Published : 30 May 2016 10:15 AM
Last Updated : 30 May 2016 10:15 AM

பரிந்துரை 7 - கவனிக்க வேண்டிய புத்தகங்கள்

இடக்கை

எஸ்.ராமகிருஷ்ணன்

உயிர்மை பதிப்பகம் (044-24993448)

விலை: ரூ. 375

பேரரசர்களின் வீழ்ச்சிகளுக்கு ஊடே எளிய மனிதர்களுக்கு நேரும் பேரவலத்தைப் பதிவுசெய்திருக்கும் நாவல். அடித்தட்டு மக்கள் மீது திட்டமிட்டு நிகழ்த்தப்படும் ஒடுக்குமுறை பற்றிப் பேசுகிறது. சாமர் எனும் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த நாயகனின் வாழ்க்கைப் போராட்டத்தைப் பதிவுசெய்திருக்கிறார் எஸ்.ராமகிருஷ்ணன்.

*********

நறுமணம் சிறுகதைத் தொகுப்பு

இமையம்

க்ரியா பதிப்பகம் (9789870307)

விலை: ரூ. 195

இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள பெரும்பாலான கதைகள் பெண்களின் வாழ்க்கையை மையப்படுத்துகின்றன. புதிய தொழில்நுட்பங்கள் உறவுகளையும் மதிப்பீடுகளையும் தகர்க்கும் விதம் பற்றியும், இதில் பாதிக்கப்படுவது பெண்கள்தான் என்பதையும் சொல்லும் கதைகள் இவை.

*********

அறிவியலில் பெண்கள்

ஒரு சமூக - வரலாற்றுப் பார்வை

கு.வி.கிருஷ்ணமூர்த்தி

அடையாளம் பதிப்பகம் (9443768004)

விலை: ரூ. 280

உலகின் வெவ்வேறு பகுதிகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 250-க்கும் மேற்பட்ட பெண் அறிவியல் அறிஞர்கள் எதிர்கொண்ட பிரச்சினைகளைப் பற்றிப் பேசுகிறது இந்நூல். வீடுகளிலும் நிறுவனங்களிலும் உள்ள பல்வேறு பணிச் சுமைகளை அவர்கள் கையாண்ட விதம் பற்றியும் பேசுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x