Last Updated : 17 Nov, 2016 11:02 AM

 

Published : 17 Nov 2016 11:02 AM
Last Updated : 17 Nov 2016 11:02 AM

தேநீர் கவிதை: அலைகள் மாறுவதில்லை!

காகிதம்

பணம் ஆனது...

பணம் மீண்டும்

காகிதமாகிவிட்டது!

பணத்தை

என்ன செய்வதென்ற

கவலை -

அதிபர்களுக்கும்

அதிகாரங்களுக்கும்!

பணத்திற்கு

என்ன செய்வதென்ற

கவலை -

அப்பாவிகளுக்கும்

அபலைகளுக்கும்!

கொள்ளை நோட்டுகளும்

கள்ள நோட்டுகளும்

குளிர் சாதன அறைகளில்

கூடிப்பேசுகின்றன...

பாவம் -

நல்ல நோட்டுகள்தான்

அலைகின்றன

நடுத்தெருவில்!

வங்கி வங்கியாய்

ஏறி இறங்கிக்கொண்டிருக்கும்

ஏழை எளியவர்களின்

பயத்தையும் பதற்றத்தையும்

பார்த்துப் பார்த்துத்

தொலைக்காட்சியில்

ரசிக்கின்றன

மாட மாளிகைகள்!

அதில் -

பணம்

பிணமாகும் முன்பே

பிழைத்துக் கொண்ட

முதலைகள்!

நோட்டுகள் செல்லாதென்று

அறிவித்த இந்தியா

ஓட்டுகளும் செல்லாதென்று

உறுமிடும் நாள்வருமோ?

அலைவரிசை மாறலாம்...

அலைகள் மாறுவதில்லை!

காந்தியின்

கண்ணெதிரிலேயே

கலகம் செய்தவர்கள்

காகிதத் தாள்களில்

கவனித்துக் கொண்டிருக்கும்

அவரது

கண்ணாடியைப் பற்றியா

கவலைப்படப் போகிறார்கள்?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x