெல்லாம் தண்ணீர் தேங்க மாட்டேங்குதே? எப்படி?!

Suresh Adithya

மழை வருவதை தடுக்க வீட்டில் உள்ள டேபிள் பேன்களை வானத்தை நோக்கி ஆன் செய்து வையுங்கள்.. அந்த காற்றினால் மேகம் கலைந்து மழை வராது..

#செல்லூர்ராஜு @madrascentral

மழைச்சாரல் @Raindrops2016

உன்னைப் போலவே இந்த மழை.. பல சமயம் ஏக்கத்திலும் சில சமயம் போதும் போதுமென மூச்சு முட்டவும்...

சண்டியர் @BoopatyMurugesh

தண்ணி போக வேண்டிய ஆத்துல மணல் லாரிய ஓட விட்டான் மனுசன்.

லாரி போக வேண்டிய ரோட்ல மழை தண்ணிய ஓட விடுது இயற்கை..

நீ பற்றவைத்த நெருப்பொன்று..

இரா.சரவணன் @erasaravanan

மரத்தின் உள்பக்கமாக காகம் கூடு கட்டினால் பெருமழை பெய்யும். வெளிப்பக்கமாக கட்டினால் அதிக மழை பெய்யாது.

நம் முன்னோரின் மழைக்கணிப்பு மகத்துவம்!

Sairam @SairSairam

வெளியே மழை நின்ற பின்பும் உள்ளே மழை... சென்னை மாநகர பேருந்துகள்.

ஏலியன் @Gopi007twitz

அய் மழை!! ஃபீலிங் ஹேப்பினு ஸ்டேட்டஸ் போட்டவங்களை எல்லாம்,

இனி, அய்யயோ மழை- பீலிங் சேடுன்னு ஸ்டேட்டஸ் போட வைச்சிடும்போல இந்த மழை...

அஸ்வத்தாமன் சேரன் @jairamguttuvan

மண்ணைக் குளிர வைக்கிற மழை

மனசையும் குளிர வைக்குது.

D S Gauthaman

இங்க ஒரு பாதாளச் சாக்கடை திறப்பு இருக்கா, அடுத்த திறப்பு பதிமூணு ஸ்டெப்ல வருதா... அப்போ அடுத்த பதிமூணு ஸ்டெப்ல அடுத்த திறப்பு... மழைநீர் சூழ் சென்னை சாலையில் இப்படித்தான் அடிக்கணக்கோட அடி மேல் அடி வச்சு நடக்க வேண்டி இருக்கு! இதுல பன்னீர் தூவும் கார், பைக் வேற!

#சென்னையில் மழை நாள்!

Mugil Siva

மாநகரத்தை மழை புரட்டி எடுக்க ஆரம்பித்துவிட்டது. மனிதக் கூட்டத்தின் பாவங்களை மன்னித்து பெய்யெனப் பெய்யும் மழைக்கு நன்றி. பெருமழைக் காலத்தின் ஆரம்பத்திலேயே சாலைகள் தலைவிரி கோலம் பூண்டுவிட்டன. இனி வரும் நாள்களை நினைத்தால் வயிற்றுக்கும் தொண்டைக்கும் நடுவே தார் உருண்டை ஒன்று உருளுகிறது.

Thamizhnathy Nathy

மழையைத் தேடியே நான் வந்தேன். மழையின் தடங்களையே தொடர்ந்தேன்.சென்னையில் மற்றுமோர் மழைக்காலம்!

தேநீர்க் குவளை, எதிர் வீட்டு தைல மரக்கிளைகளில் சொட்டும் - மின்கம்பியில் தத்தம் முறை பிசகாது நகரும் மழைத்துளிகள், தெருவில் சுழித்தோடும் வெள்ளம், குடை மனிதர்கள், நீரிசை... வாழ்தல் இனிது!

Shanmugam

ஒரே ஒரு இரவு பெய்த மழையிலேயே சென்னையின் சாலைகள் முடங்கிவிட்டன. இன்னும் 45 நாட்களைக் கடக்க வேண்டும். ஒரே ஒரு விண்ணப்பம்.

நீங்க ஒண்ணும் செய்யாட்டியும் பரவாயில்லை... மழை நீர் வடிகால்களுக்கு இத்தனை கோடி செலவு செஞ்சோம்னு அறிக்கை விட்டு கடுப்புகளைக் கிளப்பாதீங்க.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x