Published : 25 May 2016 10:44 AM
Last Updated : 25 May 2016 10:44 AM

பரிந்துரை 2 - கவனிக்க வேண்டிய புத்தகங்கள்

ஏழு நதிகளின் நாடு

சஞ்சீவ் சன்யால்

தமிழில்: சிவ.முருகேசன்

விலை: ரூ.315

சந்தியா பதிப்பகம்

இந்திய இதிகாசங்கள், நில அமைப்பு, வணிகக் கப்பல்களின் தோற்றம், பயணங்கள் தொடங்கி, ஐரோப்பியர்களின் வருகைக்குப் பின்னர் இந்தியாவில் நிகழ்ந்த மாற்றங்கள் வரையிலான பல்வேறு விஷயங்கள் குறித்த சுவாரஸ்யமான தகவல்களின் தொகுப்பு இந்நூல். இந்தியாவைப் பற்றிய கருத்தாடல்களின் உண்மைத் தன்மை பற்றியும் இந்நூல் பேசுகிறது.

***

கடவுள் உருவான கதை

டாக்டர் அஜய் கன்ஸால்

தமிழில்: கி.ரமேஷ்

விலை: ரூ. 170

பாரதி புத்தகாலயம்

மனித இன வரலாறு பற்றிய ஆராய்ச்சி, கடவுள், மதங்களின் உருவாக்கம் பற்றிய வரலாற்று உண்மைகளை இணைக்கும் வகையில், மருத்துவரும், உடற்கூறு இயல் நிபுணருமான பேராசிரியர் அஜய் கன்சால் எழுதிய ஆங்கில நூலின் தமிழாக்கம். மனித இனம் எதிர்கொண்ட சவால்கள், அதில் பெற்ற வெற்றிகள் ஆகியவற்றை இந்நூல் பட்டியலிடுகிறது.

***

அருந்ததியர்களாகிய நாங்கள்..

ம.மதிவண்ணன்

விலை: ரூ.30

கருப்புப் பிரதிகள்

சமூகத்தால் தொடர்ந்து புறக்கணிப்புகளுக்கு உள்ளாகும் அருந்ததிய மக்களின் இருப்பைப் பற்றிப் பேசும் நூல் இது. சமூக நீதி என்கிற பிரதிநிதித்துவ ஜனநாயகக் கருத்தாக்கங்களின் அரசியல்களால் கண்டுகொள்ளப்படாமல் இருக்கும் அருந்ததிய மக்களின் உரிமைக் குரல்களை, உள்ஒதுக்கீட்டுக்காக அமைக்கப்பட்ட நீதிபதி ஜனார்த்தனம் குழுவின் முன் ஒரு சாட்சியமாக இந்நூல் முன்வைக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x