Published : 01 Jun 2017 09:46 AM
Last Updated : 01 Jun 2017 09:46 AM

இணைய களம்: தியாகராய நகர் விதிமீறல் கட்டிடங்கள் ஒரு ‘டைம் பாம்’

ஏழுமலை வெங்கடேசன்

என்றைக்காவது பெரிய அளவில் ஒரு அசம்பாவிதம் ஏற்பட்டால், அன்று இந்த அரசாங்கம் ஆவேசம் தலைக்கு ஏறி எமகாதகக் கட்டிடங்களை இடித்துத் தரைமட்டமாக்கப்போகிறது. அதுவரை வேடிக்கைதான் என்று மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பதிவைப் போட்டோம். ரங்கநாதன் தெரு வெடிக்கக் காத்திருக்கும் ‘டைம் பாம்’ என்றும் சொன்னோம். அதன் பிறகு இரண்டு மூன்று முறை மக்கள் நடமாட்டம் இல்லாத நேரங்களில் தீ விபத்து நடந்து எச்சரிக்கை மணி அடித்துவிட்டது. யாரும் திருந்தியதுபோல் தெரியவில்லை.

ஆழி செந்தில்நாதன்

உங்களில் சிலர் இந்தச் செய்தியைச் சாதாரணமாகக் கடந்துசென்றிருக்கலாம். விளையாட்டு நிகழ்ச்சி ஒளிபரப்பு ‘ஸ்டார் ஸ்போர்ட்ஸ்’ தொலைக்காட்சி இப்போது தமிழில் ஒரு புதிய அலைவரிசையைத் தொடங்கியிருக்கிறது என்பதுதான் அந்த சேதி.

ஏற்கனவே டிஸ்கவரி சேனல், நேஷனல் ஜியோகிரபி உள்ளிட்ட பல சேனல்கள் தமிழில் வெளிவந்து கொண்டிருப்பதால், இந்தச் செய்தி நமக்கு பெரிதும் ஆச்சரியமாக இருந்திருக்காது. ஆனால் மேற்கு வங்கம், மகாராஷ்டிரம், கர்நாடகாவில் இந்தச் செய்தி சமூக ஊடங்களில் குறிப்பாக பேசப்பட்டிருக்கிறது. ‘தமிழ்நாட்டைப் பார்!’ என்கிறார்கள் அம்மாநிலத்தவர்கள்.

“தமிழ்நாடு இந்திக்கு அடிமையாகவில்லை என்பதால் அத்தனை சேனல்காரர்களும் தமிழ்நாட்டில் தமிழில் கடைவிரிக்கிறார்கள். நாம் இந்திக்கு அடிமைப்பட்டதால் நமது மொழிகளில் இதுபோன்ற சர்வதேச சேனல்கள் வருவதில்லை” இதுதான் அவர்களின் உரையாடலின் சாரம்சம். தமிழ்நாட்டுக்குத் தமிழ். ஆனால், மேற்கு வங்கம், மகாராஷ்ட்டிரம், கர்நாடகத்துக்கு என்றால் இந்தியாம்!

இதனால்தான் இந்த மாநிலங்களில் இப்போது மொழிப் பிரச்சினை வெடிக்கிறது. இங்கே என்னடாவென்றால் சரவணபவனில் தோசை வாங்க இந்தி கற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்லிக்கொண்டுத் திரிகிறார்கள் சிலர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x